திருச்சினாப்பள்ளியின் புராதான சரித்திரம்/ஆங்கில கம்பெனி

16-ம் அதிகாரம்.
ஆங்கில கம்பெனி .

1703-ல் மஹம்மடாலி, ஹைடருடன் நடந்த சண்டையின் செலவிற்காக, கர்னாடக நிலத்தீர்வையை ஐந்து வருஷத்திற்கு ஆங்கிலரிடம் ஒப்படைத்தான். 1707-ல் சீமையிலுள்ள கம்பெனியின் டைரெக்டர்கள் அவ்வொப்படைத்தலை ரத்து செய்து விட்டனர். 1712-ல் சமாதான உடன்படிக்கை யொன்றுமேயில்லாமல் ராஜ்யம் தங்களுடையதென்று தண்டோரா மூலமாய் ஜனங்களுக்கு அறிவித்து கம்பெனியார் கர்னாடகத்தை யடைந்தனர்.

1714-ல் ஆங்கிலர் நவாப்புடன் செய்து கொண்ட ஏற்பாட்டின்படி வருஷம் ஒன்றுக்கு ஒன்பது லக்ஷம் வராஹன் செலவில் ஒரு ஆங்கில ஸேனையை நவாப் வைத்துக் கொள்வதாய் ஒப்புக்கொண்டான். 1717-ல் மஹம்மடாலி இறந்தான். அவன் சரீரம் திருச்சினாப்பள்ளியில் நத்தர்ஷா பள்ளிவாசலில் புதைக்கப்பட்டிருக்கிறது. 1721-ல் ஸ்ரீரங்கப்பட்டணம் பிடிக்கப்பட்டபொழுது மஹம்மடாலிக்கும் டிப்புவுக்கும் நடந்த ஆங்கிலருக்கு துரோஹமான கடிதப் போக்கு வரத்து கண்டுபிடிக்கப்பட்டது. 1723-ல் மஹம்மடாலியின் மருமகன் அஸீமுட்டௌலாவிடம் கர்னாடக ராஜ்யம் தனக்கு வேண்டாமென்றும் தனக்கு பென்ஷன் கொடுத்தால் போதுமென்றும் ஆங்கிலர் வர்த்தமானம் பெற்று ராஜ்யத்தையடைந்தார். ஆடி மாஸக்கடைசியில் (A. D. 1801 August) ஒரு ஆங்கில கலெக்டர் திருச்சினாப்பள்ளியை ஒப்புக்கொண்டான்.

1780-ல் கம்பெனியின் ஆக்ஷியை இங்கிலாந்து ராணி ஒப்புக்கொண்டாள். 1788-ல் (A. D. 1866) திருச்சினாப்பள்ளியில் முனிசிபல் கௌன்ஸில் ஏற்பட்டது. 1795-ல் (A.D.1873) இப்பொழுது கவர்ன்மெண்டு ஹெட்குவார்ட்டர் ஹாஸ்பிட்டல் என்று சொல்லப்படும் வைத்தியசாலையும் அதற்கு கிழக்கில் ஒரு மணிக்கூண்டும் திருச்சினாப்பள்ளி முனிசிபாலிட்டியாரால் கட்டப்பட்டது. 1797-ம் (December A. D. 1875) வருஷத்தில் இங்கிலாண்டு யுவராஜன் (பிறகு எட்வர்ட் VII மன்னன்) திருச்சிக்கு வந்ததின் அடையாளமாக ஒரு வளைவு சுவர் (arch) கட்டப்பட்டது.[1]


குறிப்புகள்

தொகு
  1. * 1784-ல் (11th March A.D. 1862) தஞ்சாவூரிலிருந்து திருச்சினாப்பள்ளி ஜங்ஷன் மார்க்கமாய் திருச்சினாப்பள்ளி கோட்டைவரையிலும் 1788-ல் (3rd December A. D. 1866) திருச்சினாப்பள்ளி கோட்டையிலிருந்து கரூர் வரையிலும் 1/97-ல் (1st September A.D. 1875) திருச்சினாப்பள்ளி ஜங்ஷனிலிருந்து மதுரை வரையிலும் இருப்புப்பாதைகள் போடப்பட்டன.