திரைக்கவி திலகம் அ. மருதகாசி பாடல்கள்/தத்துவம்
தத்துவம்
- முதல் என்பது தொடக்கம்!
- முடி வென்பது அடக்கம்!
- விடை என்பது விளக்கம்!
- விதி என்பது என்ன? என்ன? என்ன? (முதல்)
- அறிவென்பது கோயில்!
- அன்பென்பது தெய்வம்!
- அறமென்பது வேதம்!
- அவன் என்பது என்ன? என்ன? என்ன?(முதல்)
- துயர் என்பது பாதி!
- சுகம் என்பது மீதி!
- இயல் பென்பது நீதி!
- செயல் என்பது என்ன? என்ன? என்ன?(முதல்)
- உறவென்பது பெருக்கல்!
- பிரிவென்பது கழித்தல்!
- வழி என்பது வகுத்தல்!
- வாழ்வென்பது என்ன? என்ன? என்ன? (முதல்)
பூவும் பொட்டும்-1968
- இசை : கோவர்த்தனம்
- பாடியவர் : T. M. சௌந்தரராஜன்
- சமரசம் உலாவும் இடமே-நம்
- வாழ்வில் காணா (சமரசம்)
- ஜாதியில் மேலோரென்றும்
- தாழ்ந்தவர் தீயோ ரென்றும் பேத மில்லாது
- எல்லோரும் முடிவில் சேர்ந்திடுங்காடு!
- தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு!
- உலகினிலே இது தான் (நம் வாழ்)
- ஆண்டியும் எங்கே? அரசனும் எங்கே?
- அறிஞனும் எங்கே? அசடனும் எங்கே?
- ஆவி போனபின் கூடுவாரிங்கே!
- ஆகையினால் இது தான்!(நம் வாழ்)
- சேவை செய்யும் தியாகி! சிருங்கார போகி!
- ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி!
- எல்லோரும் இங்கே உறங்குவதாலே
- உண்மையிலே இது தான்(நம் வாழ்)
ரம்பையின் காதல்-1956
- இசை : T. R. பாப்பா
- பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
- அன்பினாலே உண்டாகும் இன்பநிலை! அதை
- அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை! (அன்)
- சொந்தமென்னும் உறவுமுறை நூலினாலே!-அருட்
- சோதியான இறைவன் செய்த பின்னல் வேலை! (அன்)
- தன்னை மறந்தாடும் சிலையே!
- சங்கத் தமிழ் பாடும் கலையே!
- சிலையே கலையால் நிலையே
- குலைந்தாய் உண்மையிலே!
- உளமிரண்டும் நாடி
- உறவே கொண்டாடி
- கனிந்து முதிர்ந்த காதல் தனை
- நினைந்து மனம் உருகிடுது வாழ்வினிலே! (அன்)
- கொஞ்சு மொழிக் குழந்தைகளைப் பிரிந்த போது! நல்ல
- குலவிளக்காம் மனைவிதன்னை இழந்தபோது!
- தம்பி தன்னைப் பறிகொடுக்க நேர்ந்த போது!
- சம்சாரம் எல்லாம் அழிந்த போது வாழ்வில் ஏது!
(அன்)
பாசவலை–1956
- இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி
- பாடியவர்: C. S. ஜெயராமன்
- ஆண்: ஆத்திலே தண்ணி வர
- அதில் ஒருவன் மீன் பிடிக்க
- காத்திருந்த கொக்கு அதைக்
- கவ்விக்கொண்டு போவது ஏன்?
- கண்ணம்மா! அதைப்
- பாத்து அவன் ஏங்குவதேன்? சொல்லம்மா!
- பாத்தி கட்டி நாத்து நட்டு
- பலனெடுக்கும் நாளையிலே
- பூத்ததெல்லாம் வேறொருவன்
- பாத்தியமாய் போவது ஏன்? கண்ணம்மா! கலப்பை
- புடிச்சவனும் தவிப்பது ஏன்? சொல்லம்மா!
- பெண்: னன்னானே னானே னானே
- னானே னன்னானே
- னன்னானே னன்னானே னானே னன்னானே
- ஆண்:பஞ்செடுத்து பதப்படுத்தி
- பக்குவமாய் நூல் நூற்று
- நெஞ்சொடிய ஆடை நெய்வோன்
- கண்ணம்மா!-இங்கு
- கந்தலுடை கட்டுவதேன்?
- சொல்லம்மா!
- காத்திருக்கும் அத்தை மவன்
- கண் கலங்கி நிற்கையிலே
- நேத்து வந்த ஒருவனுக்கு
- மாத்து மாலை போடுவதேன்
- கண்ணம்மா!-அவள்
- நேத்திரத்தை பறிப்பது ஏன்?
- சொல்லம்மா?
- நேத்திரத்தை பறிப்பது ஏன்?
- காத்திருக்கும் அத்தை மவன்
- பெண்: ணன்னானே.....
- ஆண்: ஏற்றத்தாழ்வும் ஏமாற்றும்
- இவ்வுலகில் இருப்பது தான்
- இத்தனைக்கும் காரணமாம்
- கண்ணம்மா! இதை
- எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா!
(ஆத்தி)
- பெண்: னன்னானே...
- ஆண் : கண்ணம்மா! சொல்லம்மா!
- கண்ணம்மா சொல்லம்மா!
- கண்ணம்மா! வ...வ...வண்ணம்மா!
வண்ணக்கிளி-1959
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
- அடிக்கிற கைதான் அணைக்கும்
(வசனம்) ஏய்! பாடுடி!
- அடிக்கிற கைதான் அணைக்கும்!
- அணைக்கிற கைதான் அடிக்கும்!
- இனிக்கிற வாழ்வே கசக்கும்
- கசக்கிற வாழ்வே இனிக்கும்! -
(வசனம்) ம்! ஆடுடி (அடிக்கிற)
- புயலுக்குப்பின்னே அமைதி!
- வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி!
- இருளுக்குப் பின் வரும் ஜோதி!
- இதுதான் இயற்கை நியதி!
(வசனம்) பலே! (அடிக்கிற)
- இறைக்கிற ஊற்றே சுரக்கும்-இடி
- இடிக்கிற வானம் கொடுக்கும்!
- விதைக்கிற விதைதான் முளைக்கும்
- இதுதான் இயற்கை நியதி
(வசனம்) சபாஷ்! அஹஹ!
(அடிக்கிற)
வண்ணக்கிளி-1959
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்: திருச்சி லோகநாதன்
- பிளாட்பாரம் மட்டமுன்னு எண்ணாதீங்க-சும்மா
- பேச்சுக்குப் பேச்சு கேலி பண்ணாதீங்க!
- ஆளுமேலே காருமோதி ஆஸ்பத்திரி போகாமே
- அனுதினம் காப்பது பிளாட்பாரம்!
- கூழுக்காக நாள் முழுதும் பாடுபடும் ஏழைகளின்
- கூரையில்லா வீடு இந்த பிளாட்பாரம்!
- சாதிமத பேதமின்றி ஏழை பணக்காரருக்கும்
- சமத்துவம் கொடுப்பது பிளாட்பாரம்!
- காசையெல்லாம் கோட்டைவிட்ட ஊதாரிச் சீமான்கள்!
- கடைசியில் சேரும் இடம் பிளாட்பாரம்! (பிளாட்)
- காதல் கொண்ட ஆணும்பெண்ணும் மத்தவங்க காணாமே!
- கண்ணாலே பேசும் இடம் பிளாட்பாரம்!-யாரும்
- காலேஜில் படிக்காத பாடங்களைக் கற்றுத்தரும்
- அனுபவப் பள்ளிக் கூடம் பிளாட்பாரம்! (பிளாட்)
- கட்சியின் பெயராலே லட்சிய முழக்கமிட்டால்
- உச்சியிலே ஏற்றுவதும் பிளாட்பாரம்!-பிறகு
- கட்சிவிட்டு கட்சி மாறும் பச்சோந்திக் கும்பலைக்
- காலைவாரி விடுவதும் பிளாட்பாரம்!
- எளக்காரமாகவே பணக்காரர் ஏழைக்கு
- இடுகின்ற செல்லப் பெயர் பிளாட்பாரம்! எவர்
- எது சொன்ன போதிலும் அஞ்சாமல் கடமையை
- எப்பொழுதும் செய்யுமிந்த பிளாட்பாரம்!
தேடி வந்த செல்வம்-1958
- இசை : T. G. லிங்கப்பா
- பாடியவர்: S. C. கிருஷ்ணன்
தொகையறா
- தூங்கையிலே வாங்குகிறமூச்சு-இது
- சுழிமாறிப் போனாலும் போச்சு!-உளுத்த
- மூங்கில் உடல் மேல்மினுக்குப் பூக்சு!-என்ற
- மொழி என்றும் உண்மையான பேச்சு!
(பாட்டு)
- இன்பமெங்கே? இன்பமெங்கே? என்றுதேடு!-அது
- எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு!
- இன்றிருப்போர் நாளையிங்கே
- இருப்பதென்ன உண்மை!-இதை
- எண்ணிடாமல் சேர்த்து வைத்துக்
- காத்து என்ன நன்மை?
- இருக்கும் வரை இன்பங்களை
- அனுபவிக்கும் தன்மை!
- இல்லையென்றால் வாழ்வினிலே
- உனக்கு ஏது இனிமை? (இன்ப)
- கனிரசமாம் மதுவருந்திக்
- களிப்பதல்ல இன்பம்!
- கணிகையரின் துணையினிலே
- கிடைப்பதல்ல இன்பம்!
- இணையில்லா மனையாளின்
- வாய்மொழியே இன்பம்!-அவள்
- இதழ் சிந்தும் புன்னகையே
- அளவில்லாத இன்பம்! (இன்ப):
- மாடி மனை கோடி பணம்
- வாகனம் வீண் ஜம்பம்!
- வாழ்வினிலே ஒருவனுக்குத்
- தருவதல்ல இன்பம்!
- மழலைமொழி வாயமுதம்
- வழங்கும் பிள்ளைச் செல்வம்!-உன்
- மார்மீது உதைப்பதிலே
- கிடைப்பதுதான் இன்பம்!
மனமுள்ள மறுதாரம்-1958
- இசை : K. V. மகாதேவன் -
- பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
- என்னைத் தெரியலையா?
- இன்னும் புரியலையா?
- குழந்தை போலே எம்மனசு-என்
- வழியோ என்றும் ஒரு தினுசு! (என்னைத்)
- அழகை ரசிப்பதில் கவிஞன் நான்!
- அன்பு காட்டினால் அடிமை நான்!
- பழகும் தன்மையில் பண்புள்ள தமிழன்!
- பரந்த நோக்கம் உள்ளவன் நான்!(என்னைத்)
- காதல் பாதையில் கம்பன் மகன்!
- கன்னி தான் இன்னும் கிடைக்கலே!
- கவலை ஏதுமே இல்லாத மனிதன்
- சிரிக்க வைப்பதில் வல்லவன் நான்! (என்னைத்)
- அனுபவப் படிப்பில் முதிர்ந்தவன் நான்!
- ஆசைத் துடிப்பிலே வாலிபன்!
- என்னையறிந்தோர் எல்லோர்க்கும் நண்பன்!
- இரக்க சிந்தை உள்ளவன் நான்! (என்னைத்)
யாருக்கு சொந்தம்-1963
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்: சந்திரபாபு
- மனித னெல்லாம் தெரிந்து கொண்டான்!
- வாழும் வகை புரிந்து கொண்டான்!
- இருந்த போதும் மனிதனுக்கு
- ஒன்றுமட்டும் புரியவில்லை -
- மனிதனாக வாழமட்டும், மனிதனுக்குத் தெரியவில்லை
(மனிதனெல்லாம்)
- இனிய குரலில் குயில் போலே
- இசையும் அழகாய்ப் பாடுகிறான்!
- எருதுகள் போலே வண்டிகளை
- இழுத்துக்கொண்டு ஓடுகின்றான்
- வனத்தில் வாழும் பறவைகள் போல்
- வானில் பறந்து திரிகின்றான்
- மனிதனாகவாழ மட்டும்
- மனிதனுக்குத் தெரியவில்லை
(மனிதனெல்லாம்)
- சாரமில்லா வாழ்க்கையிலே
- சக்கரம் போலே சுழலுகிறான்!
- ஈரமண்ணால் பல உருவை
- இறைவனைப் போலே படைக்கின்றான்!
- நேரும் வளைவு நெளிவுகளை
- நீக்கி ஒழுங்கு படுத்துகிறான்
- மனிதனாக வாழமட்டும்
- மனிதனுக்குத் தெரியவில்லை
(மனிதனெல்லாம்)
- கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தைச்
- சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான்!
- குள்ள நரிபோல் தந்திரத்தால் குடியைக் கெடுக்கப்
- புரிந்து கொண்டான்!
- வெள்ளிப் பணத்தால் மற்றவரை விலைக்கு வாங்கத்
- தெரிந்து கொண்டான்!
- மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை
(மனிதனெல்லாம்)
அழகுநிலா-1962
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
- உபகாரம் செய்தவர்க்கே அபகாரம் செய்ய எண்ணும்
- முழு மோசக்காரன் தானே முடிவில் நாசமாவான்!
- அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே
- எண்ணங்கொண்ட பாவிகள் மண்ணாய் போகநேருமே!
- வேஷங்கண்டு மயங்கியே வீணாக ஆசை கொண்டு
- மோசமும் போன பின்னால் மனவேதனை
- யடைவதாலே லாபமென்ன?
- பாலை ஊற்றிப் பாம்பை நாம் வளர்த்தாலும் நம்மையே
- கடிக்கத்தான் வந்திடும் அதை அடிச்சே கொல்ல
- நேர்ந்திடும்!
- மந்திரி குமாரி-1950
இசை : G. ராமநாதன்
பாடியவர்: T. M. சௌந்தரராஜன்
- பிறப்பவர்கள் பலகோடி!
- இறப்பவர்கள் பலகோடி!
- இறப்பில்லாமல் என்றும் வாழ
- தியாகமே உயிர்நாடி!
- புரட்சி எனும் விதைவிதைத்து
- பொது நலமென்னும் பயிர்வளர்த்து
- அடக்கு முறைக்கும் ஆளாவோர்
- அடையும் பரிசும் இதுதானோ?
- மக்கள் வாழ்வை முன்னேற்ற
- மங்கையர் கற்பைக் காப்பாற்ற
- நித்தம் உழைக்கும் உத்தமரின்
- நிலையும் உலகில் இதுதானோ?
- கொந்தளிக்கும் கடல் அலைபோல்
- நெஞ்சமெல்லாம் குமுறுதடா!
- சொந்த உயிர் பிரிவது போல்
- இந்த நாடே துடிக்குதடா!
- வீரக்கனல்-1960
இசை: K. V. மகாதேவன்
- நாம-ஆடுவதும் பாடுவதும் காசுக்கு!
- பலர்-ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு!
- சிலர்-கூடுவதும் குழைவதும் காசுக்கு! -
- காசுக்கு... ... காசுக்கு! (நாம ஆடு).
- பல்லு-இல்லாத வெள்ளைத் தாடி-மாப்பிள்ளை தேடி-தம்
- செல்லப் பெண்ணைத் தந்திடுவோர் கோடானுகோடி! எல்லாம் :பெட்டியிலே இருக்கும் காசுக்கு-(நாம ஆடு).
- பணம்-படைத்தவரின் சொல்லைக் கேட்டு
- அதுக்குத் தாளம் போட்டு-பலர்
- பல்லிளித்துப் பாடிடுவார் பின் பாட்டு
- எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு!(நாம ஆடு),
- அலிபாபாவும் 40 திருடர்களும்-1955
இசை : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்: ஜிக்கி & குழுவினர்
- பெண்ணெனும் மாயப்பேயாம்-பொய்மாதரை
- என் மனம் நாடுவேனோ-அழகினால் உலகமே அழியும்
- மின் விழிப்பார்வை நோயால்-மெய்யறிவு
- தன் நிலை மாறுவேனோ?
- கன்னியர் காமத்தீயாம்-பொய்க்கானலில்
- வெந்துடல் வாடுவேனோ?
- புன் மொழி மாதை நானே-எண்ணியே
- பொய் வழி சேருவேனோ?
- பெண்களைப் பேணுவார்தாம்-பின்னாளிலே
- விண்ணினைக் காணுவாரோ?
- உண்பதோ காயை வீணே!-இங்கெவரும்
- உண்ணுவார் தீங்கனியே!
- அண்ணலைப் பாடுவேனே-மெய்ப்பேரின்ப
- நன்னிலை நாடுவேனே!
- சம்புவின் நாமமதே பணிந்திட
- பந்தமதே நீங்குமே!
- மாயாவதி-1949
இசை : G. ராமநாதன்
பாடியவர்: T. R. மகாலிங்கம்
உள்ளம்: ஏ மனிதா! எங்கே ஓடுகிறாய்?........நீ
எங்கே ஓடுகிறாய்?
வறுமை இருளால் வழி தடுமாறி
மதிமயங்கி குருடனைப் போலே! எங்கே
ஓடுகிறாய்?
உருவம் : வறுமையின் உருவம்! பூமிக்கு பாரம்!
வாழ்ந்தென்ன சாரம்! தீராவி சாரம்!
குழந்தை: (எங்கே அப்பா)
உள்ளம் : ஊழ்வினைப் பயனை வென்ற தாரடா?
உன் நிழல் உன்னை பிரிந்திடுமோடா?
குழந்தை: (பிள்ளை யாரப்பா)
உருவம் :மண்ணில் பிறந்த மனித பொம்மை நாம்
மண்ணுடன் மண்ணாய் கலப்போம் ஒரு நாள்
குழந்தை: (பூஜை செய்யணும் அப்பா)
உருவம் :நாளும் கிழமையும் நலிந்தவர்க் கேது?
நலம் பெற உலகில் மரணமே தோது?
உள்ளம் : வாழ்வதற்கே தான் பிறந்தாய் உலகில்?
உருவம் : வாழ்வ தெவ்விதம் எந்தன் நிலையில்?
உள்ளம் : பொறுமை வேண்டும்!
உருவம் : பொறுத்தது போதும்!
உள்ளம் : உலகைப் பார்!
உருவம் : நரகம் தான்!
நரகம்! நரகம்! நரகம்! !
குமாஸ்தா-1953
இசை: C. பாண்டுரங்கன்
சந்தேகம் தீராத வியாதி-அது
வந்தாலே தடுமாறும் அறிவென்னும்-ஜோதி!
- (சந்)
சிந்தித்துப் பார்க்க விடாது-யாரையும்
நிந்தித்துப் பழிபேச அது தயங்காது! (சந்)
தான் பெற்ற பிள்ளையைத் தாயாரின் உள்ளமே
தவறாக எண்ண வழி செய்யுமே!
காணாத ஏதேதோ கற்பனைகள் காட்டுமே!
வீணாக முன் கோப மூட்டுமே!
தேன் சொட்டும் வாக்கையே விஷமாக மாற்றுமே!
தீயாகப் பிறர் நெஞ்சை வாட்டுமே!
தெளிவான மனதிலும் குழப்பம் உண்டாக்குமே!
திசை மாறித் திண்டாட வைக்குமே! (சந்)
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை-1959
இசை: K. V. மகாதேவன்
- நீயும் நானும் ஒன்று-ஒரு
- நிலையில் பார்த்தால் இன்று! (நீயும்)
- அழகை உனக்கு கொடுத்த இறைவன்
- அறிவில் மயக்கம் கொடுத்து விட்டான்!
- விழியை எனக்கு கொடுத்த இறைவன்
- வழியை காட்ட மறுத்து விட்டான்! (நீயும்)
- எங்கு பிறந்தோம் எங்கு வளர்ந்தோம்
- என்பதுனக்கும் தெரிய வில்லை!
- எதற்குப் பிறந்தோம் எதற்கு வளர்ந்தோம்
- என்ப தெனக்கும் புரியவில்லை! (நீயும்)
- உறவுமில்லை பகையுமில்லை
- உயர்வும் தாழ்வும் உனக்கில்லை!
- இரவுமில்லை பகலுமில்லை
- எதுவும் உலகில் எனக்கில்லை! (நீயும்)
கொடுத்து வைத்தவள்-1963
பாடியவர் : P. சுசிலா
இசை : K. V. மகாதேவன்
- யாருக்குத் தீங்கு செய்தேன்?
- யார் குடியைக் கெடுத்தேன்?
- யார் பொருளை அபகரித்தேன்?
- சீரோடு வாழ்ந்த என்னை
- வேரோடு அழித்தது ஏன்?
- தெய்வமே! இது நீதியா?
- கண்ணில்லையோ? மனமில்லையோ?
- கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ?
- கருணைக் கடல் என்பதெல்லாம் பொய்யோ?
- கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ? (கண்)
- எண்ணமும் கனவாகி இடி மின்னல் மழையாகி
- கண்களும் கண்ணீர் கடலானதே!
- மங்கல வாழ்வும் பறிபோனதே!
- துயர் சூழ்ந்த என் வாழ்வில் புயல் வீசலாமோ?
- உயிரோடு எனை வைத்து வதைசெய்யலாமோ?(கண்)
- என்னைப் படைத்ததும் ஏன்?
- இன்பங் கொடுத்ததும் ஏன்?
- இது போலே பாதியிலே தட்டிப் பறித்ததும் ஏன்?
- அன்பை வளர்த்ததும் ஏன்?
- ஆசையைத் தந்ததும் ஏன்?
- துன்ப மெனும் நெருப்பாற்றில்
- எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்? (கண்)
- செய்த பிழை என்ன?
- தேகம் இருந்தென்ன?
- உய்யும் வழி என்ன?
- உனது தீர்ப் பென்ன?
- பாசவலை-1959
இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்: C. S. ஜெயராம்
ராஜீ:எங்கே?........ எங்கே?........ நீ எங்கே?
- குங்குமச் சிமிழே ! கோபுரவிளக்கே!
- தங்கக் கலசமே! தாமரைப் பூவே!
- (எங்கே)
- திருமுகத்தின் அழகை நிலாதிருடிச் சென்றதோ?
- செவ்விதழைக் கொவ்வைக் கனி கவ்விக் கொண்டதோ?
- கருவிழிகள் புள்ளி மானைக் கலந்து கொண்டதோ? என்
- கண்பட்டுத்தான் காலம் உன்னைக் கவர்ந்து சென்றதோ?
- (எங்கே)
- மழலை மொழியை கிளிகளுக்கு வழங்கி விட்டாயோ?
- மண்ணை விட்டு விண்வெளியில் பறந்து விட்டாயோ?
- நிழலைப்போல நேருவை நீ தொடர்ந்து விட்டாயோ?
- நிம்மதியாய் அமரவாழ்வை அடைந்து விட்டாயோ?
- (எங்கே)
சாந்தி:பூத்திருக்கும் ரோஜாப்பூவில் மணமில்லையா?அந்த
- மணத்தைப் போல் உன்மனசுக்குள்ளே நானில்லையா?
- நேருமாமா சொன்ன சொல்லும் நினைவில்லையா? உன்
- நேரிலேதான் நானிருக்கேன் தெரியலையா?
- குங்குமச் சிமிழும் கோபுரவிளக்கும்
- தங்கக் கலசமும் தாமரைப் பூவும்
- இங்கே......இங்கே......நான் இங்கே!
- பொன்னான வாழ்வு-1967
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: T. M. சௌந்தரராஜன் & ராஜேஸ்வரி
- இன்பமோ! துன்பமோ! எதுவுமே நில்லாதே!
- இது... இயற்கை நியதி!
- பாட்டு
- நம் ஜீவியக் கூடு - களிமண் ஓடு!
- ஆசையோ-மணல் வீடு!
- நம்
- ஆசையோ-மணல் வீடு!
- சுக வாழ்வு தான் நாடுவோம்!
- துயர் சூழ்ந்து நாம் வாடுவோம்!
(நம் ஜீவி)
- தவறுகள் அதிகம் செய்வோம்!
- தலை விதியென நாம் கொள்வோம்!
- சொல்லும்
- தைரியம் இழந்து வீணே-
- நாம்
- சமுக அடிமைகள் ஆவோம்.
(நம் ஜீவி)
- தூற்றிடும் உலகமே-நமைப்
- போற்றுதல் சகஜமே!-மனம்
- சோராதே எதிலுமே!
- தோல்வி கண்டு அதை எண்ணி வீணிலே
- சோக பிம்பம் ஆகாதே!
- மனமே நோகாதே! காலம்
- மாறும் மறவாதே!
குமாஸ்தா-1953
இசை: C. N. பாண்டுரங்கன்
- இறந்த கால வாழ்வை எண்ணி ஏங்காதே!
- எதிர்கால இன்ப வாழ்வை உதறித்தள்ளாதே-மனமே.
- (இறந்த)
- பறந்து போகும் வானம்பாடி ஜோடி பார்!-அவை
- பாடும் இனிய காதல்கீதம் தன்னைக்கேள்!-மனமே
- (இறந்த)
- அறுந்து போன பின்னும் அந்த யாழிலே!-புதிய
- நரம்பை மாட்டி நாதம் சேர்ப்பதில்லையா?
- சரிந்து போன வீட்டை இந்த உலகிலே-புயலால்
- சரிந்து போன வீட்டை இந்த உலகிலே-மீண்டும்
- பழுது பார்த்துக் குடியிருப்பதில்லையா?- மனமே
- (இறந்த)
- பிறந்த ஜென்மம் மறைவதெங்கும் சகஜமே-மண்ணில்
- பிறந்த ஜென்மம் மறைவதெங்கும் சகஜமே!-இதை
- மறந்து வீணில் வருந்தி என்ன லாபமே!
- நிறைந்த துன்பம் நீங்கி வாழ்வில் இன்பமே!
- சிறந்து வாழும் வழியைத் தேட வேணுமே!-மனமே
- (இறந்த)
ஆசை அண்ணா அருமைத்தம்பி-1955
இசை: K. V. மகாதேவன்
- உம்.... சாவு....சாவு....
- சஞ்சலம் தீர்க்கும் மருந்து-அது
- சாந்தியும் நிம்மதியும் தரும் விருந்து!
- பஞ்சம் பசிப்பிணியால் தவிப்பவர்க்கு-இனி
- அஞ்சேல் என அபயம் அளிக்கும்!
- நெஞ்சத் துயர் சுமையால் துடிப்பவர்க்கு-அது
- நீங்காத அமைதியைக் கொடுக்கும். (சஞ்சலம்)
- சாவின் மடியில் தான் கவலையில்லை- செத்தும்
- சாகாமல் வாழும் இந்த நிலமையில்லை!
- வாழ்வுமில்லை-சாவில் தாழ்வுமில்லை!
- நானுமில்லை-அங்கே நீயுமில்லை-! (சஞ்சலம்)
- அழுக்கு.......அழுக்கு......
- உள்ளே அழுக்கிருக்க
- வெளியழுக்கை விலக்க
- நினைப்பது ஏன் மட நெஞ்சமே-உற்று
- நினைத்துப் பார் நீ இதைக் கொஞ்சமே!
- குள்ள நரித்தனக் கள்ளம் கபடங்கள்
- உள்ளத்தில் ஒரு கோடியுண்டு-அதை
- வெள்ளைத்துணியாலும் வெல்லம் போல்சொல்லாலும்
- மூடி மறைப்பவர்கள் உண்டு-அந்த
- மனிதர் அழுக்கை எண்ணிப்பாரு-அதை
- அகற்ற நல்லவழி கூறு! -
மருத-17
- இந்த
- சிக்கை அறுத்து விட முடியும்-அந்த
- சிக்கை யாரால் அறுக்க முடியும்?
- பக்குவம் அடையாத பாழ் மனம் தன்னையே
- பாசக் கொடியும் பின்னிப் பற்றி படருதே!
- மக்கள் மனைவி சொந்தம்!
- மாதா பிதாவின் சொந்தம்!
- திக்கித் திணறி நெஞ்சைத்
- திண்டாடச் செய்யுதே-அந்த
- சிக்கையாரால் அறுக்க முடியும்?
பிறந்த நாள்-1962
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
காசு பணம் செலவழித்து கல்லோடு மண்சேர்த்து
- ஆசையினால் மனிதன் அமைப்பதெல்லாம் கலைக்கோயில்!
- மாசில்லா அன்பின் வடிவாக ஆண்டவன்
- காசினியிலே படைத்த கண்கண்ட திருக்கோயில்!
- ஈன்று வளர்த்து இரவு பகல் கண்விழித்து
- ஈயெறும்பு மொய்க்காமல் இன்னல் பல சுமந்து
- பாலூட்டி தாலாட்டி பரிவோடு ஆளாக்கி
- வாழவைக்கும் தியாகியாம் மாதாவே பெரியகோவில்!
- பெரியகோயில் என்றே உலகினில் எந்நாளும்
- பேர்பெற்று விளங்கும் கோயில்!
- அரியகோயில் ஜாதிமத பேதமின்றியே
- அனைவர்க்கும் உரிய கோயில்!
- தருமநெறி இதுவென்று நமக்கெல்லாம் உணர்த்தியே
- சன்மார்க்கம் வளர்க்கும் கோயில்!
- தாயெனும் தூய திருக்கோயிலைப் போற்றி
- வாயார வாழ்த்துவமே!
பெரிய கோயில்-1958
இசை : K. V. மகாதேவன்
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
- சத்தியமே லட்சியமாய் கொள்ளடா.
- தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!....(சத்)
- (பாட்டு)
- சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
- தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!.....
- எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே-உன்னை
- இடற வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே!
- அத்தனையும் தாண்டிக் காலை முன் வையடா!-நீ
- அஞ்சாமல் கடமையிலே கண் வையடா! (சத்)
- குள்ளநரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்!
- நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும்!
- எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா-அவற்றை
- எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா!...(சத்)
நீலமலைத் திருடன்-1957
K. V. மகாதேவன்
பாடியவர்: T. M. சௌந்தரராஜன்
Both :வலை வீசம்மா வலை வீசு!
- வாற மீனுக்கு வலை வீசு!
பெண் :வளையல் ஓசை கேட்டா-சிலது
- வந்திடும் முன்னாலே!
ஆண் :நிலையை மறந்து நிண்ணே-சிலது
- மயங்கிடும் தன்னாலே!
- அலையைப் போல நெளியும்-சிலது
- ஆளைக் கண்டு ஒளியும்!
பெண் :ஆட்டங் காட்டி அலையும்!-சிலது
- நோட்டம் பாக்க வளையும்!
பெண் :கண்ணுக்குத்தப்பி தூண்டிக்குத்தப்பி
- திரியும் மீன்கள் பலவுண்டு!
ஆண் :கரையின் பக்கமா தலையைக் காட்டும்
- கருக்கல் இருட்டைத் துணை கொண்டு!
- காலம் நேரம் சமயம்-பாத்து
- காலைக் கவ்விப் பிடிக்கும்!
பெண் : தேளைப் போல கடிக்கும்-சிலது
- ஆளின் உயிரைக் குடிக்கும்!
Both : சின்ன மீனுக பெரிய மீனுக்கு!
- இரையாய்ப் போகும் அநியாயம்!
- என்ன ஞாயம்? இனத்துக்கு இனத்தால்
- ஏற்படலாமோ அபாயம்!
பெரிய கோயில்-1958
இசை: K. V. மகாதேவன்
- கொஞ்சும் மொழி பெண்களுக்கு
- அஞ்சா நெஞ்சம் வேணுமடி!
- வஞ்சகரை எதிர்த்திடவே
- வாளும் ஏந்த வேணுமடி....
- (கொஞ்)
- மங்கம்மா பரம்பரையில் பிறந்தவரன்றோ?-நாம்
- மானங் காக்க போர் புரிந்தால் அதிசயமுண்டோ?.....
- மங்காத ஒளி விளக்காய் மாசுஇல்லா மாணிக்கமாங்
- மண்மீது புகழுடனே வாழ்ந்திடவே இந்நாளில்
- (கொஞ்)
- வம்பு செய்யும் ஆணைக் கண்டு பதுங்கக்கூடாது.
- அவன் வாலை ஒட்ட நறுக்கிடாமல் விடவும் கூடாது!
- அம்பு விழி மங்கையர்கள் பொங்கி மட்டும் எழுந்து
- விட்டால் அட்டகாசம் செய்பவர்கள் அடங்கிடுவார் தன்னாலே
- (கொஞ்)
- அல்லி அரசாணிமாலை படித்ததில்லையோ?.. அவள்
- அர்ச்சுனனை அடக்கியதாய்க் கேட்டதில்லையோ?....
- அடிமை கொள்ளும் ஆடவரின் கொடுமைகளை திருத்திடுவோம்;
- அறிவின் திறமையினால் உலகையெல்லாம் ஆண்டிடுவோம்!
- (கொஞ்)
நீலமலைத் திருடன்-1957
இசை: K. V. மகாதேவன்