திருவருட்பயன்/குறள்:1-100
1. பதிமுது நிலை
தொகுபதம் பிரித்து | உள்ளபடியே |
---|---|
அகர உயிர் போல் அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து. (01)
|
அகர வுயிர்போ லறிவாகி யெங்கும் நிகரிலிறை நிற்கும் நிறைந்து. (01)
|
2. உயிரவை நிலை
தொகுபதம் பிரித்து | உள்ளபடியே |
---|---|
பிறந்த நாள் மேலும் பிறக்கும் நாள் போலும் துறந்தோர் இறப்போர் தொகை. (11)
|
பிறந்தநாள் மேலும் பிறக்குநாள் போலுந் துறந்தோ ரிறப்போர் தொகை. (11)
|
3. இருள்மல நிலை
தொகுபதம் பிரித்து | உள்ளபடியே |
---|---|
துன்றும் பவத் துயரும் இன்பும் துணைப் பொருளும் இன்று என்பது எவ்வாறும் இல். (21)
|
துன்றும் பவத்துயரு மின்புந் துணைப்பொருளு மின்றென்ப தெவ்வாறு மில். (21)
|
4. அருளது நிலை
தொகுபதம் பிரித்து | உள்ளபடியே |
---|---|
அருளில் பெரியது அகிலத்தில் வேண்டும் பொருளிள் தலை இலது போல். (31)
|
அருளிற் பெரிய தகிலத்தில் வேண்டும் பொருளிற் றலையிலது போல். (31)
|
5. அருளுறு நிலை
தொகுபதம் பிரித்து | உள்ளபடியே |
---|---|
அறியாமை உள் நின்று அளித்ததே காணும் குறியாக நீங்காத கோ. (41)
|
அறியாமை யுள்நின் றளித்ததே காணுங் குறியாக நீங்காத கோ. (41)
|
6. அறியும் நெறி (or அறியும் நிலை ??)
தொகுபதம் பிரித்து | உள்ளபடியே |
---|---|
நீடும் இரு வினைகள் நேர் ஆக நேர் ஆதல் கூடும் இறை சத்தி கொளல். (51)
|
நீடு மிருவினைகள் நேராக நேராதல் கூடுமிறை சத்தி கொளல். (51)
|
7. உயிர் விளக்கம்
தொகுபதம் பிரித்து | உள்ளபடியே |
---|---|
தூ நிழல் அர்தற்கு ஆரும் சொல்லார் தொகும் இது போல் தான் அதுவாய் நிற்கும் தரம். (61)
|
தூனிழலார் தற்காருஞ் சொல்லார் தொகுமிதுபோல் தானதுவாய் நிற்குந் தரம். (61)
|
8. இன்புறு நிலை
தொகுபதம் பிரித்து | உள்ளபடியே |
---|---|
இன்புறுவார் துன்பார் இருளின் எழும் சுடரின் பின் புகுவார் முன் புகுவார் பின். (71)
|
இன்புறுவார் துன்பா ரிருளி னெழுஞ்சுடரின் பின்புகுவார் முன்புகுவார் பின். (71)
|
9. அஞ்செழுத்தருள் நிலை
தொகுபதம் பிரித்து | உள்ளபடியே |
---|---|
அருள் நூலும் ஆரணமும் அல்லாது ஐந்தின் பொருள் நூல் தெரியப் புகின். (81)
|
அருணூலு மாரணமு மல்லாது மைந்தின் பொருணூ டெரியப் புகின். (81)
|
10. அணைந்தோர் தன்மை
தொகுபதம் பிரித்து | உள்ளபடியே |
---|---|
ஓங்கு உணர்வில் உள்ளடங்கி உள்ளத்தில் இன்பு ஒடுங்கத் தூங்குவர் மற்று ஏது உண்டு சொல்.(91)
|
ஓங்குணர்வி லுள்ளடங்கி யுள்ளத்தி லின்பொடுங்கத் தூங்குவர்மற் றேதுண்டு சொல்.(91)
|
உமாபதி சிவாச்சாரியார் இயற்றியருளிய திருவருட்பயன் முற்றும்.