பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தினை - 285 என்பது. இவ்விளக்கம் முன்னையோர் பெருந்திணைபற்றிக் கொண்ட கருத்தின் விரிவேயாகும். ஏனையோர் இத்திணைக்குத் தந்த விளக்கங்களில் மிகச் சிறு வேறுபாடுகள் காணப்பெறினும், ஒவ்வாக் காமத்தையும் வலிந்த காமத்தையும் நுவல்வதே பெருந் திணையாகும் என்ற கருத்துத் தேற்றத்தில் இன்றுவரை யாரும் வேறுபட்டிலர். நாவலர் பாரதியாரும், பேராசிரியர் கா. சு. பிள்ளே போன்றவர்களும் இக்கருத்தினையே கொண்டவராவர். தவறான முடிவுகள்: 'பெருந்திணை என்ற குறியீட்டின் பெரு என்ற அடையின் பொருள் தெளிவாயின் திணைப்பொருள் விளக்கம் எய்தும். (1) பெருந்திணைக் காமம் உலகினுள் பெருவழக்காக இருத்தலின் பெரு என்ற அடை பெற்றதாகக் கூறுவர் இளம்பூரணர். ஒவ்வாத கூட்டமும் வலிந்த புணர்ச்சியும் சமுதாயத்தில் மிகுந்து காணப்படுவதாகக் கூறுவது, கருதுவது, பெரும்பிழையாகும். தமிழ்ச் சமுதாயத்தையே அவமதித்துக் கூறும் கருத்தாகும் இது. (2) தமிழரின் எழுவகைத் திணைகளையும் ஆரியரின் எண் வகை மணங்களையும் தொடர்புபடுத்திக் கூறும் ஒருவகை மரபு உண்டு. ஆசுரம் இராக்கதம் பைசாசம் ஆகிய மூன்று வகை மணங்களையும் கைக்கிளையிலும், காந்தருவத்தை ஐந்திணையி லும் ஏனைய பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம் தெய்வம் ஆகிய வற்றைப் பெருந்திணையிலும் அடக்கிப் பேசுவர். இங்ஙனம் ஆரியமணம் நான்கையும் பெருந்தினைத் துறைகள் நான்கினையும் பொருத்திக் கண்டது பெரும்பிழையாகும் ஆரியமணம் நோக்கிப் பெருந்தினைப் பெயர் பெற்றதாகக் கொள்ளின், கந்தருவம் ஒன்றைமட்டிலும் பெறும் திணையை ஐந்திணை என்றல் பொருந் தாது; குறுந்திணை என்றே வழங்கல் வேண்டும் அங்ஙனமே, மூன்று மணங்களையே பெறும் கைக்கிளையை 'இடைத்திணை' எனல்வேண்டும் தமிழ் மணநெறிகளையும் ஆரியமண நெறிகளை யும் ஒப்புநோக்கி இன்னின்ன வகையில் ஒப்புடையன என்று காண்டல் அறிவின்பாற்பட்ட ஆய்வாகும். அதனைவிட்டு தமிழரின் தன்னேரில்லாப் படைப்பான அகத்திணையின் உட்பிரிவாகிய பெருந்திணைப் பெயர் ஆரிய மணப் பிரிவுகளை எண்ணி இடப் பட்டது என்று கூறுதல் தமிழ்ச் சான்றோர்அறிவையே அவமதிப்ப தாகும். -