திருவருட்பயன்/குறள்:21-40

திருவருட்பயன்- குறள்வெண்பா: 21 முதல் 40 முடிய

தொகு

ஆசிரியர்: உமாபதி சிவாச்சாரியார்

தொகு

3. இருள்மலநிலை

தொகு

குறள்வெண்பா 21 (துன்றும் )

தொகு

துன்றும் பவத்துயரு மின்புந் துணைப்பொருளு () துன்றும் பவத் துயரும் இன்பும் துணைப் பொருளும்

மின்றென்ப தெவ்வாறு மில். (08) இன்று என்பது எவ்வாறும் இல்.


குறள்வெண்பா 22 (இருளானதன்றி )

தொகு

இருளான தன்றி யிலதெவையு மேகப் () இருள் ஆனது அன்றி இலது எவையும் ஏகப்

பொருளாகி நிற்கும் பொருள். (09) பொருள் ஆகி நிற்கும் பொருள்.


குறள்வெண்பா 23 (ஒருபொருளுங் )

தொகு

ஒருபொருளுங் காட்டா திருளுருவங் காட்டு () ஒரு பொருளும் காட்டாது இருள் உருவம் காட்டும்

மிருபொருளுங் காட்டா திது. (10) இரு பொருளும் காட்டாது இது.


குறள்வெண்பா 24 ( அன்றளவி)

தொகு

அன்றளவி யுள்ளொளியோ டாவி யிடையடங்கி () அன்று அளவி உள்ளொளியோடு ஆவி இடை அடங்கி

யின்றளவும் நின்ற திருள். (08) இன்று அளவும் நின்றது இருள்.


குறள்வெண்பா 25 (பலரைப் )

தொகு

பலரைப் புணர்ந்து மிருட் பாவைக்குண் டென்றுங் () பலரைப் புணர்ந்தும் இருள் பாவைக்கு உண்டு என்றும்

கணவற்குந் தோன்றாத கற்பு. (09) கணவற்கும் தோன்றாத கற்பு.


குறள்வெண்பா 26 (பன்மொழிகள் )

தொகு

பன்மொழிக ளென்னுணரும் பான்மை தெரியாத () பல் மொழிகள் என் உணரும் பான்மை தெரியாத

தன்மை யிருளார்தந் தது. (10) தன்மை இருளார் தந்தது.


குறள்வெண்பா 27 (இருளின்றேல் )

தொகு

இருளின்றேல் துன்பென் னுயிரியல்பேற் போக்கும் () இருள் இன்றேல் துன்பு என் உயில் இயல்பேல் போக்கும்

பொருளுண்டே லொன்றாகப் போம். (08) பொருள் உண்டேல் ஒன்றாகப் போம்.


குறள்வெண்பா 28(ஆசாதியேல் )

தொகு

ஆசாதி யேலணைவ காரணமென் முத்திநிலை () ஆசாதியேல் அணைவ காரணம் என் முத்தி நிலை

பேசா தகவும் பிணி. (09) பேசாது அகவும் பிணி.


குறள்வெண்பா 29 (ஒன்றுமிகினும் )

தொகு

ஒன்று மிகினு மொளிகவரா தேலுள்ள () ஒன்று மிகினும் ஒளி கவராதேல் உள்ளம்

மென்று மகலா திருள். (10) என்றும் அகலாது இருள்.


குறள்வெண்பா 30 (விடிவாமளவும் )

தொகு

விடிவா மளவும் விளக்கனைய மாயை () விடிவு ஆம் அளவும் விளக்கு அனைய மாயை

வடிவாதி கன்மத்து வந்து. (08) வடிவு ஆதி கன்மத்து வந்து.


4. அருளதுநிலை

தொகு

குறள்வெண்பா 31 (அருளிற் )

தொகு

அருளிற் பெரிய தகிலத்தில் வேண்டும் () அருளில் பெரியது அகிலத்தில் வேண்டும்

பொருளிற் றலையிலது போல். (09) பொருளில் தலையிலது போல்.

குறள்வெண்பா 32 (பெருக்க )

தொகு

பெருக்க நுகர்வினை பேரொளியா யெங்கு () பெருக்க நுகர்வினை பேரொளியாய் எங்கும்

மருக்கனென நிற்கு மருள். (10) அருக்கன் என நிற்கும் அருள்.

குறள்வெண்பா 33 (ஊனறியா )

தொகு

ஊனறியா தென்று முயிரறியா தொன்றுமிவை () ஊன் அறியாது என்றும் உயிர் அறியாதது ஒன்றும் இவை

தானறியா தாரறிவார் தான். (08) தான் அறியாது ஆர் அறிவார் தான்


குறள்வெண்பா 34 (பாலாழி )

தொகு

பாலாழி மீனாளும் பான்மைத் தருளுயிர்கள் () பால் ஆழி மீன் ஆளும் பான்மைத்து அருள் உயிர்கள்

மாலாழி யாளு மறித்து. (09) மால் ஆழி ஆளும் மறித்து.


குறள்வெண்பா 35 (அணுகு )

தொகு

அணுகு துணையறியா வாற்றோனி லைந்து () அணுகு துணை அறியா ஆற்றோனில் ஐந்தும்

முணர்வை யுணரா துயிர். (10) உணர்வை உணராது உயிர்.


குறள்வெண்பா 36 (தரையை )

தொகு

தரையை யறியாது தாமே திரிவோர் () தரையை அறியாது தாமே திரிவோர்

புரையை யுணரார் புவி. (10) புரையை உணரார் புவி.


குறள்வெண்பா 37 (மலைகெடுத்தோர் )

தொகு

மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானந் () மலை கெடுத்தோர் மண் கெடுத்தோர் வான் கெடுத்தோர் ஞானம்

தலைகெடுத்தோர் தற்கேடர் தாம். (08) தலைகெடுத்தோர் தன் கேடர் தாம்.


குறள்வெண்பா 38 (வெள்ளத்துள் )

தொகு

வெள்ளத்துள் நாவற்றி யெங்கும் விடிந்திருளாங் () வெள்ளத்துள் நா வற்றி எங்கும் விடிந்து இருளாம்

கள்ளத் தலைவர் கடன். (09) கள்ளத் தலைவர் கடன்.


குறள்வெண்பா 39 (பரப்பமைந்து )

தொகு

பரப்பமைந்து கேண்மினிது பாற்கலன்மேற் பூசை () பரப்பு அமைந்து கேண்மின் இது பால் கலன் மேல் பூசை

கரப்பருந்த நாடுங் கடன். (10) கரப்பு அருந்த நாடும் கடன்.


குறள்வெண்பா 40 (இற்றை )

தொகு

இற்றை வரையியைந்து மேதும் பழக்கமிலா () இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கம் இலா

வெற்றுயிர்க்கு வீடு மிகை. (10) வெற்று உயிர்க்கு வீடு மிகை.

பார்க்க:

தொகு
திருவருட்பயன்-குறள்:1-20
திருவருட்பயன்-குறள்:41-60
திருவருட்பயன்-குறள்:61-80
திருவருட்பயன்-குறள்:81-100
"https://ta.wikisource.org/w/index.php?title=திருவருட்பயன்/குறள்:21-40&oldid=718572" இலிருந்து மீள்விக்கப்பட்டது