பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/578

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 அகத்திணைக் கொள்கைகள் பெறுவர். தலைவனின் பெற்றோரைப்பற்றியும் அவளது காத லொழுக்கத்தைக் குறித்து அன்னவர் கொள்ளும் கருத்து யாது என்பது பற்றியும் புலவர் பேசுவதில்லை. நினைத்தொறும் கலிழும் இடும்பை எய்துக வெஞ்சுரம் என்மகள் உய்த்த வம்பமை வல்வில் விடலை தாயே (373) என்று கவிஞர் தலைவனது தாய்மேல் தலைவியின் தாய்க்குச் சினம் உண்டு என்று வெளிப்படுத்துவர். அவள் இத்தகைய மகனை ஈன்றதனாலன்றோ என்மகள் இன்று கடுஞ்சுர வழியில் செல்ல நேர்ந்தது’ என்று தலைவியின் தாய் வளைத்துத் தொடுத்து வாயாடுவதைப் பாடலில் காண்க. மேற்குறிப்பிட்ட முப்பது பாடல் களிலும் மகள் உடன் போக்குத்துறையில் வைத்துத் தாயர்தம் (நற்றாய், செவிலி) எண்ணவோட்டங்களைப் பல்வேறு வகையில் ஒதலாந்தையார் புனைந்து காட்டுவதைக் கண்டு மகிழலாம். (x), பாலைபாடிய பெருங்கடுங்கோ இவர் சேரமான் மரபின்வழி வந்தவர். பெருங்கடுங்கோ என்பது இவரது இயற்பெயர். பாலைத்திணை ஒன்றையே பாடி யவர். அதனை மிகவும் சிறப்பித்துப் பாடும் ஆற்றலுடையவர். இக் காரணம்பற்றியே இவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்று சிறப்புப் பெயரையும் பெற்றார். இவர் கொடையிலும், வீரத்தி அலும், தமிழ்ப் புலமையிலும் சிறந்த செந்தமிழ்ப் புரவலர். இவர் பாடியனவாகக் கிடைத்துள்ள 67 பாடல்களில் கலித்தொகையில் 35ம் (பாலைக்கலி முழுதும்), குறுந்தொகையில் 13ம் (16, 37, 124, 135, 137, 209, 231, 262, 283,398), நற்றிணையில் 10ம் (9,48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391), அகநானூற்றில் 12ம் (5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 337, 379) உள்ளன. பாலைப் புலவன் களவில் உடன் போக்குத் துறையை மிகவும் விரும்பிப் பாடுவான். இங்குத் தலைவனது உள்ளப் புனைவுக்கும் இலக்கியப் புனைவுக்கும் புலமை விளையாட்டிற்கும் அதிக இடம் உண்டு. ஆயினும் பெருங்கடுங்கோ, பாலைக் கலியில் களவுத்