பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை உவமம் 471 கிடக்கும் மணலை நோக்கிச் செருக்கி நடந்து துயிலா நிற்கும். தலைவனுடைய ஊரில் இத்தகைய செயல் நடைபெறுகின்றது. தலைவனுடைய ஊரைப்பற்றி உள்ளுறை உவமமாகக் கூறும் இப்பாடற் பகுதியில் அடிப்டையாக உறையும் கருத்து இது: தாமரை மலர் தலைவிக்கும், குவளை மலர் காதற் பரத்தைக்கும், மணற்குன்று சேரிப்பரத்தைக்கும், எருமை தலைவனுக்கும் உவமை யாக வந்தன, தலைவன் தலைவி நலனை வெறுத்துக் காதற் பரத்தையிடம் இன்பந் துய்த்துச் சேரிப் பரத்தையின் மனையின் கண்ணே உறங்குவானாயினன் என்பது. இது தலைவியின் கூற்றாக வந்தது. பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் தலைமகளை அணைகின்றான். அவள் அவன்மீது கொண்டிருந்த சினத்தை உள்ளடக்கிக் கொண்டு உடன் பட்டாள் போன்று, 'ஊரனே, நீ, இப்பொழுது மிக்க விருப்பமுற்றாய் போன்று புல்லுகின்றனை. முன்பு என் கோதை வாடுமாறு கை யகன்று ஒழிந்தாய் என்பதை யான் அறிவேன்' என அவன் பரத் தையிற் பிரிந்து சென்றதனைக் கூறி, ஊடல் நீங்கா நிலையில் உள்ளாள் என்பதைக் காட்டுவது இப்பாடல் , அகநானு ற் றில் : ஒரு சில உள்ளுறை உவமங்களைக் கண்டு இன்புறுவோம். (1) தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தையிடத்துச் செல்லுகின்றான். சில நாட்கள் கழிந்த பின்னர் மீண்டும் தலைவியை நாடி வருகின்றான். அவ்வாறு வாயில் வேண்டிச் சென்ற தலைமகட்கு வாயில் மறுக்கின்றாள் தோழி, தோழி தலைவனை நோக்கிக் கூறுகின்றாள். சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் ஊர்மடி கங்குலின் நோன்தளை பரிந்து கூர்முள் வேலி கோட்டின் நீக்கி நீர்முதிர் பழனத்து மீனுடன் இரிய அந்துாம்பு வள்ளை மயக்கித் தாமரை வண்டுது பனிமலர் ஆரும் ஊர!" (முனை இய வெறுத்த; காரான் எருமை: ஊர்மடிகங்குல் ஊரார் துயின்ற இருள்; நோன்தளை - வலிய தளை பரிந்து-அறுத்துக் கொண்டு; கோடு - கொம்பு, நீர் முதிர் 26. அகம் -46