பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் ستلعة மரபுகள் 177 ஒரு வழித்தணந்து நிற்கின்றமைக்கு, ஊரவர் அலர் மொழிக்கு அஞ்சிக் குறியிடத்துக்கு வரமுடியாத தலைவியே காரணம் அவளன்றித் தலைவன் காரணம் ஆவதில்லை. தோழியும் தலைவி யும் குறியிடத்திற்குக் வரக் கூடுமாயின், தலைவன் யாதொரு தடையும் அச்சமும் இன்றிக் கட்டாயம் களவு நிகழ்த்திக் கொண்டே இருப்பான். அலருக்குப் பெண்ணுள்ளம் அஞ்சுமேயன்றி ஆனுள்ளம் அஞ்சாது திருமணம் முடியும் அளவும் உள்ள களவுக் காலத்தில் அவன் எஞ்ஞான்றும் பிரிதற்கு விரும்பு வதில்லை. இதனைத் தொல் காப்பியனாரும், - வெளிப்படை தானே கற்பினோ டொப்பினும் ஞாங்கர்க் நிளந்த மூன்றுபொரு ளாக வகை யாது பிரிதல் கிழவோ ற்கு இல்லை' எநாங்கர்-முன்பு, மூன்று என்றது, ஒதல் பகை துது காரண ஞ் முன்பு, மு. நிது, ஒ: இilஇ! மாகப் பிரியும் பிரிவுகளை) என்று திட்டவட்டமாய்க் கூறியுள்ளார். ஆகவே, களவுக் காலத்தில் தலைவன், ஒருவழித் தணந்து நிற்றலுக்குத் தலைவி யினாலே ஆவதல்லது தலைவனால் அன்று எனவே, இறையனாரின் நூற்பாவினால் களவொழுக்கம் நிகழும் வரையில் இடையீடு என்பது தலைமகன் ஏதுவாக நிகழ்தல் இல்லை; ஆனால் தலை மகள் ஏதுவாக நிகழ்தல் உண்டு' என்பதே நாம் கருத்திலிருத்த வேண்டிய தொன்றாகும். ஆகவே, மேற்கூறியவற்றால் அலரெழுந்த காலத்தில் வரைந்து கோடல் இல்லாத தலைவனுக்கு நிகழவேண்டியனவாகவுள்ள ‘ஒருவழித்தணத்தல்', 'உடன்போக்கு என்னும் இரண்டனுள்ளும் ஒருவழித்தனத்தலே அறநெறிக்கும் ஆன்றோர்தம் புலனெறி வழக்கிற்கும், முறைக்கும், இயல்புக்கும் மாறாகாத வகையில் நிகழ்தல் சிறப்புடையது என்பது தெளிவாகின்றது. சிறந்த பிரிவு நிலை : ஒருவழித்தனத்தலே களவொழுக் கத்தின் சிறந்த பிரிவு நிலையாகும். ஒருவழித்தனந்து நிற்கும் தலைவன் தலைவியை யாதோர் இடையூறுமின்றிக் கூடுதற்கான வழியினை நினைந்த வண்ணமாய் இருப்பான். இப்பிரிவு அவனுக்கு மிகக் கொடியதாக இருக்கும். தலைவியின் கூட்டச் சிறப்பினை உள்ளுந்தோறும் அவனிடம் ஆராத பேரன்பு குமிழி 200 களவியல். 51. (இளம்). அ-12