பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முறைகள் 205 தனன்-மணம் செய்தலை விரும்பிக் கூறினன்; மலை கிழவோன்-தலைவன்.) இக்கலிப் பாட்டு சுட்டும் திருமணம் களவு வெளிப்படா முன்னரே பெற்றோர்.மூலம் நடத்திக் கொண்ட திருமணமாகும். தோழியும் தலைவியும் பாடிய வள்ளைப் பாட்டு ஒளிந்து நின்ற தலைவன் நெஞ்சத்தைத் தாக்க, அவன் களவு நீளாது வரைதலே தகும் என்று மணம் பேச ஏற்பாடு செய்தான். தந்தையோ அங்ஙனம் வந்தவனிடம் தன் மகளுக்கு உறவுண்டு என்பதை அறியாதவன். அறியா நிலையிலே தலைவனது விருப்பத்திற்கு இசைவு தெரி வித்தனன். இந்நல்லிசைவால் தோழி பெருமகிழ்ச்சி எய்தினாள். தோட்கிழவனும் வந்தனன், நுந்தையும் நயந்தனன் என்ற அணுகிய சொன்னடையால் களவு வெளிப்படவில்லை என்ற குறிப்பு தெளிவாகின்றது. இம்மண முடிப்பே தொல்காப்பியர் சுட்டும் படாமை வரைதல் என்பதற்குப் பொருந்திய இலக்கிய மாகும். ஐந்திணை எழுபதில் ஒரு பாடலும் களவு வெளிப்படாமல் வரைவு நிகழ்ந்ததைக் குறிக்கின்றது. கொல்லைப் புனத்த அகில்சுமந்து கற்பாய்ந்து வானின் அருவி ததும்பக் கவினிய நாடன் நயனுடையன் என்பதனால் நீப்பினும் வாடன் மறந்தன தோள்" (கொல்லை-தோட்டம், புனத்த-புனத்தின் கண்ணே யுள்ள கல்-மலை: அருவி - நீர்வீழ்ச்சி, கவினிய-அழகு மிகுந்த, நீப்பினும்-பிரிந்து சென்றாலும், வாடல்-மெலி தலை.) இது தோழி முதலாயினோர் தலைமகளின் வரைவினை எதிர் நோக்கிய காலத்து வரைவுதலை வந்தமை கூறியதாக அமைந்ததாகும். அகநானூற்றிலும் இத்தகைய நிகழ்ச்சி யொன்றினைக் காணலாம். உடன் போக்கில் சென்று விடுகின் கிறாள் தலைவி. அவளை நினைந்து வருந்தும் நற்றாய் பேசு கின்றாள். கழங்கின் திண்ணிய குறியைக் கூறும் வேலனிடம் பேசுகின்றாள். - - மாறா வருபனி கலுழுங்கங்குலின் ஆனாது துயரும்எம் கண்ணினிது படிஇயர் 7. ஐந், எழு-2