நெடுநல்வாடை

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

பத்துப்பாட்டுத் தொகைநூல்களுள் ஏழாவதான நக்கீரர் பாடிய

நெடுநல்வாடை (மூலம்)

தொகு

(பிழையில்லா மெய்ப்பதிப்பு)

நூல்

தொகு
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ // 01 // வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புது பெயல் பொழிந்தென // 02 // பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர் கலி முனைஇய கொடு கோல் கோவலர் // 03 // ஆர் கலி முனைஇய கொடு கோல் கோவலர்
ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பி // 04 // ரேறுடை யினநிரை வேறுபுலம் பரப்பிப் // 04 //
புலம் பெயர் புலம்பொடு கலங்கி கோடல் // 05 // புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோட // 05 //
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ // 06 // னீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ
மெய் கொள் பெரும் பனி நலிய பலருடன் // 07 // மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க /08/ கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
மா மேயல் மறப்ப மந்தி கூர // 09 // மாமேயன் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழ கறவை // 10 // பறவை படிவன வீழக் கறவை // 10 //
கன்று கோள் ஒழிய கடிய வீசி // 11 // கன்றுகோ ளொழியக் கடிய வீசிக்
குன்று குளிர்ப்ப அன்ன கூதிர் பால் நாள் // 12 // குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாட்
புன் கொடி முசுண்டை பொறி பறம் வான் பூ // 13 // புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப்
பொன் போல் பீரமொடு புதல் புதல் மலர // 14 // பொன்போற் பீரமொடு புதற்புதன் மலரப்
பைங்கால் கொக்கின் மென் பறை தொழுதி // 15 // பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி
இரும் களி பரந்த ஈர வெள் மணல் // 16 // யிருங்களி பரந்த வீர வெண்மணற்
செ வரி நாரையோடு எவ்வாயும் கவர // 17 // செவ்வரி நாரையோ டெவ்வாயுங் கவரக்
கயல் அறல் எதிர கடும் புனல் சாஅய் // 18 // கயலற லெதிரக் கடும்புனற் சாஅய்ப
பெயல் உழந்து எழுந்த பொங்கல் வெள் மழை // 19 // பெயலுழந் தெழுந்த பொங்கல் வெண்மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப // 20 // யகலிரு விசும்பிற் றுவலை கற்ப // 20 //
அங்கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த // 21 // வங்க ணகல்வய லார்பெயற் கலித்த
வள் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க // 22 // வண்டோட்டு நெல்லின் வருகதிர் வணங்க
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின் // 23 // முழுமுதற் கமுகின் மணியுற ழெருத்திற்
கொழுமடல்அவிழ்ந்தகுழூஉகொள்பெருகுலை // 24 // கொழுமட லவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்கலை
நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு // 25 // நுண்ணீர் தெவிள வீங்கிப் புடைதிரண்டு // 25 //
தெள் நீர் பசும் காய் சேறு கொள முற்ற // 26 // தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற
நனி கொள் சிமைய விரவு மலர் வியல் கா // 27 // நனிகொள் சிமைய விரவுமலர் வியன்காக்
குளிர் கொள் சினைய குரூஉ துளி தூங்க // 28 // குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் // 29 // மாட மோங்கிய மல்லன் மூதூ // 29 //
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவின் // 30 // ராறுகிடந் தன்ன வகனெடுந் தெருவிற் // 30 //
படலை கண்ணி பரு ஏர் எறுழ் திணி தோள் // 31 // படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோண்
முடல் யாக்கை முழு வலி மாக்கள் // 32 // முடலை யாக்கை முழுவலி மாக்கள்
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து // 33 // வண்டுமூசு தேறன் மாந்தி மகிழ்சிறந்து
துவலை தண் துளி பேணார் பகல் இறந்து // 34 // துவலைத் தண்டுளி பேணார் பகலிறந்
இருகோட்டுஅறுவையர்வேண்டு வயின்திரிதர // 35 // திருகோட் டறுவையர் வேண்டுவயிற் றிரிதர
வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள் // 36 // வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோண்
மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல் // 37 //மெத்தென் சாயன் முத்துறழ் முறுவற்
பூ குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழை கண் // 38 // பூங்குழைக் கமர்ந்த வேந்தெழின் மழைக்கண்
மடவரன் மகளிர் பிடகை பெய்த // 39 // மடவரன் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து // 40 // செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து // 40 //
அ இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து // 41 // தவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந்
இரும்பு செய் விளக்கின் ஈர் திரி கொளீஇ // 42 // திரும்புசெய் விளக்கி னீர்ந்திரிக் கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய் கை தொழுது // 43 // நெல்லு மலருந் தூஉய்க்கை தொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர // 44 // மல்ல லாவண மாலை யயர
மனை உறை புறவின் செ கால் சேவல் // 45 // மனையுறை புறவின் செங்காற் சேவ // 45 //
இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது // 46 // லின்புறு பெடையொடு மன்றுதேர்ந் துண்ணா
இரவும் பகலும் மயங்கி கையற்று // 47 // திரவும் பகலு மயங்கிக் கையற்று
மதலை பள்ளி மாறுவன இருப்ப // 48 // மதலைப் பள்ளி மாறுவன விருப்பக்
கடி உடை வியல் நகர் சிறு குறு தொழுவர் // 49 // கடியுடை வியனகர்ச் சிறுகுறுந் தொழுவர்
கொள் உறழ் நறு கல் பல கூட்டு மறுக // 50 // கொள்ளுறழ் நறுங்கற் பலகூட்டு மறுக // 50 //
வடவரு தந்து வான் கேழ் வட்டம்// 51 // வடவர் தந்த வான்கேழ் வட்டந்
தென் புலம் மருங்கில் சாந்தொடு துறப்ப // 52 // தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்பக்
கூந்தல் மகளிர் கோதை புனையார் // 53 // கூந்தன் மகளிர் கோதை புனையார்
பல் இரும் கூந்தல் சில் மலர் பெய்ம்மார் // 54 // பல்லிருங் கூந்தற் சின்மலர் பெய்ம்மார்
தண் நறும் தகரம் முளரி நெருப்பமைத்து // 55 // தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத் // 55 //
இரும் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப // 56 // திருங்கா ழகிலொடு வெள்ளயிர் புகைப்பக்
கை வல் கம்மியன் கவின் பெற புனைந்த // 57 // கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த
செ கேழ் வட்டம் சுருக்கி கொடு தறி // 58 // செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க // 59 // சிலம்பி வானூல் வலந்தன தூங்க
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் // 60 // வானுற நிவந்த மேனிலை மருங்கின் // 60 //
வேனில் பள்ளி தென் வளி தரூஉம் // 61 // வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை // 62 // நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்
போர் வாய் கதவம் தாழொடு திறப்ப // 63 // போர்வாய் கதவந் தாழொடு துறப்பக்
கல்லென் துவலை தூவலின் யாவரும் // 64 // கல்லென் றுவலை தூவலின் யாவருந்
தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் // 65 // தொகுவாய்க் கன்னற் றண்ணீ ருண்ணார் // 65 //
பகு வாய் தடவில் செ நெருப்பு ஆர // 66 // பகுவாய்த் தடவிற் செந்நெருப் பார
ஆடல் மகளிர் பாடல் கொள புணர்மார் // 67 // வாடன் மகளிர் பாடல்கொளப் புணர்மார்
தண்மையில் திரிந்த இன் குரல் தீ தொடை // 68 // தண்மையிற் றிரிந்த வின்குரற் றீந்தொடை
கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ // 69 // கொம்மை வருமுலை வெம்மையிற் றடைஇக்
கரு கோட்டு சீறியாழ் பண்ணுமுறை நிறுப்ப /70/ கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்பக்
காதலர் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்து // 71 // காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல்கனைந்து
கூதிர் நின்றன்றால் போதே மாதிரம் // 72 // கூதிர்நின் றன்றாற் போதே மாதிரம்
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம் // 73 // விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டில
இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு // 74 // மிருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்
ஒரு திறம் சாரா வரை நாள் அமையத்து // 75 // பொருதிறஞ் சாரா வரைநா ளமயத்து // 75 //
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு // 76 // நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி // 77 // தேஎங் கொண்டு தெய்வ நோக்கிப்
பெரு பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து // 78 // பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்
ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலைவரைப்பின் /79/ தொருங்குடன் வளைஇ யோங்குநிலை வரைப்பிற்
பரு இரும்பு பிணித்து செ அரக்கு உரீஇ // 80 // பருவிரும்பு பிணித்துச் செவ்வரக் குரீஇத் // 80 //
துணை மாண்கதவம் பொருத்திஇணை மாண்டு// 81 // துணைமாண் கதவம் பொருத்தி யிணைமாண்டு
நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து // 82 // நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப்
போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து // 83 // போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்
தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின் // 84 // தாழொடு குயின்ற போரமை புணர்ப்பிற்
கை வல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து // 85 // கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை // 86 // தையவி யப்பிய நெய்யணி நெடுநிலை
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக // 87 // வென்றெழு கொடியொடு வேழஞ் சென்றுபுகக்
குன்று குயின்று அன்ன ஓங்கு நிலை வாயில் // 88 // குன்றுகுயின் றன்ன வோங்குநிலை வாயிற்
திரு நிலை பெற்ற தீது தீர் சிறப்பின் // 89 // றிருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பிற்
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து // 90 // றருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து // 90 //
நெடு மயிர் எகினம் தூ நிற ஏற்றை // 91 // நெடுமயி ரெகினத் தூநிற வேற்றை
குறும் கால் அன்னமொடு உகளும் முன் கடை // 92 // குறுங்கா லன்னமோ டுகளு முன்கடைப்
பணை நிலை முனைஇய பல் உளை புரவி // 93 // பணைநிலை முனைஇய பல்லுளைப் புரவி
புல் உணா தெவிட்டும் புலம்புவிடு குரலொடு // 94 // புல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
நிலவு பயன் கொள்ளும் நெடு வெள் முற்றத்து /95/ நிலவுப்பயன் கொள்ளு நெடுவெண் முற்றத்துக்
கிம்புரி பகு வாய் அம்பணம் நிறைய // 96 // கிம்புரிப் பகுவா யம்பண நிறையக்
கலிழ்ந்து வீழ் அருவி பாடு விறந்து அயல // 97 // கலிழ்ந்துவீ ழருவிப் பாடுவிறந் தயல
ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல் // 98 // வொலிநெடும் பீலி யொல்க மெல்லியற்
கலி மயில் அகவும் வியிர் மருள் இன்னிசை // 99 // கலிமயி லகவும் வயிர்மரு ளின்னிசை
நளி மலை சிலம்பில் சிலம்பும் கோயில் // 100 // நளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில் // 100 //
யவனர் இயற்றிய வினை மாண் பாவை // 101 // யவன ரியற்றிய வினைமாண் பாவை
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து // 102 // கையேந் தையக னிறையநெய் சொரிந்து
பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி // 103 // பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி
அறு அறு காலைதோறும் அமைவர பண்ணி // 104 // யறுவறு காலைதோ றமைவரப் பண்ணிப்
பல் வேறு பள்ளிதொறும் பாய் இருள் நீங்க // 105 // பல்வேறு பள்ளிதொறும் பாயிரு ணீங்கப்
பீடு கெழு சிறப்பின் பெரு தகை அல்லது // 106 // பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்ல
ஆடவர் குறுகா அரு கடி வரைப்பின் // 107 // தாடவர் குறுகா வருங்கடி வரைப்பின்
வரை கண்டு அன்ன தோன்றல, வரை சேர்பு // 108 // வரைகண் டன்ன தோன்றல வரைசேர்பு
வில் கடந்து அன்ன கொடிய, பல் வயின் // 109 // வில்கிடந் தன்ன கொடிய பல்வயின்
வெள்ளி அன்ன விளங்கும் சுதை உரீஇ, // 110 // வெள்ளி யன்ன விளங்குஞ் சுதையுரீஇ // 110 //
மணி கண்டு அன்ன மா திரள் தி்ண் காழ் // 111 // மணிகண் டன்ன மாத்திரட் டிண்காழ்ச்
செம்பு இயன்றன்ன செய்வுறு நெடும் சுவர் // 112 // செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவ
உருவ பல் பூ ஒரு கொடி வளைஇ // 113 // ருருவப் பல்பூ வொருகொடி வளைஇக்
கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் // 114 // கருவொடு பெயரிய காண்பி னல்லிற்
தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள் // 115 // றசநான் கெய்திய பணைமரு ணோன்றா
இகல் மீ கூறும் ஏந்து எழில் வரி நுதல் // 116 // ளிகன்மீக் கூறு மேந்தெழில் வரிநுதற்
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து // 117 // பொருதொழி நாக மொழியெயி றருகெறிந்து
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன் // 118 // சீருஞ் செம்மையு மொப்ப வல்லோன்
கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு // 119 // கூருளிக் குயின்ற வீரிலை யிடையிடுபு
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப // 120 // தூங்கியன் மகளிர் வீங்குமுலை கடுப்பப் //
புடை திரண்டு இருந்த குடத்த இடை திரண்டு // 121 // புடைதிரண் டிருந்த குடத்த விடைதிரண்
உள்ளு நோன் முதல் பொருத்தி அடி அமைத்து // 122 // டுள்ளி நோன்முதல் பொருத்தி யடியமைத்துப்
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் // 123 // பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில்
மடை மாண்நுண் இழை பொலிதொடைமாண்டு /124/ மடைமா ணுண்ணிழை பொலியத் தொடைமாண்டு
முத்து உடை சாலேகம் நாற்றி குத்துறுத்து // 125 // முத்துடைச் சாலேக நாற்றிக் குத்துறுத்துப் //
புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து // 126 // புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடு கண் புதைய கொளீ இ துகள் தீர்ந்து // 127 //தகடுகண் புதையக் கொளீஇத் துகடீர்ந்
ஊட்டுறு பல் மயில் விரைஇ வய மான் // 128 // தூட்டுறு பன்மயிர் விரைஇ வயமான்
வேட்டம் பொறித்து வியல் கண் கானத்து // 129 // வேட்டம் பொறித்து வியன்கட் கானத்து
முல்லை பல் போது உறழ பூ நிரைத்து // 130 // முல்லைப் பல்போ துறழப் பூநிரைத்து //130 //
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்பட // 131 //மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணை புணர் அன்னம் தூ நிற தூவி // 132 // துணைபுண ரன்னத் தூநிறத் தூவி
இணை அணை மேம்பட பாய் அணை இட்டு // 133 // யிணையணை மேம்படப் பாயணை யிட்டுக்
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து // 134 // காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடு அமை தூ மடி விரித்த சேக்கை // 135 //தோடமை தூமடி விரித்த சேக்கை // 135 //
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து // 136 // யாரந் தாங்கிய யலர்முலை யாகத்துப்
பின் அமை நெடு வீழ் தாழ துணை துறந்து // 137 // பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து
நல் நுதல் உலறிய சில் மெல் ஓதி // 138 // நன்னுத லுலறிய சின்மெல் லோதி
நெடு நீர் வார் குழை களைந்து என குறு கண் // 139 //நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண்
வாய் உறை அழுத்திய வறிது வீழ் காதின் // 140 // வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற் // 140 //
பொலம் தொடி தின்ற மயிர் வார் முன் கை // 141 // பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து // 142 // வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து
வாளை பகு வாய் கடுப்ப வணக்கு உறுத்து // 143 // வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செ விரல் கொளீஇய செ கேழ் விளக்கத்து // 144 // செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
பூ துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல் // 145 // பூந்துகின் மரீஇய வேந்துகோட் டல்கு // 145 //
அ மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு // 146 // லம்மா சூர்ந்த வவிர்நூற் கலிங்கமொடு
புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல் // 147 // புனையா வோவியங் கடுப்பப் புனைவி
தளிர் ஏர் மேனி தாய சுணங்கின் // 148 // றளிரேர் மேனித் தாய சுணங்கி
அ பணை தடைஇய மெல்தோள் முகிழ்முலை /149/ னம்பணைத் தடைஇய மென்றோண் முகிழ்முலை
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின் // 150 // வம்புவிசித் தியாத்த வாங்குசாய் நுசுப்பின் //
மெல் இயல் மகளிர் நல் அடி வருட // 155 // மெல்லியன் மகளிர் நல்லடி வருட
நரை விராவு உற்ற நறு மென் கூந்தல் // 156 // நரைவிரா வுற்ற நறுமென் கூந்தற்
செ முகம் செவிலியர் கை மிக குழீஇ // 157 // செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்
குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி // 158 // குறியவு நெடியவு முரைபல பயிற்றி
இன்னே வருகுவர் இன் துணையோர் என // 159 // யின்னே வருகுவ ரின்றுணை யோரென // 155 //
உகத்தவை மொழியவும்ஒல்லாள் மிக கலுழ்ந்து /156/வுகத்தவை மொழியவு மொல்லாண் மிகக்கலுழ்ந்து
நுண் சேறு வழித்த நோன் நிலை திரள் கால் // 157 // நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கா
ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்திய // 158 // லூறா வறுமுலை கொளீஇய காறிருத்திப்
புதுவது இயன்ற மெழுகு செய் படம் மிசை // 159 // புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்
திண் நிலை மருப்பின் ஆடு தலையாக // 160 // திண்ணிலை மருப்பி னாடுதலை யாக // 160 //
விண் ஊர்பு திரிதரும் வீங்குசெலல்மண்டிலத்து /161/ விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலன் மண்டிலத்து
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய // 162 // முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா // 163 // வுரோகிணி நினைவன ணோக்கி நெடிதுயிரா
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி // 164 // மாயித ழேந்திய மலிந்துவீ ழரிப்பனி
செ விரல் கடை கண் சேர்த்தி சில தெறியா / 165 / செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப்
புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு // 166 // புலம்பொடு வதியு நலங்கிள ரரிவைக்
இன்னா அரும் படர் தீர விறல் தந்து // 167 // கின்னா வரும்படர் தீர விறறந்
இன்னே முடிகதில் அம்ம மின் அவிர் // 168 // தின்னே முடிகதில் லம்ம மின்னவி
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை /169/ ரோடையொடு பொலிந்த வினைநவில் யானை
நீள் திரள் தட கை நிலம் மிசை புரள // 170 // நீடிர டடக்கை நிலமிசைப் புரளக் // 170 //
களிறு களம் படுத்த பெரு செய் ஆடவர் // 171 // களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவ
ஒளிறுவாள் விழு புண் காணிய புறம்போந்து // 172 // ரொளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து
வடந்தை தண் வளி எறிதொறும் நுடங்கி // 173 // வடந்தைத் தண்வளி யெறிதொறு நுடங்கித்
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நல் பகல் // 174 // தேற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல்
பாண்டில் விளக்கின் பரூஉ சுடர் அழல // 175 //பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல // 175 //
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு // 176 // வேம்புதலை யாத்த நோன்கா ழெஃகமொடு
முன்னோன் முறை முறை காட்ட பின்னர் // 177 // முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர்
மணி புறத்து இட்ட மா தாள் பிடியொடு // 178 // மணிப்புறத் திட்ட மாத்தாட் பிடியொடு
பருமம் களையா பாய் பரி கலி மா // 179 // பருமங் களையாப் பாய்பரிக் கலிமா
இரு சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப // 180 // விருஞ்சேற்றுத் தெருவி னெறிதுளி விதிர்ப்பப்
புடை வீழ் அம் துகில் இட வயின் தழீஇ // 181 // புடைவீ ழந்துகி லிடவயிற் றழீஇ
வாள் தோள் கோத்த வன் கண் காளை // 182 // வாடோட் கோத்த வன்கட் காளை
சுவல் மிசை அமைத்த கையன் முகன் அமர்ந்து // 183 // சுவன்மிசை யமைத்த கையன் முகனமர்ந்து
நூல் கால் யாத்த மாலை வெள் குடை // 184 // நூல்கால் யாத்த மாலை வெண்குடை
தவ் என்று அசைஇ தா துளி மறைப்ப // 185 // தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப // 185 //
நள் என் யாமத்தும் பள்ளி கொள்ளான் // 186 // நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன் // 187 // சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறை தொழிலே // 188 // பலரொடு முரணிய பாசறைத் தொழிலே.

பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய நெடுநல்வாடை முற்றும்

வெண்பா:

வாடை நலிய வடிக்கண்ணா டோணசைஇ
ஓடை மழகளிற்றா னுள்ளான்கொல்- கோடல்
முகையோ டலமர முற்றெரிபோற் பொங்கிப்
பகையோடு பாசறையு ளான்.
திணை: வஞ்சித்திணை
துறை: கொற்றவைநிலை (நச்சினார்க்கினியர் கருத்து)/
துறை: வாடைப் பாசறை (புறப்பொருள் வெண்பாமாலை)
இப்பாடலின் மொத்த வரிகள்: 188 (நூற்றெண்பத்தெட்டு மட்டும்)
பாவகை: நேரிசை ஆசிரியப்பா

முக்கியக் குறிப்புக்கள்

தொகு

வினை முடிபு

வானம் கார்காலத்து மழையைப் பெய்ததாகப்(2) பின்னர் நிகழ்ந்தபொழுது (72) கோவலர் (3) நடுங்க (8)மறப்பக் கூர (9) வீழ (10) ஒழிய (11) மலரக் (14) கவரக்(17) கற்ப (20) வணங்க (22) முற்றத் (26) தூங்கத் (28) திரிதர (35) அயர (44) இருப்ப (48) மறுகத் (50)துறப்பப் (52) புகைப்பத்(56) தூங்கத் (59) துறப்ப (63) ஆர (66) நிறுப்பப்(70) புலம்பப் பெயல் செறிந்து (71) கூதிர்க்காலமாய் நிலைபெற்றது; அவ்விடத்து (72) என முடிக்க. - நச்சினார்க்கினியர்.

திண்காழையுடையவாய்ச் (111) செய்வுறுநெடுஞ்சுவரிலே (112) விளங்குஞ் சுதையுரீஇப் (110) பல்வயின் (109) ஒருகொடிவளைஇ (113) வரைகண்டன்ன தோன்றலவாய்க் (108) கொடியவாய்ப் (109) பாயிருணீங்க (105) எரி (103) அமைவரப்பண்ணிக் (104) காட்சிக்கினிய வாகிய நல்லில் (114) என முடிக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=நெடுநல்வாடை&oldid=1526487" இலிருந்து மீள்விக்கப்பட்டது