இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அகத்திய முனிவர்.
'கொற்றவர்க்கும், உண்மையான கோ தில்ஞான சரிதராம் நற்றவர்க்கும், ஒன்றுசாதி; நன்மைதீமை இல்லையால்.' (பாரதம்)
பிறப்பு நிலையைக்குறித்து எவரையும் பிழைபடப் பேசா திருத்தற்பொருட்டுத் துரியோதனன், மேலே சுட்டிக்காட்டியுள்ளாரை யுய்த்து நோக்குக. அடிகள் என்றது கிருபரை. அவர் பிறப்பு நாணல் என்னும் புற்புதரிலிருந்து தோன்றிய தென்ப. பிறப்பில் தாழ்ந்தவன் என்று கன்னனை இழித்துப்பேசிய நீ உன் பிறப்பினைச் சிறிதும் எண்ணி நோக்கவில்லையே! என்று உம்மை கொடுத்து மன்னன் அவரை இடித்துக்கூறியிருத்தல் காண்க. தம் முதுகைத் தடவிப் பாராமலே பலர் இவ்வாறு தலைதெரியாமல் புலையாடுகின்றனர்; ஒத்த பிறப்பினை யுடைய மக்களாகிய நாமெல்லோரும் ஒரே இறைவனுடைய பிள்ளைகளே என்னும் உண்மையான உணர்வில்லாமல் தாம் ஒரு நலமு மிலராயிருந்தும் குலநலம் பேசிச் சிலர் இழிந்தொழிதல் மிக இரங்கத்தக்கதாம் என எதிர்ந்து சினந்து இங்ஙனம் அவன் சொல்லாடியபோது எல்லாரும் மகிழ்ந்தார். பொல்லாதவனா யிருந்தும் இவ்வளவு நல்ல தன்மைகளைப் போதித்தானே யென்று புகழ் ந்தார். தனக்கு இதமாக உரைத்திருந்தாலும் உலகம் உணர்ந்தொழுகும்படியான உறுதி யுண்மைகளை எவ்வளவு அழகாக இதில் அவன் உணர்த்தியுள்ளான் என்று முனிவரும் வியந்தார். இங்ஙனம் குலங்குத்திப் பேசுவாரது புலங்கெட்ட புன்மையை நோக்கித்தான் 'கல்லா ஒருவன் குலநலம்பேசுதல் நெல்லினுட்பிறந்த பதராகும்மே” என்று பின்னொரு மன்னனும் பேசி நிருத்தினான். ஆன்றோர்கள் தோன்றிய நிலையினை யூன்றி நோக்காது அவர்தம் சான்றா ண்மைகளையே சித்தித்து வழிபடல்வேண்டும். ஒரு முனி