பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அகத்தினைக் கொள்கைகள் (புணர்ந்த பின்றை-பாங்கன் மூலமாகவும், இடைந்தலைப் பாட்டாலும் கூட்டம் நிகழ்ந்த பிறகு பணிந்த மொழி - இழிந்த சொற்கள்; தோழிதேஎத்து - தோழி மாட்டு இரத்தல் - குறையுடையார் செய்யும் செய்கை, குறை யுறுதல் - பசந்து ஒழுகுதல்) என்று விதி செய்து காட்டுவர் இறையனார் களவியலுரையாசிரியர். தலைவியின் ஆருயிர்த்தோழியை எங்ங்ணம் இனம் காண்டது. என்பதனை உரையாசிரியர் இங்ஙனம் விளக்குவர்: 'இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர்த் தன்னை அவள் காணாமைத் தான் அவளைக் காண்பதோர் அணிமைக்கண் நின்றானாக, மற்றையா ரெல்லாம் தலைமகட்குச் செய்யும் வழிபாடும், இவள் விசேடத் தாற் செய்யும் வழிபாடும், எல்லார்க்கும் தலைமகள் அருளிச் செய்யும் அருளிச் செய்கையும் இவட்கு விசேடத்தாற் செய்யும் அருளிச் செய்கையும் கண்டமையான், 'இவளாம் இவட்குச் சிறந்தாள்; இதுவும் எனக்கோர் சார்பு என்பதனை உணர்ந் தான். உணர்ந்தமையான், அவளுழையே செல்லும் என்பது. அஃதேயெனின், அவளுழைச் செல்கின்ற ஆயங்கள் ஐயுறாவோ எனின், எங்ஙனம் ஐயுறும், தழையும் கண்ணியும் கோடற் பொருட்டாக வேறோரிடத்துத் தனியளாய் நின்ற நிலைமைக் கண் செல்லும் என்பது. அவள் இண்ணனம் தனியளாய் நிற்பது அறிந்து செல்லுமோ எனின், செல்லான்; விதியே கொண்டுசென்று தலைப்படுவிக்கும் என்பது.' குறுந்தொகைப் புலவர் ஆருயிர்த் தலைவியை இனங் காண்டலை இங்ங்ணம் புலப்படுத்துவர்: ஒருநாள் தோழியும் தலை வியும் நீராடலைக் கண்ணுறும் தலைவன் அவர்தம் கடுநட் பதனைத் தெளிகின்றான். தெப்பத்தின் தலைப்பகுதியைத் தோழி பற்றினால், தலைவி அப்பகுதியையே பற்றுகின்றாள்! அவள் அதன் கடைப்பகுதியைக் கைக்கொண்டால், தானும் அப் பகுதியையே பிடித்துக் கொள்ளுகின்றாள். தோழி தெப்பத்தைக் கைசோரவிட்டு நீரோடு மூழ்கிச் சென்றால் இவளும் அங்ஙனமே மூழ்கிச் செல்வள் போலும்' எனத் தன் கண் சான்றாகத் தலைவன் கண்டுகொள்வதாகக் காட்டுவர். தோழி தலைவியை விட்டு நீங்காத ஓர் இடையூறு என்றும், தோழியின் கேண்மையை அடைந்தாலன்றித் தலைவியின் தோளைப் பற்றுதல் அரிது என்றும் இவன் அறிகின்றான். இறை. கள. 5 (உரை) 9. குறுந் 222