பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36.2 அகத்திணைக் கொள்கைகள் tதுயில்-உறக்கம்; அரவுறு துயரம்-மணியை இழந்த பாம்பு போன்று அல்லலுறுதல்) - - இதில் 'எம்பெருமான் துயிலறியாது வருந்துதல் அவன் பிழை யன்று' என்று உணர்கின்றான் பாங்கன். இதற்கு முன்னர் கழறி யுரைத்தவன் இப்போது உண்மையை உணர்கின்றான். தலைவனை பாங்சன் இடித்துரைக்கும் உரிமை பெற்றவன். 'குற்றங் காட்டிய வாயில் பெட்பினும்" என்ற தொல்காப்பிய விதியால் பாங்கன் வினாதலும் தலைமகன் உரைத்தலும் போன்ற உரிமைகள் பெறப்படும். இடித்துரைக்கும் உரிமை, மொழிஎதிர் மொழிதல் பாய்கற் குரித்தே" என்ற விதியால் பெறுகின்றான். ஆயின் இங்ஙனம் குறித்ததற்கு எதிர் கூறுதல் அருகியே தோன்றும் என்று தொல்காப்பியர் குறிப் பிடுவர், குறித்தெதிர் மொழிதல் அஃகித் தோன்றும்’ என்பது அவர் கூறும் விதி. தலைவன் தலைவியை மணந்து கொண்டு வாழ்க்கை நடத்தும்போதும் அதில் பாங்கனுக்கும் பங்குண்டு. பல்வேறு காரணங்களால் தலைவி தலைவன் இவர்களிடையே பிணக்கு நேரிடும்பொழுது அவற்றைத் தீர்த்து வைக்கும் வாயில்களுள் பாங்கனை நான்காவது வாயிலாகக் குறிப்பிடுவர் தொல் காப்பியர். அகப்பொருள் விளக்க ஆசிரியராகிய நாற் கவிராச நம்பி பார்ப்பனப் பாங்கன், சூத்திரப் பாங்கன் என இருவகைப் பாங்கர்களைக் குறிப்பிடுவர்" தலைவனின் பெற்றோர் இவர் களிடம் தலைவனை அடைக்கலமாகக் கொடுக்கப் பெற்றதாகவும் கூறுவர் அந்த ஆசிரியர்' ஐந்திணை நெறியில் பாங்கன் பட்ைப்பு இருவகைப் பயனு டையது. முதலா : அவன் ஒர் அறிவிப்பாளனாகப் பயன்படுகின் 67. களவியல்-11 (அடி-9) 68. டிெ-4 (இளம்) 59. கற்பியல்-42 (இளம்) 70. நம்பி அகப்-100, 101. 71. டிெ-107