பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளுறை உவமம் 475


கலித்தொகையில்சிலஉள்ளுறைகளைக்காட்டிவிளக்குவோம்.

(1) இடியுமிழ் பிரங்கிய விரவுபெயல் நடுநாட் கொடிவிடு பிருளிய மின்னுச்செய் விளக்கத்துப் பிடியொடு மேயும் செய்புன் யானை அடியொதுங் கியக்கங் கேட்ட கானவன் நெடுவரை ஆசினிப் பணவை ஏறிக் கடுவிசைக் கவணையிற் கல்கை விடுதலின் இறுவரை வேங்கையின் ஒள்வி சிதறி ஆசினி மென்பழம் அளிந்தவை உதிராத் தேன்செய் இறாஅல் துளைபடப் போகி நறுவடி மாவின் பைந்துணர் உழக்கிக் குலையுடை வாழைக் கொழுமடல் கிழியாப் பலவின் பழத்துள் தங்கும் மலைகெழுவெற்பன் 29"

(பெயல்மழை: இருளிய-இருண்ட: பிடி-பெண் யானை: செய்புன்-புன்செய்; அடி-அடிகள்; இயக்கம்-ஓசை; கானவன்-வேடன், பணவை-பரண்; கவணை-கவண், கைவிடுதல்-எறிதல்; இறுவரை-முறிந்த மலை; வி-பூ: அணிந்தவை-நெகிழ்ந்தவை; இறாஅல்-தேன் அடை: போகி-ஊடுருவி, பைந்துணர்-பசிய கொத்து; உழக்கி-கலக்கி; கொழுமடல்-கொழுவிய இலை)

            இக் குறிஞ்சிக்கலிப் பாடலில் அடங்கிய உள்ளுறை: இரவில் யானையின் காலடி ஓசையைக் கேட்ட தினைப்புனக் கானவன் ஒசை வந்த திசையை நோக்கிக் கவண் கல்லை வீசி விட்டனன்; அக்கல் வேங்கைப் பூக்களைச் சிதறச் செய்தது; கனிந்த ஆசினிப் பலாப் பழங்களை உதிர்த்தது: தேன் அடையைத் துளைத்தது: மாங்கொத்துகளை உழக்கியது; வாழை மடலைக் கிழித்தது: இறுதியில் அக்கல் பலாப் பழத்துள் தங்கி விட்டது.
            இந்த உள்ளுறையில் அடங்கிய பொருள்: இயக்கம் கேட்ட கானவன் கல் கைவிடுதலைத் தலைவன் மின்னல் வழிகாட்ட வந்து தலைவியோடு புணர்ந்த நிலைமை அலர் கூறக் கேட்ட செவிலி தன் மனையிடத்தே வெளியாக இருந்து கடுஞ்சொல் கூறி இற்செறித்தலாகவும், அக்கல் வேங்கையினது செவ்விப் பூவைச் சிதறின தன்மை தலைவன் இன்பம் நுகர்கின்ற மனவெழுச்சியைக்

29. குறிஞ்சிக் கலி-5