பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/594

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578 அகத்திணைக் கொள்கைகள் பொருந்தின; கழல் - திருவடிகள், உற்ற அடைந் திருக்கும்.) 'தவறுதலான செயல்களைச் செய்யாமல் எம்பெருமானின் திருவடிகளை வாழ்த்வதுதாகின்ற பரிகார முறைமையை அநுட் டித்தால் இவளுடைய நோய் தீரும்' என்கின்றாள். காண்மின் என்றது ‘கேண்மின் என்ற பொருளில் வந்ததாகவும் கொள்ள லாம். நீர் - மறந்தும் புறந்தொழாத குடியில் வந்தவர்களாகிய நீங்கள் என்றபடி. எதுவாயினும் செய்து என்பதனால் "வாயால் அதனைச் சொல்லுவதற்கும் கூசுகின்றாள். தோளினண மேலும் நன்மார் பின் மேலும்...புனைந்த தண்ணந்துழாயுடையம் மானது’’’’ திருவடிகளை நினைந்து 'உன் சேவடி செவ்வி திருக்காப்பு' என்று பல்லாண்டு பாடுமளவே போதும் என் கின்றாள். 12. டிெ 1, 9: 7. 13 பெரியாழ். திரு. காப்பு.