இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பிறப்பு
இவற்றை நுணுகி நோக்குமாறு விழைந்து ஊக்கியெழின் மலைவும் குலைவும் பல மேனோக்கி எழுவனவாம்.
'முனிமூலம் காண்டற்கு மூண்டுநீ முயன்றுழலல் தனிமூலம் அறிதற்குத் தருக்குதல்போல் சலமேகாண்; துனிமூலம் அறுமாறு சொற்றஅவர் நெறிநின்று இனிமூலம் உறாவகைநீ இசைந்தொழுகல் இன்பாமே'
என்பதும் ஈண்டு எண்ணத் தக்கது. இவை யாவும் உண்மையே யாயினும் ஒருவனது ஏற்றத்தைக் கண்ட போது அவனுடைய தோற்றத்தையும் காண விரும்புவது யாவர்க்கும் இயல்பாகும். ஆதலால் இவரது தோற்ற இயல் பினை யீண்டுச் சிறிது துருவியறிவோம். இவர் தோன்றி யதைக் குறித்துத் தமக்குத் தோன்றியவாறே பலரும் பல வாறு கூறுகின்றனர். எட்டியும் சுட்டியும் அறிய லாகாத படி பல்லாயிர ஆண்டுகட்கு முன்னரே இவர் தோன்றியுள் ளாராதலால் இவரது பிறப்பின் வரலாறு சரித்திரக் காட்சி யைக் கடந்து நிற்கின்றது. அதனால் இவர் வரலாற்று முறையில் பல பிளவுகள் காணப்படுகின்றன. ஆயினும் பெரும்பான்மையும் சிறந்ததாகத் தெளிந்தது இதனடியில் வருகின்றது.
தோற்றம்
ஆதியூழியில் அயன் ஒரு வேள்வி செய்தான். தன் படைப்பிலுள்ள பல்லுயிரும் நல்லறங்களும் எங்கும் நன்கு நடைபெற்றுத் தன் பதம் என்றும் நின்று நிலவும் படி அதனை அவன் நினைந்து புரிந்தான். அதில் மந்திர முறை