பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்திணை . - 295 என்று ஒதலாந்தையார் இவனைக் காட்டுவர். பொருள் கிடக்க: நின்னலத்தை மதித்து வந்தேன்' என்று தன் மனைவியிடம் எடுத் துரைக்கின்றான் இத்தலைவன். மனைவியின் காமச் செவ்வியை உணர்ந்தவன் இவன். நற்றிணைத் தலைவி ஒருத்தி ஆடவரது இயல்பை நன்கு உணர்ந்தவளாகக் காணப்படுகின்றாள். இவளது கணவன்பொருள்வயிற் பிரிய எண்ணுகின்றான். தோழியிடம் தன் கருத்தைத் தெரிவிக்கவே, அவளும் 'நன்றெனப் புரிந்தோய் நன்று செய்தனை' என்கின்றாள். இதனை அறிந்த தலைவியும், - செயல்படு மனத்தர் செய்பொருட்கு அகல்வர் ஆடவர். அது.அதன் பண்பே' என்று ஆடவரது இயல்பினை நன்கு புரிந்து கொண்டு அவன் செயலுக்குப் பச்சைக் கொடி காட்டுகின்றாள். ஈண்டுக் காட்டிய ஐங்குறுநூற்றுத் தலைவனும் நற்றிணைத் தலைவியும் ஒருவர் போக்கைப் பிறிதொருவர் மதித்து ஒழுகுபவர்கள். இங்ஙனம் மதித்தொழுகும் பண்புகள் ஐந்திணைக்கு உரியவை. . . இன்னொருஜந்திணைத்தலைவனின்ஒழுக்கத்தைக்காண்போம். இவன் காதலியிடத்து அன்புடையவனாயிருந்தும், மனக் குற்றம் யாதும் இல்லாதவனாக இருந்தும், அளவறி வாழ்க்கை அறியாத வன். நெடுநாள் காமத்தைக் கைவிட்டுப் பொருள் தேடுவதி லேயே கவனம் செலுத்துபவன். இவன் துணைவியும் இத்தகைய ஒத்துணர்வு கொள்ளின் இல்லறம் நன்கு அமையும் என்பதை நன்கு அறிந்தவள். பெண்உள்ளத்தை இளமையும் இன்பமுமே மகிழ் விக்கும் என்ற உண்மையை நற்றிணைத் தோழியொருத்தியின் கூற்றால் அறியலாம். , . வைகல் தோறும் இன்பமும் இளமையும் எய்கணை நிழலிற் கழியுமில் வுலகத்துக் காணிர் என்றலோ அரிதே அதுநனி பேணிர் ஆகுவீர்” - . |வைகல்தோறும் - நாள்தோறும்; கணை - அம்பு; தனி. நன்றாக) . . என்று கூறுவதைக் காண்மின். பொதுவாக பொருள்வயிற் பிரியும் ஐந்திண்ைத் தலைவன் தான் திரும்பிவருங் காலத்தைக் குறித்துச் 23. நற்-24 24. ഒു-46