திருக்கை வழக்கம்
கம்பர் பாடியதாகக் கூறப்படும் “ஏர் எழுபது” நூலைப் பற்றிக் குறிப்பிடும் இந்த நூலைப் பாடியவர் இன்னார் என்று தெரியவில்லை. ஏர் பிடித்தவர் ஏற்றம் – என்னும் பெயரில் கம்பநாடரின் ஏர் எழுபதும் புலியூர்க் கேசிகன் உரையும் என்னும் குறிப்போடு தேனருவிப் பதிப்பகம், தியாகராய நகரம், சென்னை 17 – வெளியீடாக, நவம்பர் 1957 – ல் வெளிவந்துள்ள நூலிலிருந்து பதிவேற்றப்பட்டுள்ளது.
தொண்டரில் சிறந்தோர் திருத்தொண்டர் 63 நாயன்மார்கள். இவர்களின் வரலாற்றைக் கூறும் நூல் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம். கை என்னும் சொல் ஒழுக்கத்தைக் குறிக்கும். திருக்கை என்பது சிறந்த ஒழுக்கம். சிவனடியாரின் சிறந்த ஒழுக்கத்தை இந்த நூல் போற்றிப் புகழ்கிறது. எனவே இந்த நூலின் பெயர் திருக்கை வழக்கம் எனச் சூட்டப்பட்டுள்ளது.
1-5
தொகுகங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி
மங்கை பிரியாமல் வாழுங்கை – திங்களணி 1
எம்பிரான் எம்பெருமான் இந்திரா திபர்க்கரிய
தம்பிரா னுக்குரைத்த சந்தனக்கை – அம்பொன் 2
வளைவாரி வையகமும் வானகமும் போற்ற
முளைவாரி வந்த முழுக்கை – கிளைவாழக் 3
கச்சித் தலத்தானைக் கல்லால் எறியமறந்
தெச்சில் தயிர்ச்சோ(று) எறியுங்கை – பச்சைமிகு 4
தேமா வடுக்கமரிற் சிந்திற்றென் றேகழுத்தை
யாமா வெனவே அரியுங்கை – வாமமறை 5
6-10
தொகுஓதுபுகழ் நாயனுடன் ஊரன் புறமென்றே
மோதுதடி கொண்டு முடுக்குங்கை – தீதகல 6
அஞ்செழுத்தே யொன்றாகி அப்பரெனத் தோன்றியரண்
செஞ்சரணத் தேபூசை செய்யுங்கை – வஞ்சியர்பால் 7
தூதரனைத் தான்விடுத்தசுந்தரனைக் காணாமல்
பேதமறத் தன்வயிறு பீறுங்கை – கோதகன்ற 8
சேர்ந்த மணவாசல் சிவனடியார்க் காமகடன்
கூந்தலரிந் தேமகிழ்ந்தே கொடுக்குங்கை – ஏந்தரிய 9
வட்டால் உறுபொருளால் வந்ததொண்டர்க் காமூர்க்கர்
தட்டா தமுதளிக்கும் தங்கக்கை – எட்டாது 10
11-15
தொகுபோக்கு வரவற்ற பூரணனை நிந்திப்பார்
நாக்கை யரிந்துபுகழ் நாட்டுங்கை – ஆக்கையுறு 11
தாயிலார் தந்தையிலார் தம்மைமனத் துள்வைத்து
வாயிலார் பூசிக்கும் வாகுளகை – ஆய 12
வினையடு வாராகி விறல்கொள் பொருளை
முனையடுவார் நல்கிய முன்கை – வினையகல 13
அன்றுவரும் மாதவருக்(கு) ஆக்கியமாங் கனிகேட்க
ஒன்றவரு வித்தளித்தே ஓங்குங்கை – நின் றதுலாக் 14
கோலாலக் கோவணத்துக் கள்வர்தங் கோண்முழுதும்
ஆலாவ ளந்தறிந்த மாண்புளகை – யேலவார் 15
16-20
தொகுகூந்தலாள் தன்னைக் குலமறையோர்க் கீந்தொக்கல்
ஏந்துவா ளாலேவிண் ஏற்றுங்கை – சாந்தமுற 16
ஓதுபரனை உணர்த்துஞ் சிவாகமங்கள்
வேத புராணங்கள் விரிக்குங்கை – தீதில் 17
அருமறையைச் செந்தமிழால் அப்ப ரெனவந்து
திருமுறைக ளாச்சேர்க்குஞ் செங்கை – பெருமையுடன் 18
ஏதமில் வேதத்தை எடுத்தே சிவாலயத்துள்
ஓதுவா ராய்வந்தே ஓதுங்கை – காதலுடன் 19
வேதமொரு நான்கினையும் மிக்கதமிழ் நாலடியால்
ஓதியுரைத் தேயுலகில் ஒளிருங்கை – போதமுற 20
21-25
தொகுவேள்வியோ ரைந்தோடு வேளாளத் தோமமுமே
ஆள்வினை யாலெடுத் தாளுங்கை – நீணிலத்துள் 21
ஆன்படு நெய்விட் டளவிலா வாகுதியால்
வான்படச் சைவத்தீ வளர்க்குங்கை – மேம்படவே 22
கல்லார்கள் என்னாமற் கற்றோர்கள் என்னாமல்
எல்லாரை யுங்காத்தீ டேற்றுங்கை – வல்லமைசேர் 23
மைம்மா முகிலுலகை வாழ்விக்கு மேன்மைபோல்
கைம்மா றிலாதளிக்கும் கற்பகக்கை – சும்மையார் 24
ஊருணி நீர்போல் உலகத் தவர்க்கெல்லாம்
பேரறிவா லீயும் பிரதாபக்கை –பாரில் 25
26-30
தொகுஉடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே
கொடுக்க விசைந்த குளிர்க்கை – யிடுக்கணினான் 26
மாமறையோர் மன்னர் வருவினைஞர் சங்கரர்க்குந்
தாமலையா மற்கொடுத்துத் தாங்குங்கை – மாகளத்து 27
ஏற்கவந்த ஆதுலர்க்(கு) இல்லையென் னாதுநெல்லை
கார்க்கையினான் முக்கையிட்ட கற்பகக்கை – தீர்க்கமுடன் 28
செம்பொன் விளைகளத்தூர் செந்நெல் விளைந்ததனை
நம்பிமறை யோர்க்களித்த நாணயக்கை – அம்பொற் 29
பார்பூட்டு மன்னர் பரிகரிபூட் டக்கதிரோன்
தேர்பூட்ட ஏர்பூட்டும் செம்பொற்கை – வீரமதன் 30
31-35
தொகுஐங்கோல் தொடுக்க அணைகோல் எடுக்கவுழும்
பைங்கொல் பிடிக்கும் பதுமக்கை – இங்கிதமாம் 31
சீர்படைத்த பூபாலர் செங்கோல் பிடிப்பதற்குப்
பேர்படைத்த மேழி பிடிக்குங்கை –கார்படைத்த 32
மிஞ்சுமதி கீர்த்தியைப்போன் மேதினியெல் லாந்தழைக்கச்
செஞ்சாலி நாற்றைத் தெளிக்குங்கை – எஞ்சாமல் 33
வெள்ளைக் களைகளைந்து வீறும் பயிர்தழைக்க
கள்ளக் களைகளைந்த கற்பகக்கை – வள்ளுறையும் 34
விற்போர் மதகரிப்போர் வெம்பரிப்போர் வெற்றிப்போர்
நெற்போர் முதற்போர் நெரித்திடுங்கை – பற்பலவாம் 35
36-40
தொகுகாணி உழுதுண்டு கழிபொருளெல் லாங்கொண்டு
வாணிபங்கள் செய்தங்கு மாற்றுங்கை – மாணிவர்ந்த 36
ஐந்திணையின் பொருள்யாவும் அறத்தாலே தாம்தேடித்
தந்திணையில் வந்தணையத் தாங்குங்கை – முந்திப் 37
பிறர்பொருளுந் தம்பொருள்போற் பேணியேமூன் றாமெனவே
அறவளவை யாலளக்கும் அங்கை – திறமுடனே 38
ஊர்காக்கு மரக்சு(கு)உறுதியுழவாம் அதற்காய்
ஆள்காப்பே காப்பாக ஆளுங்கை – வான்சுவைபோல் 39
எண்ணை எழுத்தை இசையை இலக்கணத்தை
வண்மைபெற உண்டாக்கும் வாகுளகை – நுண்மையதாய் 40
41-45
தொகுமண்ணிற் கடலின் மலையிற் பெரியதென
எண்ணியெழு திக்கொண்டுத்த ஏற்றக்கை – திண்ணமதாய் 41
மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தருமந் தழைக்குங்கை – ஈனமிலா 42
தொடையில் எழுஞ்சிலந்தித் தோற்றுவிக்கப் பட்டின்
புடவை கிழித்த பெருங்கை – துடவைதனில் 43
ஏரெழுப தோதியாங் கேற்றுங் களரியிலே
காரி விடநாகம் கடிக்குங்கை – பாரதனில் 44
நாவிற் புகழ்கம்ப நாடற் கடிமையென்றே
மாவைக் கரைத்துமுன்னே வைக்குங்கை – ஆவலுடன் 45
46-50
தொகுசங்கையிட்டுத் தள்ளாமல் தன்சோற்றை வந்தவற்குப்
பங்கையிட் டிரட்சித்த பங்கயக்கை – பொங்கமுடன் 46
பொன்னா லமுதும் பொறிக்கறியுந் தான்கொணர்ந்து
நன்னா வலர்க்களித்த நாணயக்கை – பன்னரிய 47
வையகமெங் குந்தேடி வந்ததமி ழோன்புகழச்
செய்யமுடி யைக்கொணுத்த செம்பொற்கை – துய்யபுகழ் 48
அன்றீந்த நாகெழுப தானவெரு மைத்திறத்தைக்
கன்றோடு நல்குங் கடகக்கை – வென்றிதரும் 49
ஓரானை நூறா யிரக்கலநெல் லோர்கவிக்குச்
சீராக நல்குந் தியாகக்கை – நேரா 50
51-55
தொகுஎறும்புக்கும் ஆஸ்ப்பதந்தான் இல்லையென்ற மட்டில்
திறம்புக்க யானைதருஞ் செங்கை – யரும்புதனில் 51
எண்ணா யிரமுனிவர்க்(கு) ஏற்றபடி அப்படியே
பண்ணா கக்கொடுக்கும் பராக்கிரமக்கை –விண்ணாடர் 52
மூக்கிற் புகைபுரிந்த மூதாவின் வாயிடத்து
நீக்கியபை நாக்கதனில் நீட்டுங்கை – ஊக்கமுடன் 53
பாவல னெச்சில் படுமாங் கனியெடுத்து
ஆவலுடன் நன்றாய் அருந்துங்கை – தாவரிய 54
வண்டமிழோன் தானுதைத்த வாகுளகா லுக்குப்பொன்
வெண்டாயமிட் டேவணங்கும் வெற்றிக்கை – புண்டரிகக் 55
56-60
தொகுகையாற் புலவன் கனகமுடி மேற்குட்டச்
செய்யாழி பண்ணியிட்ட தீரக்கை – பையவே 56
மிக்கபுல வனுக்காக வேசிமனை மட்டாகத்
தக்கசிவி கைக்கணை தாங்குங்கை – ஒக்குமென 57
ஏதமற்ற கீர்த்தியைக்கொண் டேட்டகத்தி லேயடிமைச்
சாதனமிட் டேகொடுத்த தங்கக்கை - மேதினியிற் 58
சூலி முதுகிற் சுடச்சுடவப் போதுசமை
பாலடிசில் தன்னைப் படைக்குங்கை – சாலவே 59
நாணந் தராமல் நடுங்காமல் கூசாமல்
பாணன் பிணத்தைப் பரிக்குங்கை – காணவே 60
61-65
தொகுதண்டமிழோன் தன்மனத்திற் சந்தேகந் தீரக்கூழ்
உண்டவயிற் றைப்பீறி யூற்றுங்கை – கண்டளவில் 61
வன்னி யிடைமூழ்கி வானோர் பழிகழுவிக்
கன்னிதனை யேமணந்த காட்சிக்கை – துன்னுமொரு 62
பேருலகை யெல்லாம் பிழைப்பிக்கும் ஓர்கொழுவின்
கூரிலொரு வன்கழுத்தைக் குத்துங்கை – பாரறிய 63
திருப்பருத்திக் குன்றிற் சிவனால யங்கள்பல
விருப்புடனே கட்டி வீறுங்கை – பருப்பதம்போல் 64
அட்டதிக்கும் எண்கீர்த்தி ஆயிரத்தெட் டானைதனை
வெட்டிப் பரணிகொண்ட வீரக்கை – திட்டமுடன் 65
66-70
தொகுகூர்த்த புகழண்ட கோளமட் டும்படர
நாற்றிக்கு மேருவினி நாட்டுங்கை – ஆர்த்தபுகழ் 66
மேழிக் கொடிசிங்க வெற்றிக் கொடிகுயிலின்
வாழிக் கொடியே மருவுங்கை – நீளுலகில் 67
சாற்றுமொட்டக் கூத்தன் சரசகவி சொல்லப்பால்
ஆற்றுநீர் கொணர்ந்த ஆண்மைக்கை – நேர்த்திபெற 68
விளைபயி ரைப்பார்த்து விரைக்கால் புலத்தை
வளைய மதிலிட்டு வருங்கை – தளையவரும் 69
நீலி தனக்கஞ்சி நின்றவணி கேசனுக்காக்
கோலி யபயங் கொடுக்குங்கை – மேலச்சம் 70
71-75
தொகுவீறுபெரும் பறையன் வீயாம லோர்கலத்தில்
சோறு பிசைந்துண்ட சுடர்மணிக்கை – பேறுறும் 71
பேர்காக்க இந்திரற்காப் பேசுபிணை என்றிறைமுன்
கார்காக்கும் ஒப்பில் கமலக்கை – தீர்வில் 72
மனக்கவலை யுற்றவணி கன்முன் னேனின்று
தனைக்கா வெனக்கேட்ட தற்கை – வனக்குன்றின் 73
மங்கையொரு பாகற்கும் மன்னவர்க்கும் மாதவர்க்கும்
துங்கமணி முடியைச் சூட்டுங்கை – அங்கன் 74
தலாபாரந் தாங்கும் தனியரசும் பொன்னும்
துலாபாரந் தட்டினில் தூக்குங்கை – இலாபமுறும் 75
76-80
தொகுபண்டுமுடி நாவிதனால் பற்றற்பாற் றன்றென்றே
கொண்டைகட்டிக் கொண்டாளுங் கோமளக்கை – பண்டையதாம் 76
எட்டாருந் தொண்டைநாட்(டு) எழுபத்தொன் பானாகும்
நாட்டாரென் றேபுகழை நாட்டுங்கை – வாட்டமிலா 77
ஆர்த்த குடிமக்கள் அறுமூவர்க் காம்வழக்கைத்
தீர்த்தெழுதி ஒட்டகத்திற் சேர்க்குங்கை – சீர்த்த 78
தொகாநாட் டார்கூடித் துரைக்கெழுது மேட்டில்
மகாநாட்டா ரென்றுவைக்கும் வண்கை – சுகமயமாய் 79
உள்ளங் குழைந்தாய் உழவாற் பெருக்கவிதை
பிள்ளையெனக் கேயுதவப் பேணுங்கை – வள்ளல் 80
81-85
தொகுகதமிறொண்டக் காவலன் காமுறு மக்கட்குள்
முதலியெனப் பேர்படைத்த முன்கை – சிதமாய் 81
உசாவு கடல்கடைய வோடதி யீந்து
தசாங்க மிறைநல்கத் தாங்குங்கை – நிசாங்கமதாய் 82
சங்கருகு தீவட்டிச் சாமரைப தாகைகுடை
பொங்குதொண்டன் நல்கப் புரக்குங்கை – கங்குல்பகல் 83
நடக்க யிருக்கை நகைக்கை மிடிதீர்க்கை
கொடுக்கை செழுங்கை குளிர்க்கை – தொடுத்ததெல்லாஞ் 84
சீராக வுண்டாக்குஞ் செங்கைப் பெருங்கருணைக்
காராளர் கறிபகப்பூங் கை 85