பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 அகத்திணைக் கொள்கைகள் இவ்வாறு செய்வரெனக் கூறுதல். நுகர்ச்சி ஏத்தல் என்பது, இனியது ஒன்று எனப்புகழ்தல். பல்லாற்றானும் ஊடலில் தணித்த லும் என்பது, பல நெறியானும் ஊடலினின்றும் தலைமகளை மீட்டல், அஃதாவது, இவ்வாறு செய்தல் குற்றம் என்றானும் அன்புடையார் செய்யாரென்றானும், மனைக்கிழத்தியர்செயலன்று என்றானும் இவ்வாறு கூறுதல். உறுதி காட்டல் என்பது, இவ்வூடல் தணிந்ததனால் பயன் இது எனவும், நன்மை பயக்கும் எனவும் கூறுதல். அறிவு மெய்ந்நிறுத்தல் என்பது, தலைமகள் மெய்யின்கண் மிக்க துணிவினால் கெட்ட அறிவை இது தக்கது.' அன்று என அறிவு கொளுத்துதல். ஏதுவின் உரைத்தல் என்பது, இவ்வாறு செய்யின் இவ்வாறு குற்றம் பயக்கும் என ஏதுவினால் கூறுதல். அது பிறள் ஒருத்தி கெட்டபடி கூறுதல். துணியக் காட்டல் என்பது. அவள் துணியுமாறு காரணம் காட்டுதல். அணி நிலையுரைத்தல் என்பது, இவ்வாறு உளதாகிய அணியைப் புலர விடுகின்றதல்ை பயன் என்னை எனக் கூறுதல். இவ்வாறு விளக்குவர் இளம்பூரணர்: இவற்றிற்குச் செய்யுள் காண்டல் அரிது. நம்பியாரும் இவரது செயல்களைத் தொகுத்து நூற்பா அமைத்துக் காட்டுவர்." (vii) இளையோர் இவர் தலைவன் தலைவி இவர்களை விட்டுப் பிரியாது அவர்க ளுடன் இருந்து அவர்கட்குக் குற்றேவல் செய்யும் ஏவலர். ஆற்றது. பண்பும் கருமத்து வினையும் ஏவன் முடியும் வினாவும் செப்பும் ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும் தோற்றம் சான்ற அன்னவை பிறவும் இளையோர்க் குரிய கிளவி என்ப." 41. நச்சினார்க்கினியர் வேறு பொருள் கூறுவர்: "முலை யினும் தோளினும் முகத்தினும் எழுதுங்கால் புணர்ச்சி தோறும் அழித்தெழுதுமாறு இது எனக் கூறுதல்' என்பது அது. 42. நம்பிஅகம்-97 43. கற்பியல்-29 (இளம்)