பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230 அகத்திணைக் கொள்கைகள்


ஏனைய தமிழ் மக்களால் மேற்கொள்ளப் பெறாத சடங்கென்பது நன்கு புலனாகும். ஆனால், இளம்பூாணர் ‘’கரணத்தின் அமைந்து முடிந்த காலை“” என்பதற்கு, ஆசான் ‘’புணர்ந்த கரணத்தினால் வதுவை முடித்தபின்‘’ என்று கூறுவர். இவர் தமிழர் முறைப்படி நடைபெற்ற வதுவை மணத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

நெஞ்க தளை அவிழ்ந்த புணர்ச்சி 
  தலைவியைத் தலைவன் சண்ணுற்ற ஞான்று தலைவன்மாட்டு உளதாகிய பெருமையும் உரனும் தலைவிமாட்டு உளதாகிய அச்சமும் நாணும் மடனும் ஏதுவாக இயற்கைப் புணர்ச்சி இடையீடு பட்டுழி வேட்கை தணியாது வரைந்தெய்துங்காறும் இருவர்மாட்டும் கட்டுண்டு நின்ற நெஞ்சம் கட்டுவிடப் பெறுதல், இயற்தைப் புணர்ச்சி புணர்ந்த தலைவன் அலரறிவுறுக்கப்பட்டு நீங்கி வரைந் தெய்துங்காறும் புணர்ச்சி வேட்கையாற் சென்ற நெஞ்சினை இருவரும் வேட்கை தோற்றாமல் தளைக்கப்பட்டதனைத் ‘’தளை' என்றும் கூறலாம். ‘’உழுந்துதலைப் பெய்த‘’ என்ற அகப்பாட்டில்,"

முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப

அஞ்சினள் உயிர்த்த காலை

என்பதனால் இயற்கைப் புணர்ச்சியின்மையும்,

அகமலி உவகையள் ஆகி முகன்.இருந்து

ஒய்யென இறைஞ்சி

என்பதனால் உள்ளப் புணர்ச்சி உண்மையும் அறியலாம் களவொழுக்கப் புணர்ச்சி போல் மனத்தில் அச்சமின்றி, செயலில் விரைவின்றி, நிகழும் கற்புப் புணர்ச்சியை அடியிற் காணும் குறுந்தொகைப் பாடலில் காணலாம். -


விரிதிரைப் பெருங்கடல் விளைஇய உலகமும்

அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்

இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே:

பூப்போல் உண்கண் பொன்போல் மேனி

மாண்வரி அல்குல் குறுமகள்

தோள்மாறு படுஉம் வைகலோ டெமக்கே.".

(புத்தேள் நாடு-தேவர் உலகம்; சீர்-கனம்; சாலா-ஒவ்வா; தோள் மாறுபடுதல்-ஒருவர் இடத்தோள் மற்றவர் வலத் S. அகம்-86 9. குறுந்-101