பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் உறவுடையோர் - 369 குன்றக் குறவன் காதல் மடமகள் மென்றோள் கொடிச்சியைப் பெறற்கரிது தில்ல டைம் புறப் படுகிளி யோப்பலர் புன்புல மயக்கத்து விளைந்தன தினையே.' (குறவன்-கானவர் தலைவன்; காதல்-அன்பு கெழுமிய, கொடிச்சி-மலைநாட்டுப் பெண் (தலைவி): ஒப்பலர்ஒப்புதற்கு எம்மை விடார்; புன்புல மயக்கம்-பண்படுத்தப் பெற்றமையான் மண்ணும் எருவும் பிறவும் கலந்த நிலம்) 'தினை முற்றிவிட்டது. இனி, காவலுக்கு இடம் இல்லை. தலைவியும் வீட்டைவிட்டு வெளியேற முடியாது. அதனால் அவளைக் காணவும் முடியாது' என்கின்றாள் தோழி. ஆகவே, 'விரைந்து வரைந்து கொள்' என்பது குறிப்பு. இது எச்சத்தாற் பெறப்படும் பொருள். இாண்டாவது, வெறியறிவுறுத்தி வரைவு கடாதல், களவில் ஒழுகும் தலைவி ஊணும் உறக்கமும் துறந்து உடல் வேறுபடு கின்றாள். தாய் பெரிதும் கவலை கொண்டு புனங்காக்கச் சென்ற விடத்தில் அணங்கு ஏறப்பெற்றாளோ என்று எண்ணி வேலன் வெறியாட்டால் அதனை அறிவதற்குத் திட்டமிடுகின்றாள், இதனை சிறைப்புறத்திலிருக்கும் தலைவனுக்கு அறிவிக்கின்றாள் தோழி. ... பொய்யா மரபின் ஊர்முது வேலன் கழங்குமெய்ப் படுத்துக் கன்னம் தூக்கி முருகுஎன மொழியும் ஆயின் கெழுதகை கொல்இவள் அணங்கியோற்கே" |பொய்யா - பொய் கூறாத: மெய்படுத்து - உண்மையை வெளிப்படுத்தி: கன்னம்-தாயத்துபோன்ற ஒருபொருள்; முருகு - முருகன்; கெழுதகைகொல் - உரிமையுடைய தாகுமோ அணங்கியோற்கு - வருத்திய தலைவனுக்கு.) 86· ©hq--245 அ-24