பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43? அகத்திணைக் கொள்கைகள் சொல்லவேண்டும். காரணம், குறுந்தொகை இருநூற்றுக்கு மேற் பட்ட புலவர்களின் பாடற்றொகுதியாதலால் அவர்தம் அறிவுக் கூர்மை ஆங்குச் சுவை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. உரிப்பொருள் ஒன்றே துவலும் பாக்கள் எட்டுக்தொகை நூல்களாகிய குறுந்தொகையிலும்ஐங்குறுநூற்றிலும்தான்காணப் பெறுகின்றன. இப்பாக்கள் பாலைத்தினை முல்லைத்திணை எனச் செவ்விதின் பெயர் பெறுகின்றன. காரணம் திணைமை யாவது உரிப்பொருளே பற்றியது. முதற்பொருளும் கருப்பொரு ளும் அப்பொருட்குத்துணையாக நிற்றல் அத்துணைய்ே. இதனால் அகத்திணை எழுமைப் பகுப்பு காதலர்களின் கைக்கிளை புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் பெருந்திணை என்னும் காம ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்பது தெளிவு. உரிப்பொருளை மட்டிலும் கொண்ட ஒருசில பாடல்களை ஈண்டுக் காட்டுவோம். நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே இமைதிய்ப் பன்ன கண்ணிர் தாங்கி அமைதற் கமைந்தநங் காதலர் அமைவில ராகுதல் நோமென் நெஞ்சே." Iதிய்ப்பு-தியச் செய்யும் கருவி: கண்ணிர் தாங்கி-கண் ணிரைத் துடைத்து அமைதற்கு-அளவளாவுதற்கு) தலைவர் இப்பொழுது உடனிராமையால் தன் நெஞ்சு வருந்து வதாகத் தலைவி கூறுவதாக அமைந்தது இப்பாடல்; உரிப் பொருளாகிய தலைவர் கண்ணிரைத் தாங்கியவராதலின் மீண்டும் அருள்வார் என்று நினைந்து ஆற்றுவதாகக் கூறுகின்றாள் தலைவி. மாவென மடலும் ஊர்ப; பூவெனக் குவிமுகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப மறுகின் ஆர்க்கவும் படுப; பிறிதின் ஆகுப காமம்காழ்க் கொளினே." (மா-குதிரை மடல்-பனைமடல்: ஊர்ப-ஊர்வர்(ஆண்கள்) கண்ணிமாலை மறுகு-விதி. ஆர்க்கவும்-ஆரவாரிக்கவும்: பிறிது-வரை பாய்தல் முதலியவை) - 5. குறுந்-4 6. டிெ-17