பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடந்தலைப்பாடு 63 கண்டோர் தண்டா நலத்தை தெண்டிரைப் பெருங்கடல் பரப்பின் அமர்ந்துறை அணங்கோ இருங்கழி மருங்கு நிலைபெற் றனையோ சொல்லினி மடந்தை.'" இழை - அணிகலன்; ஒரை - பாவை: வள்இதழ் - பெரிய இதழ்; தொடலை - மாலை, கானல் - கடற் கரைச் சோலை; ஒருசிறை - ஒருபக்கம்: தண்டா - கெடாத; திரை - அலை.) என்ற பாடலில் காதல் மொழி பேசுவதைக் காண்க. அவளை அழகு தெய்வமாகவே தொழுகின்றதையும் காண்க. ஐங்குறு நூற்றில் ஒரு நிகழ்ச்சி ; இதுவும் நெய்தல் திணை பற்றியதே. 'இலங்குவளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி முகம்புதை கதுப்பின்ர் இறைஞ்சிநின்றோளே புலம்புகொள் மாலை மறைய நலங்கே ழாக நல்குவன் எனக்கே." (தெளிர்ப்ப-ஒலிப்ப; அலவன்-நண்டு; ஆட்டி அலைத்து ஒட்டி, கதுப்பு-கூந்தல்; புலம்பு-தனிமைத் துயரம்: நலம்-இன்பம்; ஆகம்-மார்பு) தலைநாள் புணர்ந்த இடத்தே இடந்தலைப்படும் தலைவன் தன்னுள்ளே மகிழ்ந்து கூறியதாகும் இது. கடற்கரையில் மணலைத் துளைத்து உறையும் நண்டுகள் காலால் மணலைக் கிளைத்தவுடன் வெருவிக் கடல் நீரில் புக விரையும். அங்ஙனம் அஞ்சி ஒடும் நண்டுகளை மேலும் அச்சுறுத்தற் பொருட்டுத் தன் வளையலை ஒலித்து விளையாடுகின்றாள் நெய்தல்நிலத் தலைவி. ஆயினும், அவள் அடிக்கடித் தலைவன் வருகையை எதிர்நோக்கு கின்றாள். தலைவனைத் தொலைவில் கண்டதும் நாணித் தலை குனிந்து தன் முகத்தைக் தன் அடர்ந்த கூந்தலில் மறைத்துக் கொள்ளுகின்றாள். இதனைக் கண்ணுறும் தலைவன் அவளுடைய நாணுடைமையும், அவள் நிற்கின்ற நிலையின் தோற்றத்தையும் கண்டு மகிழும் நிலையில் மாலைப் பொழுது மறைந்ததும் அவள் முயக்கம் தனக்குக் கிடைக்கும் என்று வாயூறி நிற்கின்றான். நற்றிணையில் மேலும் ஒரு பாடல்: 10. நற்-155, 11, ஐங்குறு-197