பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/630

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

614 அகத்திணைக் கொள்கைகள் காவியங் கைபுனைந் தீர்!விடுத் தீர்தனம்! கஞ்சமலர்த் தேவியும் போல்நின் lர்!விருப் பேதுங்கள் சிந்ததைக்கே. (தகரம் - மயிர்ச்சாந்து: நாவி - கஸ்துாரி குழல் - கூந்தல்; காவி - காந்தள் மலர்; தனம் - கொங்கை, கஞ்ச மலர்தேவி திருமகள்; விருப்பு - உள்ளக் கிடக்கை) "கண்ணைக் கையால் பொத்தி மூடினர்; மார்பகத்தை மூட மறந்தீர்! திருமகள்போல் நிற்கின்றீர். உங்கள் உள்ளக் கிடக்கை தான் என்ன? என வினவுகின்றான் காதலன் (தளவாய் இரகு நாதன் பாட்டுடைத் தலைவன்) நானுத்துற வுாைத்தல்: தோழியால் தலைவி களவொழுக் கத்திற்குக் கிட்டுதற்கு அரியள் என்று மறுத்து அகற்றப்பெற்று ஆற்றாணாய தலைமகன் தோழிக்குத் தன் நாண் துறவு உரைத் தலும், அறத்தொடு நிற்பிக்கலுற்ற தலைமகள் தன் நாண் துற வுரைத்தலுரமாகும். நாண் துறவுரைத்தல்-மடன்மாவேறுவேன் என்றாற்போன்று நாணைத் துறந்தமை தோன்றும் பேச்சுகளைப் பேசுதல். தோழி அறத்தொடு நிற்பதாகக் கூறுவதும் இதுவே யாகும். எ-டு: குறள் 1131. நொதுமலர் வரைவு (பக் 134-141) பாங்கி மதியுடன்பாடு பக் (80-87) பாலனைப் பழித்தல்: தான் பெற்ற பிள்ளையை இகழ்ந்து பேசுதல் என்பது இதன் பொருள். பிள்ளைப் பேறு காரணமாகத் தன்னிடம் இன்பம் துய்க்க முடியாமல் காதலன் தன்னை விட்டு நீங்கினானாக, அது காரணத்தால் பிள்ளையை நோக்கிக் கூறும் தாயின் கூற்றே பாலனைப்பழித்தல் துறையாகும். அரும்பால கா! முனம் பூமணம் சொற்பொருள், ஆகம்.உயிர், கரும்பாம் சுவை, எள்ளும் எண்ணெயும் போலொத்த காதலரைப் பெரும்பாலில் நல்லன்னம் கங்கா சலத்தைப் பிரிப்பது போல் சுரும்பாம் புலவர் யமன் ஆலை செக்கெனத் தோன்றினையே." 1. தனிப்பாடல் திரட்டு - முதற்பகுதி - செய். 44