பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 அகத்திணைக் கொள்கைகள் நிைைகள், தலைவி தலைவனுடன் செல்லும் நிகழ்ச்சியைக் குறித்துக் கண்டோர் கொள்ளும் பல்வேறு கருத்துகள் ஆகிய வற்றை ஈண்டுக் காணலாம், (ii) அறிவர் இவர் துறவுள்ளமும் முக்காலத்தையும் அறியும் ஆற்றலும் உடைய பெரியோர். இவரைத் தொல்காப்பியர், மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன்" - என்று சிறப்பிப்பர். முக்காலமும் உணர்ந்த முனிவர் என்பர் புறப்பொருள் வெண்பா மாலை உரையாசிரியர் கற்பு முதலிய நல்லவற்றைக் கற்பித்தலும் தீயவற்றைக் கடிதலுமாகிய செயலையுடையார் இவர். தலைவனும் தலைவியும் இவரது ஏவலைச் செய்து நிற்பர்; அவர்களை இடித்துரைத்து நல்வழி யிலே நிறுத்துதல் இவர்தம் இயல்பு. தலைவன் தலைவியர் கற்பு நெறியில் ஒழுகுங்கால் இவர் வாயிலாக அமைவர்' இவர் கூற்றை யாவரும் கேட்டு அதன்வழி ஒழுகுவர்." அறிவரின் உரிமையைக் குறித்து நம்பி அகப் பொருளும், அறிவர் கிழவோன் கிழத்தியென் றிருவர்க்கும் உறுதி மொழிந்த உயர்பெருங் குரவர்' என்ற நூற்பாவால் குறிப்பிடும். தலைவன் குறித்துச் சென்ற 8. புறத்திணை-16 (இளம்) அறிவன் என்றது.கணியனை. மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுத லாவது, பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளும் தூமமும் மீன் வீழ்வும் கோள் நிலையும் மழை நிலையும் பிறவும் பார்த்துப் பயன் கூறல். ஆதலான் மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன்' என்றார்' என்று உரைப்பர் இளம்பூரணர். 9. கற்பியல்-13 (இளம்) 10. டிெ-14 (இளம்) 11. டிெ-52 (இளம்): செய்யு-182 (இளம்) 12 டிெ செய்யு-189 (இளம்) 13. நம்பி அகப்-112 -