பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் உறவுடையோர் 379 விடல்; பெரிய அவன்-திதியன்; விழுமிய-சிறந்த பொரு களம்-குறுக்கை: ஒழித்த-வெட்டிச் சாய்த்த விழுமம் புன்னை-பூவும் மலரும் மிக்க புன்னை) இதில் 'அவர் விரும்புங்கால் நீ மிஞ்சுகின்றாய்; நீ விரும்பினால் அவர் மிஞ்சுகின்றார். குறுக்கைப் பறந்தலைப் போரில் வீழ்ந்த புன்னைபோல நான் இறக்கும் நாளில்தான் நீங்கள் சேர்ந்து வாழ்வீர்கள். நான்தான் உங்கள் பூசலுக்குக் காரணம் போலும்' என்று மனம் உருகப் பேசுகின்றாள் தோழி. இதனால் தலைவி யின் ஊடல் தீர்கின்றது. தலைவன் பாணனைக் கருவியாகக் கொண்டு பரத்தையிற் பிரிகின்றான். இதனால் நெஞ்சழிந்த தலைவியின் ஊடல் மிஞ்சிப் போகின்றது. தணியாத நிலையை அடைகின்றது. பாணன் கேட்கு மாறு தலைவியிடம் கூறுகின்றாள் தோழி: வயல்வெள் ஆம்பல் சூடுதரு புதுப்பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் ஒய்விடு நடைபகடு ஆரும் ஊரன் தொடர்புநீ வெஃகினை யாயின் என்சொல் கொள்ளல் மாதோ முள்ளெயிற் றோயே! நீயே பெருநலத் தகையே; அவனே நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தித் தலைகமழ் புதுமலர் ஊதும் வண்டென மொழிய மகன் என்னாரே' (சூடு-நெற்சூடு, புனிதுஆ-அணிமையில் ஈன்ற பசு, மிச்சில்மிகுந்த உணவு ஒய்விடு நடை-உழுதுவிட்ட ஒய்ந்த நடையை யுடைய பகடு-எருது: ஆரும்பதின்னும், வெஃகு தல் விரும்புதல்; கொள்ளல்-கொள்வாய் நலத்தகை” இளமையும் தகுதிப்பாடும் உடையை நடுநாள்-நடுயாமம்; மகன் என்னார் ஆண்மகன் என்று சொல்லார்) இதில், புனிற்றா தின்ற மிச்சிலை உழுதுவிடு பகடு சென்று தின்றாற்போல நீ இளமைச் செவ்வி யெல்லாம் அவனை நுகர்ந்து புதல்வனைப் பயந்த பின்னர் நீ உண்ட மிச்சில் போன்ற அவனைப் 101. நற்-290,