பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-8 இயற்கைப் புணர்ச்சி அன்பின் ஐந்திணைக்குரியதாய காதல் உணர்ச்சிதான் இன்பத்திற்கு அடிப்படையாக இருப்பது. இத்தகைய உணர்ச் சியைச் சிறந்த முறையில் படைத்துக் காட்டும் இன்ப வாழ்வில் முதன் முதலாக நடைபெறுவது இயற்கைப் புணர்ச்சி, அஃதாவது தல்ைவனும் தலைவியும் ஊழ்வலியால் ஒருவரை யொருவர் கண்டு காதல் கொள்வது. இதனை இலக்கண நூல்கள் எதிர்ப்பாடு' என்று குறிப்பிடும். இந்த இயற்கைப் புணர்ச்சியை 'தெய்வப் புணர்ச்சி என்றும் முன்னுறு புணர்ச்சி என்றும் இலக்கண ஆசிரியர்கள் குறிப்பிடுவர். இவையெல்லாம் காரணப் பெயர்கள். புலவரால் கூறப்பெற்ற இயல்பினால் புணர்ந்தாராதலானும், கந்தர்வ வழக்கத்தோடு ஒத்த இயல்பினால் புணர்ந்தாராதலானும் இஃது இயற்கைப் புணர்ச்சி எனப்பட்டது. இருவரும் த்ெய்வத் தன்மையால் புணர்ந்ததாலும், முயற்சியும் உளப்பாடும் இன்றிப் புணர்ந்ததாலும் தெய்வப் புணர்ச்சி' என்று கூறப்பட்டது. இவள் நலம் இவனால் முன்னுற எய்தப் பெற்றமையாலும், இவன் நலம் இவனால் முன்னுற எய்தப் பட்டமையாலும் முன்னுறு புணர்ச்சி' என்று குறியீடு செய்யப்பட்டது. இந்த இயற்கைப் புணர்ச்சியை இலக்கண நூலார் காட்சி, ஐயம், தெளிதல், தேறல் என்று நான்கு நிலைகளில் நடை பெறுவதாகக் கூறுவர். * தலைவனும் தலைவியும் ஊழ்வலியால் ஒன்றுபட்ட உறவினை விளக்கும் ஒன்றே வேறே" என்னும் நூற்பாவிற்கு தொல்காப்பி யத்தின் முதல் உரையாசிரியராகிய இளம் பூரணர் தரும் விளக்கம் மிகவும் பொருத்தமுடையதாகும்; அது நேரிய உரையுமாகும். பாலதாணையின். ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப என்பதன் உரை "ஒருவரை யொருவர் கண்டுழியெல்லாம் புணர்ச்சி 1. களவியல்-2