பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/516

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 . அகத்திணைக் கொள்கைகள் வழக்கம் போல் உன்னுடைய குறுமொழிக்கு உடன்பட்டு ஒர்தலில்லாத பரத்தையரின் தாய்மார்க்கு நாளை ஒரு மகள் வேண்டுமென்று அவர் உடன்படுமாறு உன் யாதுமில்லாத பொய் மொழியைச் சொல்ல வில்லையோ? சொல்லியிருப்பின் இங்கு வந்திராய்' என்பது. - தோழி விறலிக்கு உணர்த்த நினைக்கும் கருத்து வாளை மீன் தாமரை வருந்த, மகளிர் இரிந்தோட, குண்டு நீரில் வெடி பாய்ந்து பிறளும் என்பது, தலைமகள் யாம் வருந்தக் காமக் கிழத்தியர் இரிந்தகல விருந்தாக நீ புணர்த்திய புதிய பரத்தை யிடத்தே சென்று தங்காநிற்கிறான்' என்பது. தோழியின் கூற்றில் வேறொரு பொருள் தோன்ற நின்று இறைச்சியாயினமையை உணர்ந்து மகிழ்க, பாசடைதயங்க......ஊரற்கு’ என்றதினின்றும் தலைவனின் பரத்தை யொழுக்கமாகிய வேறொரு பொருள் தோன்ற நின்றதைக் காண்க. விறலியின் பயனற்ற சொல் பரத்தையர்க்கும் அவரன்னையர்க்கும் ஏற்பதன்றி இங்குப் பயன் படாதென்ற குறிப்பையும் உணர வைக்கின்றாள் தோழி. (2) தலைமகளைத் தலைமகன் கொண்டுதலைக் கழிந்தமை யைக் கேள்வியுறுகின்றாள் செவிலித்தாய். இதனை மிக வருந்திய நிலையில் நற்றாய்க்குக் கூறுகின்றாள். தலைவியை ஈன்ற தாய் அவ்வாறு தன் மகள் சென்றது அறத்தாறு எனக் கொண்டாளாயினும் பண்டுதன்னைச் சிறிதுபொழுது பிரியினும் நொந்து புலம்பக் கூடியவள் எவ்வாறு பாலை நிலத்தில் செல்லு வளோ என்று மகளது அச்சத்தன்மை முதலாயவற்றுக்கு அச்ச முற்று இரங்கிக் கூறுகின்றாள். நற்றாயின் கூற்றாக அமைந்த பாடற் பகுதி: நின்ற வேனில் உலந்த காந்தள் அழலவிர் நீளிடை நிழலிடம் பெறாஅது ஈன்றுகான் மடிந்த பிணவுப்பசி கூர்ந்தென மான்ற மாலை வழங்குநர்ச் செகீஇய - புலிபார்த் துறையும் புல்ல தர்ச் சிறுநெறி யாங்குவல் லுனள்கொல்!?? 19. கொண்டுதலைக் கழிதல்-உடன்போக்கு. 20. நற்-29 4: .