திருவருட்பயன்/குறள்:61-80


திருவருட்பயன்- குறள்வெண்பா: 61 முதல் 80 முடிய

தொகு

ஆசிரியர்: உமாபதி சிவாச்சாரியார்

தொகு

7. உயிர்விளக்கம்

தொகு

குறள்வெண்பா 61 (தூனிழலார் )

தொகு

தூனிழலார் தற்காருஞ் சொல்லார் தொகுமிதுபோல் () தூ நிழல் ஆர்தற்கு ஆரும் சொல்லார் தொகும் இதுபோல்

தானதுவாய் நிற்குந் தரம். (01) தான் அதுவாய் நிற்கும் தரம்.

குறள்வெண்பா 62 (தித்திக்கும் )

தொகு

தித்திக்கும் பாடானுங் கைக்குந் திருந்திடுநாப் () தித்திக்கும் பால் தானும் கைக்கும் திருந்திடும் நாப்

பித்தத்தி டான்டவிர்ந்த பின். (02) பித்தத்தில் தான் தவிர்ந்த பின்.

குறள்வெண்பா 63 (காண்பான் )

தொகு

காண்பா னொளியிருளி்ற் காட்டிடவுந் தான்கண்ட () காண்பான் ஒளி இருளி்ல் காட்டிடவும் தான் கண்ட

வீ்ண்பாவ மெந்நாள் விடும். (03) வீண் பாவம் எந்நாள் விடும்.


குறள்வெண்பா 64 (ஒளியுமிரு )

தொகு

ஒளியு மிருளு மொருமைத்துப் பன்மை () ஒளியும் இருளும் ஒருமைத்துப் பன்மை

தெளிவு தெளியார் செயல். (04) தெளிவு தெளியார் செயல்.


குறள்வெண்பா 65 (கிடைக்கத் )

தொகு

கிடைக்கத் தகுமேநற் கேணமையார்க் கல்லா () கிடைக்கத் தகுமே நல் கேண்மையார்க்கு அல்லால்

லெடுத்துச் சுமப்பானை யின்று. (05) எடுத்துச் சுமப்பானை இன்று.


குறள்வெண்பா 66 (வஞ்சமுடன் )

தொகு

வஞ்ச முடனொருவன் வைத்த நிதிகவரத் () வஞ்சமுடன் ஒருவன் வைத்த நிதி கவரத்

துஞ்சினனோ போயினனோ சொல். (06) தஞ்சினனோ போயினனோ சொல்.


குறள்வெண்பா 67 (தனக்கு )

தொகு

தனக்கு நிழலின்றா மொளிகவருந் தம்ப () தனக்கு நிழல் இன்றாம் ஒளி கவரும் தம்பம்

மெனக்கவர நில்லா திருள். (07) எனக் கவர நில்லாது இருள்.


குறள்வெண்பா 68 ( உற்கை)

தொகு

உற்கைதரும் பொற்கை யுடையவர்போ லுண்மைப்பின் () உற்கை தரும் பொன் கை உடையவர் போல் உண்மைப் பின்

னிற்க வருளார் நிலை. (10) நிற்க அருளார் நிலை.


குறள்வெண்பா 69 (ஐம்புலனாற் )

தொகு

ஐம்புலனாற் றாங்கண்ட தென்றா லதுவொழிய () ஐம்புலனால் தாம் கண்டது என்றால் அது ஒழிய

வைம்புலனார் தாமா ரதற்கு. (08) ஐம்புலனார் தாம் ஆர் அதற்கு.


குறள்வெண்பா 70 (தாமே )

தொகு

தாமே தருபவரைத் தம்வலியி னாற்கருத () தாமே தருபவரைத் தாம் வலியினால் கருதல்

லாமே யிவனா ரதற்கு. (09) ஆமே இவன் ஆர் அதற்கு.


8. இன்புறுநிலை

தொகு

குறள்வெண்பா 71 ( இன்புறுவார்)

தொகு

இன்புறுவார் துன்பா ரிருளி னெழுஞ்சுடரின் () இன்புறுவார் துன்பார் இருளின் எழும் சுடரின்

பின்புகுவார் முன்புகுவார் பின். (1) பின் புகுவார் முன்புகுவார் பின்.


குறள்வெண்பா 72 (இருவர் )

தொகு

இருவர் மடந்தையருக் கென்பயனின் புண்டா () இருவர் மடந்தையருக்கு என்பயன் இன்பு உண்டாம்

மொருவ னொருத்தி யுறின். (02) ஒருவன் ஒருத்தி உறின்.


குறள்வெண்பா 73 (இன்பதனை )

தொகு

இன்பதனை யெய்துவார்க் கீயு மவர்க்குருவ () இன்பு அதனை எய்துவார்க்கு ஈயும் அவர்க்கு உருவம்

மின்பகன மாதலினா லில். (03) இன்ப கனம் ஆதலினால் இல்.


குறள்வெண்பா 74 (தாடலைபோற் )

தொகு

தாடலைபோற் கூடியவை தானிகழா வேற்றின்பக் () தாள் தலை போல் கூடி அவைதான் நிகழா வேறு இன்பம்

கூடலைநீ யேகமெனக் கொள். (04) கூடலை நீ ஏகம் எனக் கொள்.


குறள்வெண்பா 75 (ஒன்றாலு )

தொகு

ஒன்றாலு மொன்றா திரண்டாலு மோசையெழா () ஒன்றாலும் ஒன்றாது இரண்டாலும் ஓசை எழாது

தென்றாலொன் றன்றிரண்டு மில். (5) என்றால் ஒன்று அன்று இரண்டும் இல்.



குறள்வெண்பா 76 (உற்றாரும் )

தொகு

உற்றாரும் பெற்றாரு மோவா துரையொழியப் () உற்றாரும் பெற்றாரும் ஓவாது உரை ஒழியப்

பற்றாரு மற்றார் பவம். (06) பற்றாரும் அற்றார் பவம்.



குறள்வெண்பா 77 (பேயொன்றுந் )

தொகு

பேயொன்றுந் தன்மை பிறக்கு மளவுமினி () பேய் ஒன்றும் தன்மை பிறக்கும் அளவும் இனி

நீயொன்றுஞ் செய்யாது நில். (07) நீ ஒன்றும் செய்யாது நில்.



குறள்வெண்பா 78 (ஒண்பொருட்கண் )

தொகு

ஒண்பொருட்க ணுற்றார்க் குறுபயனே யல்லாது () ஒள் பொருள் கண் உற்றார்க்கு உறு பயனே அல்லாது

கண்படுப்போர் கைப்பொருள்போற் காண். (08) கண்படுப்போர் கைப் பொருள் போல் காண்.



குறள்வெண்பா 79 (மூன்றாய )

தொகு

மூன்றாய தன்மையவர் தம்மின் மிகமுயங்கித் () மூன்றாய தன்மை அவர் தம்மின் மிக முயங்கித்

தோன்றாத வின்பமதென் சொல். (10) தோன்றாத இன்பம் அது என் சொல்.



குறள்வெண்பா 80 (இன்பில் )

தொகு

இன்பி லினிதென்ற லின்றுண்டே லின்றுண்டா () இன்பில் இனிது என்றல் இன்று உண்டேல் இன்று உண்டாம்

மன்பு நிலையே வது. (10) அன்பு நிலையே அது.

பார்க்க:

தொகு
திருவருட்பயன்-குறள்:1-20
திருவருட்பயன்-குறள்:21-40
திருவருட்பயன்-குறள்:41-60
திருவருட்பயன்-குறள்:81-100
"https://ta.wikisource.org/w/index.php?title=திருவருட்பயன்/குறள்:61-80&oldid=718580" இலிருந்து மீள்விக்கப்பட்டது