பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$30 . அகத்திணைக் கொள்கைகள் நற்றிணைப் பாடல் ஒன்றில்" தோழி பாணனுக்கு வாயில் மறுக்கின்றாள்; பரத்தையிற் பிரிந்து சென்ற தலைவன் சிறைப் புறத்தில் இருந்து கொண்டு வாயில் வேண்டிச் செல்லுமாறு பாணனை அனுப்புகின்றான். பாணனை மறுக்கின்ற தோழி தலை மகன் கேட்குமாறு தலைவியை நோக்கிக் கூறுகின்றாள்: அன்னாய் ஊரன் நின்னையஞ்சிக் குழை பெய்து மாலை சூடிக் குறிய பசிய தொடியணிந்து மகளிர் வடிவங் கொண்டு விழாக் களத்துத் துணங்கையாடுகின்றான் என்று கேள்வியுற்று அவனைக் கைப்பிடி யாகப் பற்ற வேண்டும் என்று சென்றேன். அங்ஙனம் சென்று பொழுது அயலானாகிய அவன் மகளிர் கோலத்துடன் வேறொரு வழியில் விரைவில் வந்து எதிர்ப்பட்டான். இங்ஙனம் செய்யும் நின்னைக் கேட்போருண்டோ? இல்லையோ?” என்று யான் கூறினேன். அவனும் ஒன்றும் அறியாதவன் போல் என்கண் பசலை அழகுடைய தென்றனன். அவன் செம்மாப்புடையவனா யினும் அவனை வணங்காமல், ஆராயாமல் துணிந்து, எலுவ, நீ நானுடையை அல்லை என்று கூறிவந்தேன்' என்கின்றாள். அயலான் என்றது, பாணன் நீங்குதற் பொருட்டு. பசலை அழகுடையது என்றது. பெண்பால் ஒருத்தி இவளெனத் தோழி கருதுதற் பொருட்டு. துணங்கையாடியதையும் மகளிர் வடிவம் பூண்டதையும் கூறியது, சினம் மாறாள் என்று பாணன் கருதுதற் பொருட்டு. இங்ஙனம் பல்லாற்றானும் மருதத் திணையை அழகுறப் புனைந்து காட்டுதலால் கவிஞர் மருதம் பாடிய” என்ற சிறப்புடைய அடையைப் பெற்றதில் வியப்பொன்றும் இல்லை. (w) மருதன் இளநாகனார் ஐந்து திணைப் பொருள்களிலும் கற்பனை நயத்துடன் பாட வல்ல பெற்றியராக விளங்கும் இப்பெருமகனார் 74 அகப்பாடல் களின் ஆசிரியர். மருதக்கலி இவர்தம் ஒப்பற்ற இலக்கியக் கொடை, 35 கலிப்பாக்களைத் தவிர, இவர் பாடியனவாக அக நானுாற்றில் 23, நற்றிணையில் 12, குறுந்தொகையில் 4 பாடல்கள் உள்ளன. இப்புலவர் பெருமான் இரு துருவங்களில் இருப்பவர்கள்போல் நாணுடைத் தலைவன் ஒருவனையும் நாணில் தலைவன் ஒருவனை 23. நற்.ை