பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/582

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

566 அகத்திணைக் கொள்கைகள் பொருளைக் கொண்டு இல்லறம் செய்வதைச் சிறுமையாகக் கருது கின்றான்; இது தமிழர்தம் தலையாய கொள்கை என்பதை அவ்ன் அறிந்தவன். உள்ளது சிதைப்போர் உளரெனப் படர்அர்: (குறுந் 283), 'உள்ளாங்கு உவத்தல் செல்லார்’ (அகம். 111) வினையே ஆடவர்க்குயிரே” (குறுந். 135) என்பன அவனது பெரு மித எண்ணங்களைக் காட்டுபவை. எனவே, தலைவனது பொருள் வேட்கை குறை கூறும் தன்மைய தன்று. பொருள் இல்லாக் கணவனை இல்லாளும் வேண்டாளன்றோ? அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும் பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும் பொருளின் ஆகும் புனையிழை என்றுநம் இருளேர் ஐம்பால் நீவி யோரே நோய்நாம் உழக்குவ மாயினும் தாம்தம் செய்வினை முடிக்க தோழி," (அறன் கடை - பாவம், பிறன்கடை - பிறர்பால்; இருள்ஏர் இருண்டர் *இரந்தார்க்கு ஈதலும், பிறர்பால் சென்று இரவாமையும் பொருளினால்தான் ஆகும் என்று கருதிய தலைவர் தனது பிரிவால் நாம் நோயுழப்போம் ஆயினும் பொருளீட்டும் வினையினை முடித்து வருவாராக என்று கூறுகின்றாள் தலைவி. இதில் தலைவனது அறவுணர்வு, மானவுணர்வு, பொருளுணர்வு எல்லாம் காதலுணர்ச்சியினும் மிக்கோடுவதைக் காண்கின்றோம். தலைவிக்கு இது மகிழ்ச்சி தரவில்லை என்பதும் பெறப்படுகின்றது. தலைவனது பொருள் வேட்கையும் தலைவியின் காம வேட்கையும் முரண்பட்டனபோல் தோன்றினும் முடிவில் நல்வாழ்வுக்கு அரண் செய்கின்றன. . காழ்விரி கவையாரம் மீவரும் இளமுலை போழ்திடைப் படாமல் முயங்கியும் அமையாரென் தாழ்கதுப் பணிகுவர் காதலர்; மற்றவர் சூழ்வதை எவன்கொல் அறியேன் என்னும்' {கதுப்பு-கூந்தல்) - இக் கலித்தாழிசையில் குறிப்பிடப் பெறும் தலைவன் தலைவியின் காதலை நன்கு உணர்ந்தவன். இளைய முலையை ஒருபோதும் 80. ബ്രൂ.-155 81. கலி-4