பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இயல்-17

இல்லற நெறி


   லைவனும் தலைவியும் பல்லோர் அறியத் திருமணம் புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்துதலே இல்லறநெறி யாகும். ஆசிரியர் தொல்காப்பியனார் கற்பு அல்லது இல்லற நெறியை,

மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும்

இவைமுத லாகிய இயல்நெறி பிழையாது

மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்

பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே.1

என்று குறிப்பர். ‘’மறைவெளிப்படுதலும் தமரிற் பெறுதலும்‘’: என்பதுபற்றித் ‘’திருமண முறைகள்‘’ என்ற தலைப்பில் விளக்கப் பெற்றது. மணவினை நிறைவேறிய பின்னர் மலிவு, புலவி, ஊடல், உணர்வு, பிரிவு ஆகிய ஐந்து கூறுகளும் அடங்கிய பகுதியே கற்பென வழங்கப்பெறுவது; இதுவே களவிற்குப் பிறகு தலைவனும் தலைவியும் ஒன்றிய நிலையுடன் வாழும் இல்லற நெறியாகும். தொல்காப்பியத்தில் கற்பு என்று வரும் இடங்களை யெல்லாம் ஆராயின் அஃது இல்லறம் என்ற பொருளையே குறித்தல் அறியலாம். கற்பு என்பதற்கு மகளிர்க்கு மாந்தர்மாட்டு நிகழும் மனநிகழ்ச்சி என்று இளம்பூரணரும், தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதொரு மேற்கொள்' என்று நச்சினார்க் கினியரும் கூறுவர். இனி ஆசிரியர் தொல்காப்பியர் கூறும் பகுதிகளை நோக்குவோம். -

முதலாவது : ம லிவு

'மலிவு என்பது இல்லொழுக்கமும் புணர்ச்சியும் முதலிய வற்றால் மகிழ்தல். அதாவது களவு முற்றி மணந்து கொண்ட 1. செய்யுளி. 179 அகத்திணை.44 களவியல்-1, 23, 51: கற்பியல் 1, 11, 21: பொருளியல் -32, 37, 51. --- - * , , 3. பொருளியல்-31 (இளம்); நூற்பா 53 (நச்)