பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/636

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

620 அகத்திணைக் கொள்கைகள் குரிய முயற்சிகள். நடைபெறுகின்றன; நீ கவலற்க’ என்று கூறுவது இத்துறையின் பொருளாகும். இத்துறை பல்வேறு வகையாக அமைக்கப்பெறும் எ-டு; குறுந், 51, 297, 351, 361. வரை விடைவைத்துப் பொருள்வயிற் பிரிதல்: களவுத் தலைவன் திருமணமாகிய சடங்கை இடையே வைத்துக்கொண்டு அதற்கு வேண்டிய பொருளைத் தேடப் பிரிதலாம் இத்துறை. இங்குத் தலைவன் வறியனோ என்ற ஐயம் எழக் காரணம் உண்டு; முன்னோர் தேடி வைத்த பொருள் மிகுதியாக இருப்பினும் அதனை நுகர்வோன சிறியோனென்றும் முயற்சியற்ற சோம்பன் என்றும் இகழப்படுவனாதலாலும், தான் முயன்று தேடிய பொருளை நுகர்தலே உத்தமமாதலாலும் பொருள் தேடப் பிரிவன் என்க. இதுவே பிரிதற்கு அடிப்படைக் காரணம். வரை பொருட் பிரிதல் என்ற தலைப்பில் திருக்கோவையாரில் பல பாடல்கள் உள்ளன. இத்துறைப் பாடல்கள் கற்பனை வளம் செறிந்து பல்வேறு விதமாக அமையும். எ டு: குறுந் 143, 236, 237, 397; குறள் 1149; திருக்கோவை. 267, 268. வன்புறை : வன்புறை என்பது வற்புறுத்தல் எனப் பொருள் படும். இத்துறையில் நம்பி அகப்பொருள் பல கிளவிகளைப் பேசும். எ-டு; குறுந் 13, 285, 300, 387. வாயில் தேர்தல்: வாயில்-துது; நேர்தல்-உடன்படுதல். தலைவியே தலைவன் விட்ட தூதிற்கு உடன்படுவாள். களவுக் காலத்தில் தோழி தலைவன் வேண்டுகோட்கு இசைவதில்லை. காமம் காழ்க்கொண்ட இளைய நெஞ்சங்கட்கு எண்ணிப்பார்க்கும் அறிவு சில நாளைக்குத் தோன்றாது. இருவர் செய்கையைத் தோழிதான் அறிவு நிலையில் நின்று நாடுவாள். இவள் போக்கு திருமணத்தையே நாடி நிற்கும். தலைவன் தலைவியைச் சந்திப் பதில் கட்டுப்பாடுடன் செயற்படுவாள். அடிக்கடி வாயில் நேர்வ தில்லை. கற்பு வாழ்க்கையிலும் பரத்தையிற் பிரிந்து திரும்பும் தலைவனுக்கு தலைவியின் குறிப்பறிந்து வாயில் நேர்தல் உண்டு. ஆகவே, தோழிக் கூட்டத்தில் வாயில் நேர்தல் பாடல்கள் குறை வாகவே இருக்கும். எ-டு; குறுந், 10, 33, 45, 258; அகம்-96இன் விளக்கம்; அகம்-176. . வாயில் மறுத்தல்: களவுக் காலத்தில் பெரும்பான்மை யான சந்தர்ப்பங்களில் தோழி வாயில் மறுப்பாள். கற்புக் காலத்