பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 அகத்திணைக் கொள்கைகள் 'செவிலி வெறியாடுதலால் தலைவியின் துயரம் மிகும்; பெரு நாணினள் ஆகலின் இறந்துபடுதலும் கூடும். ஆதலால் விரைந்து வரைந்து கோடலே முறை' என்பதைக் குறிப்பால் பெறவைக்கும் தோழியின் திறம் மெச்சத் தக்கது. - களவுக் காதலர்கள் வெளிப்படையாக மணந்து இல்லறம் நடத்தவேண்டும் என்பதே அகத்திணையின் நோக்கம் என்பதை நன்கு அறிந்தவள் தோழி. இந்த நோக்கத்தைப் பொறுப்புடன் நிறைவேற்றுபவள் இவளே. இக்காரணத்தால் கற்பொழுக்கத்திற் காட்டிலும் களவொழுக்கத்தில் இவள் பங்கு மிகவும் இன்றியமை யாதது என்பது உணர்தற்பாலது. அகத்திணைப் பாடல்களில் குறியிடங்கள் அமைப்பதிலும் பிறவற்றிலும் தோழி தலைவனை அலையவைத்து அலைக்கழிவு செய்பவள்போல் தோன்றுவாள். தோழியின் செயல்கள் யாவும் வரைதல் வேட்கைப் பொருளன: வாக இருக்கும். நாள் நீட்டிக்காமல் எப்படியாயினும் தலைவியை மணம் புணர்க்கவேண்டும் என்பதே பொறுப்புடைய தோழியின் கருத்தாகும். அறத்தொடு நிற்றல்: இதில் தலைவியின் காதலைச் செவிலிக்குக் குறிப்பாகப் புலப்படுத்துகின்ற திறம் மிக அற்புத மானது: தோழியின் நுண்ணிய அறிவுத்திறனை ஈண்டுக் காணலாம். தலைவியொருத்தி இற்செறிக்கப்பெறுகின்றாள். வீட்டில் காப்பும் மிகுதியாகின்றது. தலைவியின் உடல் மெலிவு கண்டு உண்மையை அறிய வேலனைக்கொண்டு வெறியாட்டெடுக்க நினைக்கின்றனர் அவள் வீட்டார். இந்நிலையில் தோழி செவிலிக்கு வெறிவிலக்கி அறத்தொடு நிற்கின்றாள். அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைப் புலவுச்சேர் துறுகல் ஏறி அவர்நாட்டுப் பூக்கெழு குன்றம் நோக்கி நின்று மணிபுரை வயங்கிழை நிலைபெறத் தணிதற்கும் உரித்துஅவள் உற்ற நோயே..' (படப்பை-புழைக்கடைத் தோட்டம்: புலவுசேர்-புலால் நாற்றம் தங்கிய துறுகல்-குண்டுக்கல்; மணிபுரை-நீல மணியையொத்த வயங்கு இழை-ஒளிரும் அணிகலன்களை யுடையவள்) 87. ബ്ലൂ.-210