பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் கொள்கைகள் பெயரிட்டு வழங்கினர் தமிழ்ச் சான்றோர். தொல்காப்பியர் இவற்றை முறையே காடுறை உலகம், மைவரை உலகம், தீம்புனல் உலகம், பெரும்புனல் உலகம் என்று குறிப்பிடுவர். இவற்றைத் தவிர ஐந்தாவது நிலம் ஒன்று உண்டு. இதனைப் பாலை என்று நூல்கள் வழங்கும். தமிழ்நாட்டில் இவ்வகை நிலம் இல்லை. இயற்கை மாறுபாட்டால், பருவமழை பெய்யாது வளங்குன்றிய காலத்தில், முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் தம் இயல்பை இழந்து புதியதொரு தன்மையைப் பெறும். இத்தன்மையுடைய நிலத்தைத் தமிழர்கள் பாலை என்று வழங்கினர். முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவங் கொள்ளும்." என்று சிலப்பதிகாரம் கூறுவதாலும் இது நன்கு விளங்கும். மயர்வற மதிநலம் அருளப் பெற்ற நம்மாழ்வாரும், நானிலம் வாய்க்கொண்டு நன்னீர் அறமென்று கோதுகொண்ட வேனிலஞ் செல்வன் சுவைத்துஉமிழ் பாலை." (வாய் கொண்டு-கிரணமுகத்தால் வாயில் பெய்து கொண்டு அற-அறும்படி: கோது-சுவையற்றபகுதி: சுவைத்து-உருசிபார்த்து: உமிழ்-வெறுத்துக் கழித்த.) என்று இந்நிலத்தை மிக அழகாகக் குறிப்பிடுவர். ஆழ்வாரும் தானிலம் என்ற மரபினையே தழுவினர். தொல்காப்பியரும் நான்கு நிலத்தைப் பற்றியே கூறுவர். இதனை, மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெரும்புனல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் பெறுமே." 4. சிலப். காடுகாண்.அ (64-66 5. திருவிருத். 26 14. ) 6. அகத்திணை. 5.