நூற்றிருபத்தெட்டுச் சீர்களாலான கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

நூற்றிருபத்தெட்டு அடியான் மிகுத்துவந்த கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

தொகு

அருட்பிரகாச வள்ளலார் அருளிய அரியவகை யாப்புச் செய்யுள்

தொகு
(திருச்சிற்றம்பலம்)


திருவடிப்புகழ்ச்சி

தொகு

(திருவருட்பா- முதல்திருமுறை)


(திருச்சிற்றம்பலம்)


பரசிவம் சின்மயம் பூரணஞ் சிவபோக பாக்கியம் பரமநிதியம்,
பரசுகந் தன்மயஞ்சச் சிதானந்த மெய்ப்பரம வேகாந்த நிலயம்
பரமஞானம் பரமசத்துவ மகத்துவம் பரம கைவல்ய நிமலம்
பரமதத்துவ நிரதிசய நிட்களம் பூதபௌ திகாதார நிபுணம்
பவபந்த நிக்ரக வினோத சகளஞ் சிற்பரம் பரானந்த சொரூபம்
பரிசயா தீதஞ்சுயஞ் சதோதயம் வரம்பர மார்த்த முக்த மௌனம்
படன வேதாந் தாந்தமா கமாந்தாந்த நிரூபாதிகம் பரமசாந்தம்
பரநாத தத்துவாந்தஞ் சகச தரிசனம் பகிரங்க மந்தரங்கம்
பரவியாமம் பரமஜோதிமயம் விபுலம்பரம் பரமனந்தமசலம்
பரமலோகாதிக்க நித்திய சாம்பிராச்சியம் பரபதன் பரமசூக்ஷமம்
பராபரம நாமய நிராதரமகோசரம் பரமதந்திரம் விசித்திரம்
பராமுத நிராகரம் விகாசனம் விகோடணம் பரசுகோதயமக்ஷயம்
பரிபவ விமோசனங் குணரகிதம் விசுவம் பதித்துவ பரோபரீணம்
பஞ்சகிர்த்திய சுத்தகர்த்தத்துவந் தற்பரஞ் சிதம்பரவிலாசம்
பகர்சுபாவம் புனிதமதுல மதுலிதமம் பராம்பர நிராலம்பனம்
பரவு சாக்ஷாத்கார நிரவயவங் கற்பனாதீத நிருவிகாரம்
பரதுரிய வநுபவங் குருதுரியபதமம்பகம் பகாதீத விமலம்
பரமகருணாம்பரந் தற்பதங் கனசொற்பதாதீத மின்பவடிவம்
பரோக்ஷ ஞானாதீத மபரோக்ஷ ஞானானுபவ விலாசப்ரகாசம்
பாவனாதீதங் குணாதீத முபசாந்தபத மகாமௌனரூபம்
பரமபோதம் போதரகித சகிதஞ் சம்பவாதீத மப்ரமேயம்