பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

அகத்தினணக் கொள்கைகள்


தலைவனின் பரத்தமை யொழுக்கம் ஊரில் அலராய் எழுங்கால் தலைவனை நினைந்து தலைவிக்கும், தலைவியை நினைந்து தலைவனுக்கும் காமம் மிக்கு நிகழும் என்று கூறுவர் தொல் காப்பியர், -

அலரில் தோன்றும் காமத்து மிகுதி."52

என்பது விதி.

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும் இந்நோய்." (கெளவை - பழிச்சொல்.)

நெய்யால் எரிதுதுப்பேம் என்றற்றால்

காமம் நுதுப்போம் எனல்."54

           (நுதுப்பேம் - அவிப்போம்)

என்ற குறட்பாக்களை இதற்கு இலக்கியமாகக் கொள்ளலாம். பரத்தையிற் பிரிவுபற்றி இறையனார் களவியலுரையாசிரியர் எழுதுவது: 'அஃதேயெனின், மற்றைப் பிரிவெல்லாம் வேண்டுக, ஆள் வினை மிகுதி உடைமையான்; இப்பிரிவுக்கு எற்றிற்கோ எனில், பரத்தையிற் பிரிந்தான் தலைமகன் என்றால், ஊடலே புலவியே துனியே என்றிவை நிகழும். நிகழ்ந்தால், அவை நீக்கிக் கூடினவிடத்துப் பெரியதோர் இன்பமாம்; அவ்வின்பத் தன்மையை வெளிப்படுப்பன அவை எனக் கொள்க'55 என்பது. இப்பரத்தைப் பிரிவு எல்லாக் குலத்தார்க்கும் உரித்து என்பதை,

காதற் பரத்தை எல்லர்க்கும் உரித்தே' என்று இறையனார் களவியலும், -

பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே

நிலத்திரி பின்றஃ தென்மனார் புலவர்" என்று தொல்காப்பியமும் விதிகள் செய்யும்.

   தலைவன் பரத்தையிற் பிரிந்த காலத்தில் தலைவி பூப்

பெய்தினளாயின் அச்செய்தி அவனுக்கு அறிவிக்கப் பெறும் 52. கற்பியல் - 22 53. குறள் - 1147 54. டிெ - 1148 55. இறை. கள. 40 இன் உரை. 56. டிெ. 40 - 57. பொருளியல் 28