பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் āli "இரக்கத்தொடு மறுத்தல்’, சிறப்பின்மை கூறி மறுத்தல். என்னும் துறைகளாகக் கூறப்பெறும். இவற்றை யடுத்ததுதான் இளமை கூறி மறுத்தல் என்பது. இதனை மணிவாசகப் பெருமான், 'முருகு தலைச்சென்ற கூழை முடியா முலைபொடியா ஒருகு தலைச்சின் மழலைக்கென் னோ? ஐய! ஒதுவதே." (முருகு-வாசனை, கூழை-குழல்கள் முடியா-முடிக்கப்படா; பொடியா-தோன்றா குதலைமை-விளங்காமை; மழலைஇளஞ்சொல்; ஓதுவது-சொல்லுவது.) என்று கூறியிருப்பது சிந்திக்கத் தக்கது. இங்ஙனம் தன்னைப் பலவாறு அலைத்து அலைத்து உரைக்கும் தோழியின் சேட்படையுரைகளை எண்ணிய தலைவன் 'இவளையொழித்தே இனி என் விருப்பத்தை நிறை வேற்ற முயல வேண்டும் எள்று உட்கொண்டு நிற்ப, இதனை அவள் குறிப்பினால் அறிந்து கொண்டு இனி என் துணையின்றி நீங்கள் இச் செயலை முடித்துக் கொள்ளுதல் இயலாது என்று அவன் மறைத்தமை கூறி நகைத்துரைப்பாள். அவள் நகையினைக் கண்ட தலைமகன், மறைத்தால் முடியா தென்றனளாதலின் அதனாலேயே 'மறையாதிருந்தால் முடியும் என்று கூறினாள் என்று நினைத்து 'உன்னுடைய மெல்லென்னும் அருள் நோக்கமன்றோ எனக்குச் சிறந்த துணை என்று அவளது நகையுரைக்கு மகிழ்ந்து கூறுவான். தோழி அவனை இன்னும் அலைக்க வேண்டும் என்று கருதி "இங்குத் தோழிமார் எத்தனையோ பேருளர். அவர் தம்முள் உள்ள நினைவு யார்கண்ணதோ?’ என்று ஒன்றுமே அறியால் போன்று அவன் நினைவு கேட்பள். ஒ ஓ இன்னும் இவள் என்னால் விரும்பப் படுவாளை அறிந்திலள் போல் கூறுகின்றாள். ஏதாயினும் இனி இவட்கு என் தலைவியின் அடையாளம் கூறுவேன்' என்று கூறத் தொடங்கி தன் தலைவியின் உடலுறுப்புக் குறிகளைக் கூறுவான். இஃது அவயவம் கூறல்” என்ற துறை யாகும். அதன் பின்பு, அன்று இயற்கைப் புணர்ச்சியின் பின் பிரிந்து செல்லும் போது தோழியைக் குறித்துக் காட்டிய அவள் 70. திருக்கோவை-104