பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/576

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 அகத்திணைக் கொள்கைகள் (கார்-கார்ப் பருவம்; தேறேன்-தெளியேன்; வழங்கலர். கூறார்; என்று கூறித் தான் ஆற்றியிருத்தலைப் புலப்படுத்துகின்றாள். இது கற்பில் பாலை. ஐங்குறு நூற்றில் ஒரு பாடல். தலைவி இற்செறிப்பு, காவல் மிகுதி, நொதுமலர் வரைவு முதலியவற்றைத் தாங்க முடியாமல் உடன் போக்கிற்கு உடன்பட்டுத் தலைவனுடன் செல்லுகின்றாள். அவர்கள் பாலை நிலப் பரப்பில் அரிதிற் பெற்றதொரு சோலை யிலே இளைப்பாறுகின்றனர். அச் சிறுபொழுதில் தலைவி பாதிரிப் பூக்களாலாகிய மலர் மாலை தொடுக்கின்றாள். அவளுடைய கலைத்திறங் கண்ட தலைவன் அவளைப் பெரிதும் புகழ அவள் நாணிக் கண்புதைக்கின்றாள். இதனைக் காட்டும் சொல் லோவியம்: உயர்கரைக் கான்யாற் றவிர்மண லகன்றுறை வேனிற் பாதிரி விரிமலர் குவைஇத் தொடலை தைஇய மடவரல் மகளே கண்ணினும் கதவநின் முலையே முலையினும் கதவநின் றடமென் றோளே."" (கான்யாறு-காட்டாறு; அவிர்மணல்-விளக்கமுடைய எக்கர்; குவைஇ-குவித்து தொடலை-மாலை, தைஇய-புனைந்த; கதவ.வெகுளி மிக்கன; “நின்னுடைய விழிகளைவிட வெகுளி மிக்கன நின் முலைகள்; முலைகளை விட வெகுளி மிக்கன நின் மெல்லிய தோள்கள். அங்ஙனமிருக்க இவற்றை விடுத்து விழிகளை மட்டிலும் புதைத்தல் எற்றிற்கு' என்று கூறி அசதி யாடி மகிழ்கின்றான் தலைவன். இது களவில் பாலை . இவர்தம் உடன்போக்குத் துறைப்பாடல்கள் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன; படிக்கப் படிக்க வாயில் தேனூறு கின்றன. நிகழ்ச்சிகள் சிந்தைக்கு விருந்தாக அமைந்து சிந்தனையை யும் கிளர்ந்தெழச் செய்கின்றன. உடன்போக்கில் சென்ற தலைவி யின் தாய் படும் அவல நிலையினையும் அவள் காட்டும் அன்பினை யும் தெளிந்த அறிவினையும் இப்பாடல்களில் காணலாம். இப் 75. ஐங். 361, 76. ഞു:-(371-400).