பக்கம்:அகத்திய முனிவர்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                              பிறப்பு


    அவற்றுட் சிலவற்றை வேண்டிய அளவு ஈண்டு விளக்கிக் காட்டுதும்.
    அகம் என்னும் சொல் மனம், மனை, மலை, இடம் முதலிய பலவகைப் பொருள்களையு முணர்த்திவரும்.
    'மனமும் உள்ளும் மனையும் பாவமும்
     புவியும் மரப்பொதுப் பெயரும் அகமே' (பிங்கலந்தை)
    'அகம் மனம் மனையே பாவம் அகலிடம் உள்ளுமாமே'

என்பது நிகண்டு. இதனை அடியுறையாகக் கொண்டு அதற்குக் காரணம் காணலாகும்.

    நான் என்னும் அகத்தைப் போக்கிநின்றவ ராதலால் இவர்க்கு அகத்தியர் எனப் பெயர் வந்ததெனவும்,
    அகமாய் நின்ற விந்தமலையின் அகத்தை அடக்கின மையால் அப்பெயரை இவர் அடைந்தார் எனவும்,
    அகம் என்னும் மனத்தை அடக்கினமையால் அப்பெயர் இவர்க்குச் சார்ந்ததெனவும்,
    அகமாகிய பாவத்தைப் போக்கினமையால் அது போந்தது எனவும்,
    அகமாகிய இவ் அகலிடத்தை நிலைபெறச் செய்தமை யால் அது நிலைபெற்றதெனவும்,
    அகமாகிய தம் முள்ளத்தில்வைத்து எல்லாரும் போற்றநின்றமையால் அது பொருத்தி நின்ற தெனவும்,
    அகமாகிய மனையிலிருந்து தம் மனைவியோ டமர்ந்து இல்லறத்தை இவர் இனிது நடாத்தினமையால் அஃது இயைந்த தெனவும்,