நல்ல மனைவியை அடைவது எப்படி

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

நல்ல மனைவியை
அடைவது எப்படி



வல்லிக்கண்ணன் எழுதியது



விலை 3 அணா.


பதிப்பாளர் :

எம். சூரி,

14-5, குப்பையர் தெரு,

சென்னை-1.

நல்ல மனைவியை அடைவது எப்படி?


‘மனைவி தாமரை போல. கண்ணிர் கூடினால், தாமரையும் கூடவே ஓங்கி மேல்பரப்பில் வந்து திகழ்கிறது. தண்ணிர் குறைந்தால், தாமரையும் தாழ்ந்து நீர்ப்பரப்பை அலங்கரிக்கிறது மனைவியும் வாழ்வின் ஏற்றத்திலும் தாழ்விலும் கணவனோடு ஒன்றி, வாழ்வைச் சிறப்பித்து தானும் மகிழ்கிறவள்’

இப்படிச் சொன்னார் ஒரு நண்பர். உவமை அழகாகக் தான் இருக்கிறது. வாழ்வின் உண்மை எல்லோருக்கும் இதேமாதிரித்தான் விளங்குகிறதா?

வாழ்வில் இனிமையும் சிறப்பும், மகிழ்வும் வளமும், அமைதியும் பற்றுதலும் தரவேண்டிய கல்யாணம் தனிமனித வாழ்வைமட்டுமல்ல; சமுதாய நலனையும், உயிர்க்குல நலனையும் பாதிக்கிற மகத்தான பிரச்சனையாகி விட்டது.

கல்யாணம் செய்து கொண்டவர்களில் பலர் 'ஏன் நாம் இந்தக் கல்யாணத்தைச் செய்து கொண்டோம் என்று வருந்துவது பலருமறிந்ததே. அவர்களின் மனக்கசப்பு மனைவி, குழந்தைகள் மீது வெறுப்பாக மாறுகிறது. அதனால் 'ஒழிஞ்சு போ; நாசமாகு; தொலை' என்று ஏச்சுமாரிகளும் உதைகளும் குடும்ப வாழ்விலே சர்வசாதாரண நிகழ்ச்சிகளாகின்றன.

ஏன்? ஒத்த குணமுடைய ஆணும்பெண்ணும் இணக்கப்படுவதில்லை கல்யாணத்தின் மூலம். இன்றையக் கல்யாணம் கோளாறான சடங்காகவே விளிர்கிறது.

நம் நாட்டில் கல்யாணம் எப்படி முடிவு செய்பப்படுகிறது என்பது எல்லோரும் அறிந்ததே. இன்று கல்யாணமும் பிஸினஸ் ரீதியில் தான் நடத்தப்படுகிறது.

இந்த வியாபாரத்திலே, பெண் மட்டமான சந்தைச்சரக்கு மாப்பிள்ளே கொஞ்சம் முறுக்கான சரக்கு. பணம் ஏராளமாக இருந்தால், பெண்ணை கிழவனுக்கும் நோயாளிக்கும், குருடு செவிடு ஊமைகளுக்கும் கூட தாலிகட்டிக் கொடுக்கத் தயங்குவதில்லை பெண்ணேப்பெற்றவர்கள். பண ஆசையில் குஷ்டரோதி, பைத்தியம் பிடித்தவன், ஆண்மை யற்ற அவிபோன்றவர்களுடன் தம் பெண்ணேக் கூட்டியனுப்பத் தயங்காத பெரியோர்களும் இருக்கிறார்கள்.

அதே மாதிரி, பணக்காரன் மகளை-அவளுக்கு சொத்து நிறையக் கிடைக்கும் எனும் காரணத்துக்காக-அவள் ஊமையோ, குருடோ, சீக்காளியோ, எப்படி விருப்பினும் சரி, கவலைப்படாமல் தங்கள் மகனுக்கு மணம் முடிக்குத் துணியும் பெற்றேர்களும் மலிந்து காணப்படுகிறார்கள் இன்றைய சமுதாயத்திலே.

இந்த வியாபாரத்துக்கு கண்துடைப்பாக உதவுகிறது ‘பொருத்தம் பார்க்கிற’ கேலிக்கூத்து. பொருத்தம் பார்க்கிறார்களாம் பொருத்தம்

ஜாதக ஓலை, நட்சத்திரங்கள், கிரகக் கட்டம், பெயர்கள் இவைகளை கவனித்து விட்டு, அவனுக்கும் அவளுக்கும் சரியான பொருத்தம் என்று முடிவுகட்டி விடுவது முட்டாள்தனம் அல்லாமல் வேறென்ன ?

முறைதவறாமல் - உறவு விட்டுப் போகாமல் - இருக்க சிறிதேனும் பொருத்தமில்லாத, ஏறு மாறான பண்புகளுடைய பெண்ணையும் ஆணையும் ஜோடிசேர்த்து விடுகிறார்கள். இதனால் இருவர் வாழ்வும் பாழாகிறது.

மாமன் மகனைக் கல்யாணம் செய்யவேண்டும் என்ற கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகிறவர்களும், அத்தைமகளையே மணம் செய்ய வேணும் என்று முறைக்குள் அடங்குகிறவர்களும், இம்மாதிரி உறவு முறை "முடிச்சுப் போட்டு" எப்படியாவது கல்யாணம் செய்துவைக்க ஆளாகிறவர்களும் இனைறைய சமுதாயத்தில் ஏராளம்.

'அத்தைமகள் வயதுக்கு மூத்தவளாக இருந்தாலும் பாதகமில்லை எத்தனை வயசு அதிகமோ அத்தனை புளியங்கொட்டையை முழுங்கிவிட்டால் சரியாகிவிடும்' என்று 'பொட்டைக் கணக்கு' போட்டு 'அட்ஜஸ்ட்' செய்கிற மக்களும் இருக்கிறார்களே, என்ன சொல்ல !

***

என்னத்தைச் சொல்வதற்கிருக்கிறது! நாட்டு நிலைமையே இந்த ரகம்தானே!

பிள்ளைப் பெறுவத்றகாக அரசமரத்தைச் சுற்றுபவர்களும், அர்ச்சனை பண்ணுகிறவர்களும், 'நாகப்பிரதிட்டணை' அது இது என்று வீண் செலவு செய்கிறவர்களும், சாக்கடையில் நெளியும் பிள்ளைப் பூச்சியை உயிரோடு விழுங்கிவிட்டால், பிள்ளை உண்டாகாமலிருப்பவள் கருத்தரித்து விடுவாள் என்றெல்லாம் மடத்தனமாக நம்பி அனுஷ்டித்து வருகிறவர்கள் பெருத்தநாட்டிலே அறியாமை அரசு செலுத்துவதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது ?

இத்தகைய சமுதாயத்தில் எதுதான் இயற்கையோடு இயைந்ததாக அமைந்து வளரும் என எதிர் பார்க்க முடியும்? எந்தத் தனியொரு பண்பைத் தான் பரிகசிக்க முடியும்? எல்லாமே பரிகசிப்புக்கும் பழிப்புக்கும் உள்ளாக்கப்பட வேண்டி விஷயங்களாகத்தானே இருக்கின்றன!

பார்க்கப்போனால், மனிதகுலத்தின் சரித்திரமே இப்படி 'சிரிச்சு துப்புவதற்கு' உரிய சின்னத்தனங்கள் நிறைந்ததாகவே உள்ளது. வாழ்வின் முக்கிய பிறச்னையான கல்யாணம் எப்படி நடைபெறுகிறது பொருத்தங்கள் பார்ப்பது எவ்வெத தன்மையில் உள்ளன என்பதைக் கூறும் கட்டுரைகளையும் நூல்களையும் படித்தால் வேடிக்கை மனிதர்கள் நிறைந்த விந்தை உலகம் தான் இது" என்று எண்ணத் தோன்றும்.

நம் நாட்டில் சீர்வரிசைகள், பெயர்ப் பொருத்தங்கள், ஜாதகப் பொருத்தங்கள் பார்க்கிறார்களா! நாகரிகமும் பெண்ணுரிமையும் மிகுந்த மேல்நாடுகளில் அவரவர்களே 'பொருத்தம்' பார்த்துக் கொள்கிறார்கள்!

காதல் என்று சொல்லி எங்கும் திரியவேண்டியது. கொஞ்சநாள் கழித்து 'என்னைக் கல்யாணம் செய்துகொள்ள உனக்குச் சம்மதமா' என்று அவன் கேட்க வேண்டியது. இணங்கவோ, மறுக்கவோ அவளுக்கு உரிமை உண்டு. அவள் மனமிசைந்தால், விரலேபோடு ஒரு மோதிரம் 'என்கோஜ்மென்ட் ரிங்' மீண்டும் உல்லாசமாகத் திரியும் இந்த இன்ப மைனாக்கள் கல்யாணம் செய்து கொள்வது எப்பவேண்டுமானாலும் நிகழலாம். இதற்கு எப்பவேண்டுமானாலும் நிகழலாம். இதற்கு நடுவிலேயே அலுப்புற்று அபிப்பிராயபேதம் கொண்டுவிலகி விடுவோரும் உலர். கல் யாணம் செய்து கசப்புற்று விவாகரத்து பண்ணிக் கொண்டு வேறு ஜோடி நாடித்திரிவோரும் உளர்.

அதாவது, அவரவர்களே இஷ்டம்போல் பழகி 'உனக்கும் எனக்கும் பொருத்தம் சரியா?' என்று தாங்களாக்வே தீர்மானிக்க முயல்கிறார்கள். மிஸ்டர் ஏயும் மிஸ் பியும் பல மாதங்கள் ஒன்றாக அலைகிறார்கள். ஜாலி பண்ணுகிறார்கள். பரஸ்பரம் பிடிக்கவில்லை, ஒத்து வரவில்லையா ? சரி போ! பழகியது வரை ஜாலி. பிறகு உறவு காலி! அப்புறம் ஏ ஒரு மிஸ் டியையும், பி மிஸ்டர் ஈ யையும் வேட்டையாட ஓடுகிறார்கள். பிடித்துவிட்டாலோ.... கேட்பானேன் - மிஸ்டர் ஏ யும் பி யும் கை கோர்த்து மணம் புரியவும், அவள் மிஸஸ் பி ஆகிவிடுகிறாள்.

இம் முறையில் பல மலர்களோடு உறவு கொள்ளத் துடிக்கும் வண்ணத்துப்பூச்சித் தனத்துக்கு நல்ல விருந்து கிடைக்க வழியிருக்கிறது!

பெரியவர்கள் தேர்ந்தெடுத்து மணமகளின் சம்மதத்தைப் பெறுவதற்காக, சில இனத்தினர் ஒரு வழக்கத்தைக் கையாளுகிறார்களாம். அவனையும் பெண்ணையும் இரவில் தனி யறையில் படுத்திருக்க அனுமதிப்பார்களாம். காலையில் எழுந்து வரும்போது அவள் 'சிரித்த முகமும் சீதேவியு' மாகக் காட்சி யளித்து, தலையசைத்தால் அந்த மணமகனுக்கே அவள் மனைவியாக்கப் படுவாள். அவள் எரிந்து விழுந்து வெறுத்துப் பேசினால், அவன் மனு தள்ளுபடி. வேறு மாப்பிள்ளை தேடுவார்களாம்.

இவ்விதம், மணமகளாக வேண்டியவனே இளைஞனோடு பழகி அறிவதற்குப் பதிலாக, பெண்ணைப் பெற்றவளே மகளை மணம் புரியக் கோருகிற வனோடு பழகி உணரும் முறை சில ஜாதியினரிடம் இருக்கிறதாம்.

உலகத்தில் உள்ள விசித்திர வழக்கங்களுக்கு சில ஸாம்பிள்கள் கொடுத்தேன். கல்யாண விநோதங்களை எழுதுவது என் நோக்கம் அல்ல. பொருத்தம் பார்க்கிற விவகாரம் இந்த ரீதியில் இருந்தால், அப்புறம் ஏன் கல்யாண விளைவுகள் விபரீதமாகப் போகா?

யாராவது ஏதாவது சொன்னால் பெரிய அம்மாளாக அடித்துப் பேசுவார்கள்: 'எங்க காத்தில் எல்லாம் எங்களை மாப்பிள்ளை பிடத்திருக்குதா, பெண் பிடிச்சிருக்கா, என்று கேட்டா கல்யாணம் செய்தார்கள்? நாங்கள் குடும்பம் நடத்திக் குப்பை கொட்ட வில்லையா ? எல்லாம் பழகப் பழகச் சரியாகி விடும்.'

இந்த அலட்சிய மனோபாவம் நல்வாழ்வு வாழ வழி செய்யாது என்பதற்கு இன்றைய சமுதாய வாழ்வே சாட்சி.

***

எவனோ ஒருவனையும் எவளோ ஓருத்தியையும் வாழ்க்கைத் துணைவர்களாகச் சேர்க்க உதவுகிற கல்யாணம் சிறு பிள்ளை விளையாட்டல்ல. உடலும் உள்ளமும் ஒன்றுபடும் வாழ்க்கைப் பிணைப்பு அது. அத்துடன், இன்ப வாழ்வுக்கும் அமைதி ஆனந்தங்களுக்கும் உதவுகிற ஆத்மீகத் தொடர்பும் உடையது. ஆனால் காலப்போக்கில் கல்யாணம் இயந்திர ரீதியான சடங்கலாகி விட்டது. அனைத்தும் அர்த்தமற்ற வழக்கங்களாகி விட்டன.

பெண்ணிடமும் ஆணிடமும் உண்மையான அன்பும், புனிதப் பண்பும் மனித்ததுவமும், பலகுண நிறைவுகளுமிருப்பின் தாலி தேவையில்லை சடங்குகள் தேவயில்லை, 'தெய்வத்தில் சன்னிதி கின்றன என்பதை சிந்திக்கத் தெரிந்த-வாழ்வை விழிப்புடன் கவனிக்கிற-யாரும் உணர முடியும்,

சரி. அவ்வாறெனில், கல்யாண ஒப்பந்தம் எப்படி அமையலாம்? கல்யாண தர்மங்களும் ஆண் பெண் உறவு முறைகளும் எவ்விதம் அமைந்தால் நலமாக இருக்கும்? நல்வாழ்வு வாழ விரும்புகிற இளைஞர்கள் நல்ல மனேவியை எப்படி அடைவது? கன்னியர் நல்ல கணவனைப் பெறவழி என்ன?

நாட்டுக்கு நல்லது காட்ட விரும்புகிறவர்கள் ஆராய்ந்தாக வேண்டிய பிரச்னைகள் இவை.

நாகரிக வழக்கம் என்பதற்காக அமெரிக்க, ஆங்கிலோ மோஸ்தர்களை காப்பியடிப்பதைவிட - அவனும் அவளும் கண்டதும் காமுற்று, சில தினங்கள் பழகி உறவாடி விட்டு பின் 'டபாய்த்து' விடுவது; அல்லது கல்யாணம் செய்து கொண்டு, சீக்கிரமே வெறுப்புற்று விவாகரத்து செய்து கெடுவது முதலியவற்றை விட - கீழ்திசை நாடுகளில் பெரியவர்களாகப் பார்த்து ஆராய்ந்து முடித்து வைக்கிற கல்யாணங்களில் பல வெற்றிகரமான வாழ்க்கை ஒப்பந்தளாகத் திகழ இடமிருக்கிறது.

ஆனால், பண ஆசை, பெரிய இடத்துச் சம்பந்தம் என்பன போன்ற சின்னத்தன நினைவுகள் குறுக்கிடுகிற போது தான், புரோக்கர்த்தனமும் புரோகிதத்தனும் பணத்துக்கு அடிமையாகி, யாரையும் யாருக்காவது கட்டி விட ஈடுபடும் போது தான், கல்யாணம் மணமற்று வாழ்வு கெட்டுக் குட்டிச் சுவராகிறது. இப் பண்பு மிகுதியும் பேயாட்டம் போடுவதனால் தான் வாழ்வு சீர் குலைகிறது.

இளைஞனும் இளைஞியும் சந்தித்து உறவாடும் போது முதலில் சரியாக எடைபோடுவதும், பண்பு, குணநலம் முதலியவற்றை கணிப்பதும் சாத்தியமே யல்ல. இயற்கையான லெக்ஸ் அரிப்பு பரஸ்பரம் ஒரு மோகத்தையும், பார்வை துண்டுகிற ஸ்பரிசம், அணைப்பு, கலவி முதலிய பசிகளைத் தீர்த்துக் கொள்ள வேணும் என்கிற வேகத்தையும் ஈடு செய்வதில் தான்-அதற்குரிய சூழ்ச்சித் திட்டங்கள் வகுப்பதிலே தான்-அவர்கள் கவனம் போகும், அவள் இல்லாமல் தீராது எனும் காமப்பசியும், அவனை அணேயாமல் தீராது என்கிற வெறியும் தெய்வீகக் காதல் என்கிற போதையை உண்டாக்கிவிடும். அதனால் கல்யாணம் செய்ய முற்படுகிறார்கள். விலகி யிருந்தனால் எழுகிற மோகம் சீக்கிரமே தீர்ந்து விடுகிறது. அண்றாட வாழ்விலே குறுகிய இடத்தில் நெருங்கி வாழ நேர்வதும், உடலோடு உடல் ஒட்ட கிர்வாணமாகப் பழகச் சந்தர்ப்பம் ஏற்படுவதும் சகஜமானவுடன், உளத்தோடு உளம் ஒட்டவில்லை என்கி உண்மையை இருவரும் புரிந்து கொள்ளத் தாமதம் ஆவதில்லை. பிறகு என்ன ? கசப்பு...... வெறுப்பு சண்டை. ஊடல்...ஒடல் தான்! பிறகு, பிளவு. விவாகரத்து!

இது நாகரிகப் பாதை. நம் காட்டுப் பாதை தெரியாதா !

பெரும்பாலும் 'எல்லாம் வல்ல இறைவன் திருவருளை முன்னிட்டு சர்வ மங்களமும் கூடிய சுபயோக சுபதினத்தில் கல்ல முகூர்த்தம் பார்த்து பெரியோர்கள் நிச்சயித்து முடிக்கிற கல்யாணங்கள் அவர்களது ஆசை, பணம், சொத்து, அந்தஸ்து முதலிய போலிப்படாடோபங்களின் மீதே எழுவதால், என்ன விளைவுக்கு வழி செய்கின்றன?

'ஒடிப் போனவள்' கதையும், தொழிற்காரியைத் தேடிப் போகிறவன் கதையும் சர்வ சாதாரணமாவது தான் காண்கிற பலன்கள்.

ஓடிப் போகாத 'உத்தமி'களில் பலர் புருஷனோடு பத்தினித்தனம் நடிக்கும் போதே பக்கத்து வீட்டுப் பையனோடு காதல் லீலையாடத் துணிகிறார்கள். அல்லது, வீட்டு வேலைக்காரர்களோடு உறவாடுகிறார்கள். அல்லது, கணவனோடு கூடுவது மகிழ்வளியாக் காரணத்தால் 'கொழுந்தப்பிள்ளை'யோடு கொஞ்இக் கோலக்கலை பயிலும் மதனிகளாக விளங்குகிறார்கள். மருமகளை அணையும் மாமனார்களும், மாமிகளை மகிழ்விக்கும் மருமகப் பிள்ளைகளும், இன்னும் பிற லீலா விநோதர்களும் சமுதாயத்திலே-நாட்டிலே-உலகத்திலே பெருத்துப் போனதன் காரணமே இது தானே!

ஆண் என்கிற 'பாஸிட்டிவ்', பெண் எனும் 'நெகட்டிவ்' இரண்டும் கூடுவதால் எழுகிற ஒளியே குடும்ப இன்பம் என்கிறார்கள். இந்த ஜோடி சேர்க்கும் கல்யாண கைங்கர்யம் உண்மையில், தகுந்த 'பாஸிட்டிவ்' நெகட்டிவ்'களை இணைக்கும் பொறியாக அமையாது போவதால் மின்சாரம் சரியன ஒளி தரும் சக்தியில் பிறப்பதில்லை. மெலிந்து இருளடைகிறது. அல்லது அதிர்ச்சி (ஷாக்) எற்படுகிறது. இந்நிலை மாற வேண்டும் என்று விரும்புவது தானே மனித இயற்கை?

***

'ஒத்த குலம், ஒத்த குணம், ஒத்த நலன்,களுடைய தலைவனும், தலைவியும் சந்திப்பது...... சந்தித்துப் பழக தோழி துணை புரிவது...... பிறகு இருவருக்கும் மணம் முடிக்க ஆவன செய்து உதவுவது என்ற பழந்தமிழ் இலக்கிய முறை பாராட்டத் தகுந்தது.

ஒருவரை ஒருவர் அறியாத-கல்யாணமாகாத-பெண்கள் ஆண்களிலே யாரையும் யாருக்காவது தாலி கட்டி வைக்கும் வழக்கம் தொலைய வேண்டும்' கல்யாணம் செய்ய விரும்புகிறவன் தனக்கு வருகிற மனைவி இப்படி இப்படி யிருக்க வேணும் என விரும்புவது இயல்பு பெண்ணின் பண்பும் அதுவே இவர்களுக்குத் துணைபுரியும் கல்யாணக் கழகங்கள் ஸ்தாபிதமாக வேண்டும்.

எல்லாப் பொருத்தங்களையும், வாழ்வின் தன்மைகளையும் காட்டும் சித்திரம் என நம்பப்படும் ஜாதகக் கட்டங்களைக் கிழித்தெறிந்து விட்டு, ஒவ்வொருவரின் உண்மையான குணசித்திரப் பட்டியல் தயாரிக்க வேண்டும்.

கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறவர்கள் தங்கள் பெயரை, தங்கள் விருப்பு வெறுப்புகளே, தங்கள் குணங்கள் குறைகளே, தங்கள் ஆசை, கனவுகளே, தாங்கள் விரும்புகிற எதிரினத்து நபர் எப்படி யமைய வேணும் என்கிற கருத்தை ஒளிவு மறைவின்றி கழகத்தில் பதிவு செய்ய வேண்டும். அவரவர், போட்டோவும் இணைக்கப்பட வேணும். இவை ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

கழகத்தினர் எல்லா மனுக்களையும் கவனித்து வருவர் ஒரு மனுதாருக்கு ஏற்று ஜோடி என்று தாம் கருதுகிற மற்றொரு மனுவினரை சந்திக்கச் செய்வது அவர்கள பொறுப்பு. மூன்று நான்கு முறைகள் கழக நிர்வாகியின் முன்னிலையிலும், பிறகு கழகத் தோட்டங்களில் தனிமையிலும் சந்தித்து எண்ணங்களைப் பரிமாறி, பாஸ்பரம் புரிந்து கொள்ள உதவி புரியப்படும். தபால் மூலமும் நட்பு வளர உதவலாம். இப்படி மனம் விட்டுப் பழகுவதில் பரஸ்பரம் ஒருவாறு உணர்ந்து தங்களைப் பற்றி தாங்களே தீர்மானிக்க இயலும், அவர்களாக இஷ்டப்பட்டு மணம் புரிகிற போது, பொருந்தா மணத்தின் விபரீத விளைவுகள் நிகழ இடம் ஏற்படாது என எதிர்பார்க்கலாம்.

முதலில் சந்திக்கும் நபர்களில் இருவருக்குமோ அல்லது ஒருவருக்கோ நேரடிச் சந்திப்பு திருப்தியளிக்கவில்லை; எதிர் ஸெக்ஸ் நபர் தனக்கு ஏற்ற துணையாகத் தோன்றவில்லை எனும் அபிப்பிராயபேதம் எழுந்தால் வேறு தகுந்தவர்கை சந்திக்கும்படி கழகம் சந்தர்ப்பம் அமைத்துக் கொடுக்கும்.

இவ்வித உயரிய முறையில் நிர்வகிக்கப்படும் கல்யாணக் கழகங்கள் சிறப்பான பணி புரிய முடியும். ஜெர்மணியைச் சேர்ந்த நகரம் ஒன்றில் இத்தகைய உயர்முறைக் கழகம் ஒன்று பல வருஷங்களாகச் சேவை புரிகிறது என்றும், அதன் கண்காணிப்பில் நிகழ்ந்த திருமணங்கள் நல்ல வாழ்க்கை வெற்றிகளாக திகழ்கின்றன என்றும் விரிவாகக் கூறும் கட்டுரை ஒன்றை ஒரு ஆங்கில சஞ்சிகையில் படித்தேன். இது போல் இன்னும் சில இடங்களிலும் கழகங்கள் இருந்தாலும் இருக்கலாம், இது நல்ல ஏற்பாடு.

கல்யாணம் ஆக வேண்டிய ஆண், பெண்களின் வர்ணனைகளை பத்திரிக்கையில் விளம்பரம் செய்து, தேவைப்படும் மணமகள் அல்லது மணமகனின் வயது, படிப்பு, பிற தகுதிகள் இப்படி இப்படி யிருக்க வேண்டும் என்று அறிவிப்பதை விட மேலே கூறியுள்ள முறை நல்லதில்லையா? பத்திரிக்கை விளம்பரத்தினால் நூற்றுக் கணக்கான மனுக்கள் வந்து குவியும்படியும், பலரும் பலவிதமாகப் பேசி நையாண்டி செய்யவும், வீணர்கள் சும்மா 'விளையாட்டுக்காக' எழுதிப் போடவும் தூண்டுகின்றன. இந்த விவாக முறையை விட கௌரவமானது, உயர்ந்தது, சிறந்தது, நேர்மையானது முன் சொன்ன கழக முறை.

இது போன்ற உயரிய முறை அனுஷ்டானத்திற்கு வர, சமுதாய மக்களின் மனப் பண்பும், அறிவு அபிவிருத்தியும் உயர வேண்டும்.

இன்றைய நிலையிலே, மணம்புரிந்து கொள்ள விரும்புகிற ஒவ்வொரு ஆணும் பெரியோர்கள் தேர்ந்தெடுக்கிற பெண்ணைப்பற்றிய விவரங்களை ஆராய்ந்து அறிந்தும், பெண்ணை ஒன்றிரு முறைகள் நேரில் பார்த்தும், திருப்தியுற்ற பிறகே தன் சம்மதத்தை அறிவிக்க வேண்டும். தனக்கு நிச்சயிக்கப்படும் கணவனின் பண்புகள், குணம் முதலியவை பற்றியும் உறவினர் மூலமாக மேலும், நம்பிக்கைக்குரிய யார் மூலமாகவாவது அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். மகளுக்கோ மகனுக்கோ இஷ்டமில்லாத கல்யாணத்தை எப்படியும் நிறைவேற்றத் துடிக்கக் கூடாது பெரியோர்கள்.

இலக்கிய ரசிகனை ஒருவன் கல்வி வாசனையற்ற முண்டத்தை விரும்பமுடியாது. கலையின்செல்வியான பெண்பணத்தில் மட்டுமே குறியான மண்டூகத்தை தேசிக்கமுடியாது. எழிற்சிலை போன்றவன் குந்தானி உருவினளை ரசிக்கவேண்டும் என எதிர்பார்ப்பதும், பூங்கொடி ஒருத்தி பொத்த பூஷணிக் காய் மாப்பிள்ளைக்கு சரியான ஜோடியாவாள் என நம்புவதும் பேதமை. குட்டையனுக்கு நெட்டச்சியையும், நெட்டையனுக்கு குள்ளவாத்தையும் 'முடிந்துவிட்டு' அவர்கள் வாழ்வு சீர்கெட்டபின் விதிமேல் பழியைப்போடுவதும் மதியினம். இந்த ரகமான தாறுமாறன ஜோடிகள் சேர்க்கப்படும் மணமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது கல்யாணம் செய்துகொள்கிற யுவ யுவதிகளின் கடமையாகும்.

கல்யாணமான பின்னரும், தம்பதிகள் சிறு தவறுகளைப் பாராட்டாமலும், தன்மைகளைப் போற்றத் தவறாமலும் வாழ்தல் நன்று.

புருஷனுக்கு 'என்ன தெரியும்!' என்ற எண்ணம் கொண்டு, அவன் செய்து விடுகிற சிறு தவறையும் பிரமாதப்படுத்திக்கேலி செய்கிற மனேவிமார்கள் இருக்கிறார்கள். அதே போல, எடுத்த தெற்கெல்லாம் மனைவியைக் குறைகூறி எரிந்து விழுந்து, கேலிசெய்து பழிக்கிற புருஷர்களும் அதிகம். இந்தப் பண்பு மன அமைதியைக் குலைப்பது

தன் மனைவி நல்லவளாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு, பெண்ணும் கன் கணவன் நல்லவனாக வர வேண்டும் என விரும்புவது சகஜம்.

ஆசையை உள் அடக்கித் தீய்த்துவிட முயன்று முடியாமல், பிறகு ஆசைத்தீயில் தானும் வாழ்வும் தீய்ந்து போகவிடுவதை விட, எண்ணியது எண்ணிய படி எய்த முயல்வதே நல்லது.

நல்ல நண்பர்களைத் தேர்ந்து, வாழ்வில் மகிழ்வுறுவது போலவே, நல்ல வாழ்க்கைத் துணையை அடைந்து இன்பம் எய்தவேண்டியது அவசியம். பெரியோர்கள் சுயநலத்தை அகற்றி, வாழ்க்கைப் பாதையில் முன்செல்ல விரும்புகிறவர்களுக்கு, நல் வழி காட்டவேண்டும். அது அவர்கள் கடமை.