திருஞானசம்பந்தர் பாடிய இறுதிப்பதிகம்

திருநல்லூர்ப் பெருமணம்

தொகு

மூன்றாம் திருமுறை

தொகு

பதிகம்: 383

தொகு
பதிகவரலாறு

ஞானசம்பந்தர் தக்க பருவம்எய்தியதும் அவருடைய பெற்றோர் அவருக்குத்திருமணம் செய்ய விரும்புகின்றனர். ஆனால், பிள்ளையாருக்கோ அதில் ஒருசிறிதும் விருப்பமில்லை. பெற்றோரின் விருப்பத்திற்கேற்ப மணம்புரிந்துகொள்ள ஒருவாறு இசைகின்றார். திருமணமும் நடைபெறுகின்றது. அந்தத் திருமணப்பந்தலில் இறுதியாக அவர் பாடிய திருப்பதிகம் இது. பிறவிக் கட்டினைத் தீர்த்தலைச் செம்பொருளாகக் கொண்டு "நாதனே நல்லூர் மேவும் ந்ம்பனே! பெருமானே, உன்பாத நீழல் சேரும் பருவம்ஈது" என்று பாடியருளிய திருப்பதிகம் இது. அவர் பாடிய 16,000 பதிகங்களில் இறுதியாகப்பாடிய பதிகம் இது!

பண்
அந்தாளிக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்

பாடல்:1 (கல்லூர்ப் பெருமணம்)

தொகு
கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே.

===பாடல்:2 ()