பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 அகத்திணைக் கொள்கைககள் காட்சி-6 காலம் : மாலை (மயக்கம்). இடம் : தலைவி, தலைவன். நிகழ்ச்சி : பருவம் எய்தப்பெறாத இளமகள் ஒருத்தி ஒர் இள மரக்காவில் மலர் கொய்து கொண்டு நிற்பதை ஓர் ஆடவன் கண்ணுறுகின்றான். (தலைவன் தன்னுள்ளே) 'மலரும் மயிரும் தம்முள் மயங்கும்படி முடித்துக் கொண்டு நிறைமதி இனிய பசுங்கதிர்களைப் பரப்பிவருவது போல் முகவொளி வீசி நிற்கும் இவள் யார்கொல்? கொல்லிமலைப் பாவையோ? நல்லார் உறுப்பெல்லாம் கொண்டு வல்லானாகிய அவன் வகுத்த அழகியோ? ஆடவர்மீதுள்ள வெறுப்பினால் பெண் வடிவு கொண்டு வந்த கூற்றமோ? இல்லை. இவள் இவ்வூரிலுள்ள செல்வமகளாகவே இருத்தல் வேண்டும். இவளைக் காத்துப் போந்தவர்கள் இவளைத் தனியே விடுதல் கொடிது”. என்று கருதுகின்றான். பின்னர் அவளை நோக்கி நல்லாய், யான் கூறுவதைக் கேட்பாயாக’ என்று அவளிடம் பேச்சுத் தொடர்பு கொள்ளு கின்றான். கண்டவர் காதல் கொள்ளும் பண்புடைய பெண்மணியே, அன்ன நடையும், அணிமயிற் சாயலும், புறவின் மடப்பமும் ஒருங்கே பொருந்திய நின்னுடைய எழில் நின்னைக் கண்டோர் கருத்தினை மயக்க முறுத்தி ஈர்க்கும். நீ அறிவாயோ? அறியா Gu Isr2'- என்று வினவுகின்றான். 'வளைந்த முன்கையினையும் வெள்ளிய எயிற்றினையு '-4 அழகிய நல்லாய், நிறத்தாலும் திரட்சியாலும் முங்கிலை யொத்தும், மென்மையால் நுண்ணிய துகிலினையுடைய அணியை யொத்தும், காமக் கடலை நீந்தத் தெப்பமாதலால் வேழங் கோலால் செய்த புணையையொத்து விளங்கும் நின்னுடைய மெல்லிய தோள்கள் நின்னைக் கண்டார்க்கும் துன்பம் விளைக்கும் என்பதை நீ அறிவாயோ? அறியாயோ?: என்று கூறுகின்றான். 'நேரிதான மயிர்வரிகளையுடைய ເທສສສສມມຸ மடப்பத் ”கயும் உடைய நல்லாய், முற்றின கோங்க மரத்தின் இளமுகை °யயும் அடிவரைந்து கட்புலனான குரும்பையினையும், மழை