பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முப்பொருள் பாகுபாடு - 7 உரிப்பொருளும் வரின், முதற் பொருளால் திணையாகும் என்பது உம் முதற்பொருள் ஒழிய ஏனைய இரண்டும் வரின் கருப்பொருளால் திணையாகும் என்பது உம்; உரிப்பொருள் தானே வரின், அதனால் திணையாகும் என்பது உம் ஆம் ..... ஒரு பொருட்கு ஒரு காரணம் கூறாது மூன்று காரணம் கூறியது. என்னை எனின், உயர்ந்தோர் என்ற வழிக் குலத்தினால் உயர்ந் தாரையும் காட்டும் கல்வியால் உயர்ந்தாரையும் காட்டும்; செல்வத்தினான் உயர்ந்தாரையும் காட்டும்; அது போலக் கொள்க." என்பது.

முதற்

பொருள் : முதற்பொருள் நிலம் காலம் என இரு வகைப்படும். இதனை, -

முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின் : இயல்பென்மொழிப இயல்புணர்ந் தோரே,*

என்று கூறுவர் தொல்காப்பியர். ஒரு செயல் செவ்வனே நடை பெறுவதற்கு இடமும் காலமும் இன்றியமையாதவை. இவ்வுண்மையை வள்ளுவப் பெருந்தகை, *

ஞாலம் காலம் கருதி இடத்தாற் செயின்."

(ஞாலம்-உலகம்) எனக் கூறுவர். இடமும் காலமும் இன்றியமையாமை கருதியே அவை முதற்பொருள் என்று தொல்காப்பியரால் வழங்கப், பெற்றுள்ளன. நிலம் இல்லாத இடத்து மக்கள் எவ்வாறு வாழ, முடியும்? இயற்கை அன்னை விள்ைபொருள்களை விளைவித்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கும். பொருளாதார உலகம், சரியாக இயங்குவதற்கும் முறையே-கால மாறுபாடும் காலக் கடப்பும் பெருந்துணை புரிவது கண்கூடு. நிலப் பாகுபாடு: முதற்பொருளின் ஒருபகுதியாகிய நிலத்தினை நான்கு பகுதியாகப் பிரித்துக் கூறுவர் தொல்காப்பியர் காடும் காடுசார்ந்த இடமும் முல்லை என்றும், மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி என்றும், வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என்றும், மணலும் மணல் சார்ந்த இடமும் நெய்தல் என்றும் 2. அகத்திணை.-4 (இன்னம்) 3. குறள்-484