பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் உறவுடையோர் 387 எழுவர் நல்வலம் அடங்க ஒருபகல் முரசொடு வெண்குடை அகப்படுத் துரைசெலக் கொன்றுகளம் வேட்ட ஞான்ற வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே.' (புனல்-நீர், வார்மணல்-மிக்க மணல்; காசோலை; வதுவை-மணம்; அகப்படுத்து-பற்றிக் கொண்டு; உரைபுகழுரை செல-பரவ; ஆர்ப்பு-ஆரவாரம்) இதில் நறும்பல் கூந்தல் பரத்தையை மணந்து கொண்ட செய்தி பற்றிய அலர் தலையாலங் கானத்துப் பெரும் போரில் நெடுஞ் செழியன் வெற்றி கொண்டபோது மகிழ்ச்சிப் பெருக்கால் வீரர் களிடையே தோன்றும் ஆரவாரத்தினும் பெரிதாகப் பரவியது' என்று தலைவி கூறுவதைக் காண்க. பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் தன் ஆற்றாமை வாயி லாகப் புகுந்து பள்ளி இடத்தானாகின்றான். தலைவனை நெருங்கும் தலைவி சொல்லுகின்றாள்: என், தொல்கவின் தொலையினும் தொலைக! சார விடேஎன்: விடுக்குவென் ஆயின், கடைஇக் கவவுக்கை தாங்கும் மதுகைய குவவுமுலை சாடிய சாந்தினை; வாடிய கோதையை: ஆசில் கலங்கழிஇ அற்று: வாரல்; வாழிய கவைஇநின் றோளே!' (கவின்-அழகு; சார-நெருங்க; கவவுக்கை-அகத்திடுகைகள்: மதுகை-வலிமையுடைய கோதை-மாலை: கலங்கழி.இ அற்று-கலங்கழித் தெறிந்த தாழியைத் தீண்டிய தன்மை போலாகும்) இதில் தலைவி, 'என் பழைய அழகெல்லாம் கெட்டொழியினும் உன்னை என் அருகில் நெருங்க விடேன். நீ பரத்தையுடன் முயங்க லால் துவண்ட மாலையையுடையை. நீ சார்த்திக் கழித்த பாண்டம்’ என்று சொல்லுவதைக் காண்க. குறுந்தொகைத் தலைவியொருத்தி ஊடுவதையும் காண்டோம். இங்குத் தலைவன் தன்பால் பரத்தைமை இல்லை யென்று தெளிவிக்க, அதனைக் கேட்கும் தலைவி கூறுகின்றாள்: 119. அகம்-36 120. நற்-350