பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 அகத்திணைக் கொள்கைகள் அன்னை என்னை என்றலும் உளவே தொன்னெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்மனார் புலவர்.” என்று ஆசிரியர் இதற்கு விதி செய்வர். அன்னாய் இவனோர் இளமாணாக்கன்' ‘புல்லின் மாய்வ தெவன்கொல் அன்னாய்' இவை தோழியைத் தலைவி அன்னாய்’ என்றன. அன்னாய் வாழிவேண் டன்னை' 'அன்னாய் வாழிவேண் டன்னை' இவை தோழி தலைவியை அன்னை என்றன. 'எனக்கும் ஆகாது என்ஐக்கும் உதவாது' ஒரீஇனன் ஒழுகும் என்ஐக்குப் பரியலென் மன்யான் பண்டொரு காலே." இவை தலைவி தலைவனை என்ஜ' என்றன. அகப்பாடல்களின் யாப்பமைதி மனித இனம் வளர்த்த கலை கள் யாவும் அவ்வினம் வளர்ந்த வரலாற்றை ஒட்டியுள்ளன என்று கலை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர். மானிட வாழ்க்கையிலிருந்து முளைத்த கலைகள் வாழ்க்கையில் ஒய்வான இன்பப் பகுதிக்காக என்றே ஒதுங்கி வளர்ந்தன என்றும், இவை வாழ்க்கையின் உழைப்புப் பகுதியில் சேராமல் இன்பப் பகுதிக்கு மட்டும் உரியனவாக நின்றன என்றும் கூறுவர். இவ்வாறு பிறந்து வளர்ந்த இசை என்னும் கலை தொடக்கத்தில் பொருளற்ற ஒலியொழுங்கும் பொருளுடைய ஒலி யொழுங்கும் கலந்ததாகநின்றது. இன்றும் அவை இசையில் ஒரளவு கலந்தே நிற்பதைக் காணலாம் பொருளற்ற ஒலியொழுங்கு உணர்ச்சியைப் புலப்படுத்த வல்லதாக இருப்பதால்தான் அஃது இன்றும் போற்றப்படுகின்றது. பொருள் ஒலிகள் அமைந்த முறையே பாட்டு என்பது. 39. பொருளியல்-52 (நச், 31. குறுந்-33 32, ആു-150 33. ஐங்குறு-206 34. டிெ_206 35. குறுந் 27 36. டிெ-203