பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 அகத்திணைக் கொள்கைகன் வரும் போதும் இவன் தலைவனின் தேரைக் கடவுபவன். குதிரையின் இயல்பை அறிந்து விரைவாகத் தேரை ஒட்டிச் செல் வதில் வல்லவன் இவன். தலைவற்குரிய கிளவிகளை யெல்லாம் தொகுத்துக் கூறும் தொல்காப்பியர் பாகனைக் குறிப்பிடுங்கால், பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்" என்று கூறுவர். தலைவியைப் பிரிந்துறையுங்கால் இவன் ஒருவனே தலைவனின் அணுக்கத் தொண்டனாக இருப்பதால் இவனிடம் மட்டிலுமே தன் கடமைகளை இனிதே முடித்த மகிழ்ச்சியையும் பிறவற்றையும் புலப்படுத்துவான். “... ... ... ... ... ... ... ... முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும்' என்ற தொல்காப்பியர் கூற்றால் இதனை அறியலாம். |எட்டுத் தொகைநூல்களில், சிறப்பாக நற்றிணையிலும் அகநானூற்றிலும், தலைவன் தலைவியைச் சந்திக்க விரும்பும் தன் ஆரா விருப்பத்தை புலப்படுத்தும் நிகழ்ச்சிகள் அடங்கிய பாடல்கள் பலவற்றைக் காணலாம். எல்லிடை யுறாஅ அளவை வல்லே கழலொலி நாவில் தெண்மணி கறங்க நிழலொலிப் பன்ன நிமிர்பரிப் புரவி வயக்குறு கொடிஞ்சி பொலிய வள்பாய்ந்து இயக்குமதி வாழியோ கையுடை வலவ! பசப்புறு படர்அட வருந்திய நயப்பின் காதலி நகைமுகம் பெயவே." (எல் - இருள்; உறாஅளவை - படரா முன்னரே, வல்லே ; விரைந்து; ஒலிநா - ஒலிக்கும் நா; தெள்மணி - தெளிந்த மணி, கறங்க - ஒலிக்க: நிமிர்பரி - நிமிர்ந்த செவிலினை யுடைய, வள்பு - கடிவாளம்; கொடிஞ்சி தேரின் உறுப்பு பசப்பு - பசலை; படர் - துன்பம்; அட வருந்த நயப்பு - அன்புமிக்க) இப்பாடற் பகுதியில் என் காதலியின் முறுவலித்த முகத்தினைக் காண்பதற்காக, தேரிலுள்ள மணி ஒலிக்க நிமிர்ந்த செலவினை 51. கற்பியல் - 5 (வரி 48) 52. அகத்திணை - 44 (அடி - 19, 20) 53. அகம் - 344