பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 அகத்திணைக் கொள்கைகள் நிலை மேவற்கும் இடம் அமைத்துச் செல்லுகின்றனர். தொல் காப்பியர் பரத்தையர்களை காமக் கிழத்தியர்' என்ற பெயரால் குறிப்பர்; இவர்களுக்குரிய கிளவிகளாக ஏழு கிளவிகளையும் புலப் படுத்துவர்.' இவ்விடத்தில் இளம்பூரணர் கூறுவது: காமக் கிழத்தியராவார் பின் முறை ஆக்கிய கிழத்தியர். அவர் மூவகைப் படுவர்: ஒத்த கிழத்தியரும், இழிந்த கிழத்தியரும், வரையப் பட்டாரும் என ஒத்த கிழத்தியர் முந்துற்ற மனையாளன்றிக் காமம் பொருளாகப் பின்னுந் தன் குலத்துள்ளாள். ஒருத்தியை வரைதல். இழிந்தாராவார்-அந்தணர்க்கு அரச குலத்தினும் வணிக குலத்தினும் வேளாண் குலத்தினும் கொடுக்கப்பட்டாரும், அரசர்க்கு ஏனை இரண்டு குலத்தினும் கொடுக்கப்பட்டாரும் வணிகர்க்கு வேளாளர் குலத்தில் கொடுக்கப்பட்டாரும். வரையப் பட்டார்-செல்வராயினர் கணிகை குலத்தினுள்ளார்க்கும் இற் கிழமை கொடுத்து வரைந்து கோடல். அவர், கன்னியில் வரையப் பட்டாரும் அதன் பின்பு வரையப்பட்டாரும் என இரு வகையர். அவ்விருவரும் உரிமை பூண்டமையால் காமக்கிழத்தியர்பாற். பட்டனர் என்பது. இதே இடத்தில் நச்சினார்க்கினியர், காமக் கிழத்தியராவார் கடனறியும் வாழ்க்கையுடையராகிக் காமக் கிழமை பூண்டு இல்லறம் நிகழ்த்தும் பரத்தையர். அவர் பலராதலிற் பன்மையாற் கூறினர். அவர் தலைவனது இளமைப் பருவத்திற் கூடி முதிர்ந்தோரும் அவன்தலை நின்று ஒழுகப்படும் இளமைப் பருவத்தோரும், இடைநிலைப் பருவத்தோரும் காமஞ் சாலா இளமையோரும் எனப் பல பகுதியினராம். இவரைக் காமக் கிழத்தியர் எனவே, கண்ணாத காமக்கிழத்தியரும் உளராயிற்று. அவர் கூத்தும் பாட்டும் உடையராகி வரும் சேரிப்பரத்தையரும், குலத்தின்கண் இழிந்தோரும் அடியரும் வினைவல பாங்கினரும் பிறருமாம்' என்று உரைப்பர். இவற்றையெல்லாம் மனத்திற் கொண்டு பிற்காலத்து நாற்கவிராச நம்பி, ஒருவன் தனக்கே உரிமை பூண்டு வருகுலம் பரத்தையர் மகளி ராகிக் காமக்கு வரைந்தோர் காமக் கிழத்தியர். ' (காமக்கு-காமங் காரணமாக; 107, கற்பியல்-10 108. நம்பி அகப்-113.