திருவள்ளுவர் ஞானம்
சித்தர் பாடல்கள்
நூல் - 15
திருவள்ளுவர் ஞானம்
பக்கம் 278 முதல்
பாடல்கள்
தொகுகாப்பு
தொகுஎண்சீர் விருத்தம்
தொகுஅண்ட பிண்டம் நிறைந்து நின்ற அயன் மால் போற்றி
- அகண்ட பரிபூரணத்தின் அருளே போற்றி
மண்டலம் சூழ் இரவிமதி சுடரே போற்றி
- மதுர தமிழ் ஓதும் அகத்தியனே போற்றி
எண்டிசையும் புகழும் என்றன் குருவே போற்றி
- இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி
- குருமுனியின் தாளிணை எப்போதும் போற்றி
நூல்
தொகுகட்டளைக் கலித்துறை
தொகு1
- அன்னை எனும் கர்ப்பம் அதனில் வந்தும் அதிலே இருந்தும்
- நன்னயமாய்ப் பத்துத் திங்களும் நானகத்தே இருந்தேன்
- என்ன அதிசயம் காண் இவ்வுலகிலே அமைந்த
- உன்னதம் எல்லாம் அமைத்தேன்உண்மையைக் காண்கிலரே
2
- அம்புவி தன்னில் உதித்தாய் அறிபாடை தன்னை
- வம்பு உலகத்தார் வசியமாய்க் கைப்பிடித்தே பிரிந்து
- கும்பி தனிலே உழன்றும் அக்குண்டலி பொற்கமலம்
- நம்பி இருந்தேன் சிலநாள் ரகசியம் காண்கிலனே
தரவு கொச்சகம்
தொகு3
- அண்டர் அண்ட வான் புவியும் ஆகமத்தின் உட்பொருளும்
- கண்டிதமா யான் விளங்கும் காயமதிலே அறியும்
- வண்டரெனை நீசன் என்றவாறு தனையே ஒழித்தேன்
- விண்ட ரகசியம் தன்னை விளக்கமது காண்கிலரே
4
- வையம் அதிலே உதிக்கும் மாண்பர்களே உங்கள் உயிர்
- மெய்யென்று இருந்தசைவு வெளிப்படுவது என்னவிதம்
- அய்யம் இல்லா வாழ்ந்துலகில் ஆன்மையாய்ப் பூண்டமதிப்
- பொய் எனும் இவ்வாழ்க்கை அதுபோகும் சுடுகாடு உளதே
கட்டளைக் கலித்துறை
தொகு5
- வீடான மூலச் சுழிநாத வீட்டில் விளங்கும் விந்து
- நீடாழி லோகம் தழைத்துப் பெருகியும் நின்றிலகுந்
- தேடாது அழித்த பொருளான பொக்கிடம் தேடியென்ன
- காடான நாடு சுடுகாடு சேர்வதும் கண்டிலரே
6
- எழுவகைத் தோற்றமும் நால்வகை யோனியில் எய்திடினும்
- பொழியச் சுரோணிதம் நாதவிந்துப் பொருள் போதகத்தால்
- கழியக் கழியக் கடலுயிர் தேய்பிறை கண்டுமிருந்
- தழியப் பெருந்தரை யெந்நாளிருந்தும் அனித்தியமே
7
- எந்நாள் இருந்தென்ன முன்னாள் அனுப்படி இந்தவுடல்
- தன்னால் அழிவதும் தான் அறியாதெனத் தந்தை விதி
- உன்னால் அழிவது உடலுயிர் காயம் ஒழிவதுங்கண்டு
- அந்நாள் அனுப்படி கண்டு இருந்தறியாதவரே
8
- யோனிக்குள் ஆசை ஒழியாத னித்தியம் உங்களுயிர்
- தேனிக்குள் இன்பம் சுகாதிதமோ வரைம் சிற்றின்பத்தில்
- ஊன்றறுக் காயம் உடலற்றுப் போம்பொழுது ஒன்றறியா
- ஈனக்குச் சொர்க்கம் சுடுகாடு ஒழிய இனியில்லையே
நேரிசை வெண்பா
தொகு9
- இந்தவுடல் காயம் இறந்து விடும் இவ்வுலகில்
- வந்தவழி தான் அறியா வாழ்க்கையோ – இந்தவுடல்
- அற்பக் குழியில் அரவம் இருப்பதெனும்
- கற்பகத்தை ஆண்டிடுமோ காண்
10
- ஞானம் அறிந்தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
- பானமதை உண்டு பசியினால் – ஞானமது
- கண்டால் உடல் உயிரும் காயம் வலுவாகும்
- உண்டால் அமிர்த ரசம் ஊண்
11
- சுழி அறியார்க்கு என்ன சுகம் அறியார்க்கு என்ன
- வழி அறியார்க்கு என்ன எய்துமாறு – சுழியறியா
- மூலமறிந்து அவ்வழியில் முத்தி அடையார்க்கு நமன்
- காலன் அவர்க்கே மரணும் காண்
12
- வேத மறைஞான மெய்யுணர்வு தான் ஆகில்
- நாதன் அருளால் பதவி நாடுமே வேதமறை
- நாலு பொருளுள் நற்பொருளின் ஆற்றியப்
- பாலுமது நெய்யெனவும் பார்
13
- முதலிருந்த ஊழ்வினையை முப்பாழைச் சுட்டுப்
- பதறா மதிபாடு பட்டேன் – முதலிருந்த
- நல்வினையும் தீவினையும் நாடாமலும் பிறந்த
- வல்வினையில் போக்கி விட்டேன் வாழ்வு
14
- காயசித்தியால் எனது கன்மவினை போக்கியபின்
- மாயசித்தி மூலசுழி வாய்க்குமே – காயசித்தி
- மூலப்புளியால் முதல் தீட்சை ஆச்சுது இனிக்
- காலம் என்னிரண்டு ஆண்டில் காண்
15
- கல்லுப்பின் வாரும் கருத்தறியா துண்டு மனு
- வல்வினைக்கு உள்ளாகி மரணமார் – கல்லுப்பு
- வெள்ளைக் கல்லுப்பு வெகு விதமாய் வந்தாலும்
- உள்ளம் அதில் உண்டென்றே உன்
16
- என்றும் இந்துப்பாகும் எண்சாண் உடலிருக்கக்
- கண்டும் அறியாதது என்ன காரணமோ – என்றுமதி
- வாரியம் உரியதை வன்னிவிட்டுக் காய்ச்சியபின்
- விரியமாய் நானுணரும் எமய்
17
- உப்பின் கசடு தான் ஊறலது மாறினதால்
- மூப்பு சுன்னம் ஆவதற்கு முன்னமே – உப்பதனால்
- தற்பாந்தம் கோடி காயமிது வலுத்துச்
- செற்பாயும் வாசியில் தேகம்
18
- அஞ்சுபஞ்ச பூதம் அறிந்தால் அனித்தியம் போம்
- அஞ்சு வசப்படுவது ஆண்டதனில் – அஞ்சினையும்
- கண்டறிவோர் ஞானக் காட்சி அதிநினைவு
- விண்டறியல் ஆமே விதி
19
- எண்சாணாம் தேகம் எடுத்தால் என்னாண்டையே
- பெண்சாரல் நீக்கியே பேரின்பம் – கண்காணத்
- தேகம் ஒழியாமல் சித்தி பெறுஞானம்
- யோக சித்தி பூசை விதி உன்
முற்றும்