நன்னூல் எழுத்ததிகாரம் 2. பதவியல்
நன்னூல் விருத்தியுரை
தொகு(புத்தம் புத்துரை எனப்படும் விருத்தியுரை)
உரையாசிரியர்: மாதவச் சிவஞான அடிகளார்
தொகு2. பதவியல்
தொகு1. பதம்
தொகுநூற்பா: 128
- (பதம் இரண்டு)
- எழுத்தே தனித்துந் தொடர்ந்தும் பொருடரிற்
- பதமா மதுபகாப் பதம்பகு பதமென
- இருபா லாகி யியலு மென்ப. (01)
நூற்பா: 129
- (ஓரெழுத்தொரு மொழி)
- உயிர்மவி லாறுந் தபநவி லைந்தும்
- கவசவி னாலும் யவ்வி லொன்றும்
- ஆகு நெடினொது வாங்குறி லிரண்டோ
- டோரெழுத் தியல்பத மாறேழ் சிறப்பின. (02)
நூற்பா: 130
- (தொடரெழுத்தொருமொழி)
- பகாப்பத மேழும் பகுபத மொன்பதும்
- எழுத்தீ றாகத் தொடரு மென்ப. (03)
நூற்பா: 131
- (பகாப்பதம்)
- பகுப்பாற் பயனற் றிடுகுறி யாகி
- முன்னே யொன்றாய் முடிந்தியல் கின்ற
- பெயர்வினை யிடையுரி நான்கும் பகாப்பதம். (04)
நூற்பா: 132
- (பகுபதம்)
- பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலின்
- வருபெயர் பொழுதுகொள் வினைபகு பதமே. (05)
நூற்பா: 133
- (பகுபதவுறுப்புக்கள்)
- பகுதி விகுதி யிடைநிலை சாரியை
- சந்தி விகார மாறினு மேற்பவை
- முன்னிப் புணர்ப்ப முடியுமெப் பதங்களும். (06)
நூற்பா: 134
பகுதி
தொகு- தத்தம்,
- பகாப் பதங்களே பகுதி யாகும். (07)
நூற்பா: 135
- (பண்புப் பகுதிகள்)
- செம்மை சிறுமை சேய்மை தீமை
- வெம்மை புதுமை மென்மை மேன்மை
- திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதிர்
- இன்னவும் பண்பிற் பகாநிலைப் பதமே. (08)
நூற்பா: 136
- (பண்புப் பகுதிகள் புணர்ச்சியி்ல் அடையும்மாற்றம்)
- ஈறு போதல் இடையுகர மிய்யாதல்
- ஆதி நீட லடியகர மையாதல்
- தன்னொற் றிரட்டன் முன்னின்ற மெய்திரிதல்
- இனமிக லினையவும் பண்பிற் கியல்பே. (09)
நூற்பா: 137
- (தெரிநிலைவினைப்பகுதிகள்
- நடவா மடிசீ விடுகூ வேவை
- நொப்போ வௌவுரி ஞுண்பொருந் திருந்தின்
- தேய்பார் செல்வவ் வாழ்கே ளஃகென்
- றெய்திய விருபான் மூன்ற மீற்றவும்
- செய்யெ னேவல் வினைப்பகாப் பதமே. (10)
நூற்பா: 138
- (ஏவற்பகுதி)
- செய்யென் வினைவழி விப்பி தனிவரிற்
- செய்வியென் னேவ லிணையினீ ரேவல். (11)
நூற்பா: 139
(வினைப்பகுதியின் புறனடை)
- விளம்பிய பகுதிவே றாதலும் விதியே. (12)
விகுதி
தொகுநூற்பா: 140
- (வினை, பெயர் விகுதிகள்)
- அன்னா ளள்ளா ளர்ரார் பம்மார் // அன் ஆன் அள் ஆள் அர் ஆர் பம் மார்
- அஆ குடுது றென்னே னல்ல // அஆ குடு துறு என் ஏன் அல் அன்
- னம்மா மெம்மே மொம்மொ டும்மூர் // அம் ஆம் எம் ஏம் ஒமோடு உம்மூர்
- கடதற யையா யிம்மி னிர்ரீ // கடதற ஐ ஆய் இம்மின் இர் ஈர்
- ரீயர் கயவு மென்பவும் பிறவும் // ஈயர் கயவும் என்பவும் பிறவும்
- வினையின் விகுதி பெயரினுஞ் சிலவே. (13) // வினையின் விகுதி பெயரினும் சிலவே. (13)
இடைநிலை
தொகுநூற்பா: 141
- (பெயரிடைநிலை)
- இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பலிற்
- பகுதி விகுதி பகுத்திடை நின்றதை
- வினைப்பெ ரல்பெயர்க் கிடைநிலை யெனலே. (14)
நூற்பா: 142
- (இறந்தகால வினையிடைநிலை)
- தடறவொற் றின்னே யைம்பான் மூவிடத்
- திறந்த காலந் தருந்தொழி லிடைநிலை. (15)
நூற்பா: 143
- (நிகழ்கால விடைநிலை)
- ஆநின்று கின்று கிறுமூ விடத்தின்
- ஐம்பா னிகழ்பொழு தறைவினை யிடைநிலை. (16)
நூற்பா: 144
- (எதிர்கால விடைநிலை)
- பவ்வ மூவிடத் தைம்பா லெதிர்பொழு
- திசைவினை யிடைநிலை யாமிவை சிலவில. (17)
நூற்பா: 145
(காலங்காட்டும் விகுதி)
- றவ்வொ டுகரவும்மைநிகழ் பல்லவும்
- தவ்வொ டிறப்பு மெதிர்வும் டவ்வொடு
- கழிவுங் கவ்வோ டெதிர்வுமின் மேனவல்
- வியங்கோ ளி்ம்மா ரெதிர்வும் பாந்தஞ்
- செலவொடு வரவுஞ் செய்யுநிகழ் பெதிர்வும்
- எதிர்மறை மும்மையு மேற்கு மீங்கே. (18)
வடமொழியாக்கம்
தொகுவழக்கில் உள்ளமொழி ஒன்று, பிறமொழிக் கலப்பின்றி வழங்கும் மொழியாக இருப்பது அாிதாகும். வாணிகத்தொடா்பின் காரணமாகவும், மதப் பரப்பல் காரணமாகவும், பிறநாட்டு ஆட்சியாளா்களின் தொடா்பாகவும் மொழிக்கலப்பு ஏற்படுதல் இயல்பு. அத்தகு மொழிக்கலப்புகள் தமிழ் மொழியில் ஏற்பட்டுள்ளன. தமிழ் மொழியில் ஏற்பட்டுள்ள பிறமொழிக்கலப்பில், ஆரியமாகிய சமஸ்கிருதம் குறிப்பிடத்தக்கது. இம்மொழிற் சொற்கள் பன்னூறு ஆண்டுக் காலமாகத் தமிழ் மொழியில் இரண்டறக்கலந்து தமிழாகவே காணப்படுகின்றன. குறைந்த அளவில் கலந்த வடமொழிக் கலப்பைத் தொல்காப்பியா் ஏற்றுக்கொண்டு விதியும் செய்துள்ளாா்.
“வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
- எழுத்தொடு புணா்ந்த சொல் லாகும்மே“
நூற்பா: 146
- (ஆரியமொழி தமிழில் வடமொழியாதல்)
- இடையி னான்கு மீற்றி லிரண்டும்
- அல்லா வச்சை வருக்க முதலீறி
- யவ்வாதி நான்மை ளவ்வாகு மையைம்
- பொதுவெழுத் தொழிந்தநா லேழுந் திரியும். (19)
நூற்பா: 147
- (சிறப்புவிதிகள்)
- அவற்றுள்,
- ஏழா முயிரிய்யு மிருவுமை வருக்கத்
- திடையின் மூன்று மவ்வம் முதலும்
- எட்டே யவ்வு முப்பது சயவும்
- மேலொன்று சடவு மிரண்டு சதவும்
- மூன்றே யகவு மைந்திரு கவ்வும்
- ஆவீ றையு மீயீ றிகரமும். (20)
நூற்பா: 148
- ரவ்விற் கம்முதலா லாமுக் குறிலும்
- லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற்
- கிய்யு மொழிமுத லாகிமுன் வருமே. (21)
நூற்பா: 149
- இணைந்தியல் காலை யரலக் கிகரமும்
- மவ்வக் குகரமு நகரக் ககரமும்
- மிசைவரும் ரவ்வழி யுவ்வு மாம்பிற. (22)
நூற்பா: 150
- (சிறப்பெழுத்தும் பொதுவெழுத்தும்)
- றனழ எஒவ்வு முயிர்மெய்யு முயிரள
- பல்லாச் சார்புந் தமிழ்பிற பொதுவே. (23)
பதவியல் முற்றும்
தொகுபார்க்க:
- [[]]
- நன்னூல் மூலம்
- நன்னூல் எழுத்ததிகாரம் 1. எழுத்தியல்
- [[]]